பாச்சுக்கா....
இப்போது 67 வயதாகும் பாச்சுக்கா என்கிற ஃபாஸில் ஆலப்புழா சனாதன தர்ம கல்லூரியில் படிக்கும் போது மிமிக்ரி செய்பவர். இவரின் கல்லூரித்தோழன் தான் நெடுமுடி வேணு...இருவரும் சேர்ந்து முதன்முதலில் ஒரு மிமிக்ரி குழு உருவாக்கினர். ஃபாஸில் பலகுரலில் பேசுவார்...இருவரும் சினிமாவுக்கு கடுமையானமுயற்சி செய்து ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது...'ஒரு சுந்தரியுடெ கத' என்கிற அப்படத்தில் இருவரும் நடித்தனர். நடித்தனர் என்றால் டயலாக் கிடையாது. ஒரு பாட்டில் இருவரும் தோன்றுவார்கள்..இந்தப்படத்தை எடுத்தவர் தோப்பில் பாஸி. தயாரிப்பு உதயா ஸ்டுடியோ..அப்படி உதயாவில் வேலைக்கு சேர்ந்தார் ஃபாஸில்.
உதயாவிலிருந்து அப்பச்சன் பிரிந்து நவோதயா என்கிற ஸ்டுடியோவை தொடங்கிய போது ஃபாஸில் அதன் தயாரிப்பு பணிகளில் வேலை செய்தார். நவோதயா ஸ்டுடியோ துவங்கி அப்பச்சன் சிவாஜி கணேசன் நடித்த தச்சோளிஅம்பு உட்பட மூன்று பிரம்மாண்ட படங்களை எடுத்தார். நான்காவதாக 'தீக்கடல்' என்கிற பிரம்மாண்ட படத்தை எடுத்த போது ஃபாஸில் அங்கு பணியிலிருந்தார். சிறிய பட்ஜெட் படமாக ஒரு கதையை சொன்னார் ஃபாஸில். கதை பிடித்துப்போக தயாரிப்பு வேலை தொடங்கப்பட்டது. 'மஞ்சில் விரிஞ்ச பூக்கள்' படத்தின் நாயகனாக அப்போது தமிழில் 'ஒரு தலை ராகம்' படத்தில் நடித்திருந்த சங்கர் தேர்ந்தெடுக்கப்பட்டார். நாயகியாக பூர்ணிமா ஜெயராம் செலக்ட்டாக வில்லனாக மோகன் லால் தேர்வு செய்யப்பட்டார். தேர்வில் ஜட்ஜாக ஜிஜோ(மை டியர் குட்டி சாத்தான்), சிபிமலயில், ஃபாஸில் ஆகியோர் லாலை செலக்ட் செய்ய இரண்டாயிரம் ரூபாய் சம்பளத்தில் வில்லனானார் மோகன் லால்.
7 லட்ச ரூபாயில் தயாரிக்கப்பட்ட மஞ்சில் விரிஞ்ச பூக்கள் 200 நாட்களுக்கு மேல் ஓடி ஒரு கோடி வசூலித்தது..புதுமை இயக்குனராக ஃபாஸில் பேசப்பட்டார். அடுத்து உதயா ஸ்டுடியோ அதிபர் இன்றைய நடிகர் குஞ்சாக்கோ போபனின் தந்தை போபன் குஞ்சாக்கோ தயாரிக்க 'தன்யா' என்கிற படத்தை இயக்கினார். பின் ப்ரேம் நஸீர், சங்கரை வைத்து 'மறக்கில்ல ஒரிக்கிலும்' என்கிற படத்தை இயக்க அதுவும் சுமாராகவே போனது. இரண்டு படங்களும் சரியில்லாமல் போக அப்பச்சனே மீண்டும் நான்காவது வாய்ப்பு தந்தார்.
"மாமாட்டிக்குட்டி அம்மக்கு"..படம் புத்திர சோகத்தில் தவிக்கும் தம்பதிகள் ஒரு குழந்தையின்றி தவிக்க வெறொரு குழந்தையை தத்தெடுக்க அந்த குழந்தையின் உண்மையான தாய்க்காக தேடி வர, வரும் பாசப்போராட்டத்தின் கதை. கேரளம் முழுவதும் குடும்பம் குடும்பமாக ரசித்து பார்த்த படம். ஷாலினி என்ற மூன்று வயது குழந்தையை அன்று கேரளக்குடும்பம் தன் வீட்டுக்குழந்தையாக பார்த்தது. சாதாரண டைலராக இருந்த ஷாலினியின் அப்பா பாபுவின் வாழ்க்கையை வசந்தமாக்கிய படம். ஷாலினிக்கு மாநில விருதும் கிடைத்தது..அடுத்து அவர் எடுத்த 'ஈட்டில்லம்" சுமார் தான்..
ஈட்டில்லத்தின் தோல்விக்குப்பின் 'நோக்காத்த தூரத்தே கண்ணும் நட்டு' வெளிவந்து புதிய இதிகாசம் படைத்தது. யாருமே இல்லாத ஒரு பாட்டியை தேடி பேத்தி வர இருவரும் அன்பால் இணையும் போது பேத்தி அதிக நாள் உயிர் வாழ மாட்டார் என்பது எப்படி இருக்கும்?..அனைவரையும் அழ வைத்த படம்...பத்மினி பல வருடங்களுக்குப்பிறகு நடித்ததால் படம் மிகப்பெரிய அந்தஸ்தை பெற்றது...நதியா என்கிற புதிய நாயகியை கேரள மக்கள் விரும்பி ரசிக்கத்தொடங்கினர்.
சூட்டோடு சூடாக 'பூவே பூச்சூடவா' என இப்படத்தை தமிழில் இயக்கி தமிழ் மண்ணில் கால் வைத்தார் ஃபாசில்..செண்டிமெண்ட் செம்மல்களான தமிழர்கள் படத்தைப்பார்த்து உருகி பெரு வெற்றியை அப்படத்துக்கு தந்தனர். ஒரே படத்தில் ஃபாஸில் மிகப்பெரிய டைரக்டர் அந்தஸ்த்துக்கு தமிழகத்தில் வரக்காரணமாயிருந்தது இப்படம்.. பெண்கள் என்றால் பூக்களைப்போல் காட்டிக்கொண்டிருந்த தமிழ் சினிமாவில் நதியாவின் குறும்பும் ஸ்டைலும், ஆண்மைத்தனமான நடிப்பும் புதுமையாக இருந்தன தமிழர்களுக்கு...
அடுத்து கேரளக்கரை திரும்பிய ஃபாஸில் விடலைக்காதலை கையிலெடுத்து உருக்கிய படம் 'எண்ணென்னும் கண்ணேட்டன்ட'...(வருஷம் 16)..படம் புதுமுகங்கள் நடித்ததால் பெரிய வெற்றியை பெறவில்லை. ஆனால் இப்போதும் ரசிக்கக்கூடிய படம் தான். நாமெல்லாம் லீவில் பாட்டி வீட்டுக்கு போனால் அங்கு நம் முறைப்பெண் வந்தால் ஏற்படும் சிறுகிளுகிளுப்பு காலந்த அன்பை பற்றிய படம். ஒரு அழகான காதலை இப்படம் சொன்னது....
அடுத்தப்படத்திற்கு புதுமுகங்களே வேண்டாம் என நினைத்த ஃபாசில் தன் வெற்றி ஃபார்முலா நதியாவை மம்முட்டியோடு இணைத்து தந்த க்ரைம் த்ரில்லர் படம் தான் 'பூவினு புதிய பூந்தென்னல்'....முந்தானை முடிச்சில் பாக்யராஜின் குழந்தையாக நடித்த பேபி சுஜிதா பென்னி என்கிற ஆண் குழந்தையாக, ஊமையாக நடித்து அசத்தி இருந்தார். படம் வெற்றி பெற்றதும் இதை தமிழர்களுக்கு கொடுக்க நினைத்த ஃபாசில் சத்யராஜை வைத்து 'பூவிழி வாசலிலே' என எடுத்தார். பூவிழி வாசலிலே படத்தை எடுக்கும் போது நதியா முன்னணி நடிகையாக மாறி இருந்ததால் கார்த்திகாவை தமிழில் அறிமுகப்படுத்தினார் ஃபாஸில்..அவர் ஸ்பெஷலான குழந்தை செண்டிமெண்ட் இங்கும் வேலை செய்தது. ரகுவரன், பாபு ஆண்டனி தன் நடிப்பால் படத்தை வேறு தளத்திற்கு கொண்டு போனார்கள்...பூவிழி வாசலிலே எக்கால க்ரைம் த்ரில்லர்..இளையராஜாவின் அசத்தல் BGM இதில்...
பின் எடுத்த 'மணிவத்தூரிலேஆயிரம் சிவராத்ரிகள்' சுமார் தான்...இது அவரை பாதித்தது...தமிழ் பக்கம் திரும்பிய அவர் பார்வை தன் மூன்று படங்களை அடுத்தடுத்து தமிழ் திரைக்கு கொடுக்க வைத்தது. மாமாட்டிக்குட்டியம்மக்கு படம் பொம்முக்குட்டி அம்மாவுக்காகவும், எண்ணென்னும் கண்ணேட்டன்ட படம் வருஷம் பதினாறு படமாகவும், தாம் தயாரித்த சிஷ்யர்கள் சித்திக்-லால் இயக்கிய ராம்ஜி ராவ் ஸ்பீக்கிங் படம் அரங்கேற்ற வேளையாகவும் எடுத்தார் ஃபாசில்.
இதில் ஃபாசில் தமிழுக்கேற்றவாறு சண்டைக்காட்சிகளும், பாடல் காட்சிகளும், செண்டிமெண்ட் பிழிதலும் சேர்த்த வருஷம் பதினாறு பெருவெற்றி பெற்றது...வில்லன், கொலை, பதினாறு வருட சிறை, ஃப்ளாஷ்பேக் இவையெல்லாம் தமிழில் ஃபாஸில் சேர்த்தது...
இப்போது இரு மாநில இயக்குனரானதால் இரட்டை மொழிப்படமாக அமலா நடிக்க கற்பூர முல்லை-என்ட சூர்ய புத்ரிக்கு ஒரே நாளில் வளர்ந்தது. நாயகி திரைக்கதையானதால் படம் சுமார் தான்..
பின் மம்முட்டியோடு பப்பயுடெ ஸ்வந்தம் அப்பூஸ், மோகன்லாலோடு மணிச்சித்ர தாழு என இருபடங்களும் தமிழில் கிளிப்பேச்சு கேட்கவா படமும் அடுத்தடுத்து வெளி வந்தது..மணிச்சித்ர தாழ் டிரண்ட் செட்டரானது...அது பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி பெற்றது..சிறப்பான காமெடி, த்ரில்லர், பாடல் காட்சிகள் இதில் இருந்ததால் படு ஹிட். இந்தப்படப்பிடிப்பின் போது கிளிப்பேச்சு கேட்கவா தமிழ்ப்படத்தில் ஃபாஸில் இருந்ததால் மூன்று யூனிட்டாக பிரித்து படப்பிடிப்பு நடந்தது...சிபிமலயில், ப்ரியதர்ஷன், சித்திக்-லால் என்கிறநான்கு ஜாம்பவான்கள் இந்தப்படத்தை இயக்கித்தந்தனர்....இதில் ஷோபனாவுக்கு தேசிய விருது கிடைத்தது. உடனே வினீத், ஷோபனாவை வைத்து எடுத்த 'மானத்தெ வெள்ளித்தேரு'தோல்வியுற்றது..
பின் அவர் எடுத்த 'அனியத்தி பிறாவு' ஷாலினியை நாயகியாக்கியதோடு தனக்கு படம் தந்த போபனின் மகன் குஞ்சாக்கோவை நாயகனாக்கி பெரு வெற்றி பெற்றது. தமிழிலும் அதை 'காதலுக்கு மரியாதை'யாக தந்து வெற்றிபெற்றார். விஜய்யின் திரை வாழ்க்கையை உறுதிப்படுத்திய படம்...
மம்முட்டியையும், மோகன்லாலையும் ஒரு படத்தில் இணைத்து தந்த 'ஹரிகிருஷ்ணன்ஸ்' வெற்றி பெற தன் மகன் ஃபகத் பாஸிலை களம் இறக்கினார் ஃபாஸில்...'கையெத்தும் தூரத்து'வெற்றியை ஃபகத்துக்கு எட்டாத தூரத்தில் வைத்தது...பின் கண்ணுக்குள் நிலவு தமிழில் தோல்வியடைய மோகன்லாலோடு இணைந்து நயன்தாராவுடன் 'விஸ்மயத்தும்பத்து' படம் சுமார் ரகம்...பின் எடுத்த ஒரு நாள் ஒரு கனவு, கேட் அண்ட் மௌஸ், லைஃப் இஸ் பியூட்டிஃபுல், லிவிங் டுகெதர் படங்களின் தோல்வி அவரை ஓய்வுக்கு தள்ளியது...
2011க்கு பிறகு இயக்குனர வேலையை தொடாத ஃபாஸில் தன் முதல் வேலையான நெடுமுடிவேணுவோடு செய்த நடிப்பின் பக்கம் வந்தார். லாலின் 'லூசிஃபர்' படத்தில் நடித்த ஃபாசில் மேலும் நடிக்க தொடங்கினார்..
எனக்குத்தெரிந்து தமிழ்மக்களின் நாடி துடிப்பை அறிந்து வைத்திருந்த இயக்குனர் ஃபாஸில் மட்டுமே..அதனால் தான் கேரளத்தில் சுமார் வெற்றி பெற்ற எண்ணென்னும் கண்ணெட்டன்ட, பூவினு புதிய பூந்தென்னல் படங்கள் தமிழில் பெரு வெற்றி பெற்றது. இதற்கு அவருக்கு உதவியாக இளையராஜாவும், வசனமெழுதிய இயக்குனர் கோகுல கிருஷ்ணாவும் ஒரு காரணம்...இளையராஜா ஃபாசிலுக்கு அழகழகான பாடல்களை கொடுத்தார். அரங்கேற்றவேளை கேரளத்தில் இரட்டை நாயகன் படத்தில் ஒரு நாயகனை ரேவதியாக்கியது தோல்வியாக அமைந்தது...இடையில் இவர் இயக்கிய கில்லர் என்கிற ஒரே தெலுங்கு படம் நாகார்ஜுன், நக்மா, ஷாம்லி நடிக்க 'ஆதவன்' என இன்ஸ்பிரேஷனில் கதை எடுக்கப்பட்டு வந்தது...மோகன்லால், ஷாலினி, நதியா, பூர்ணிமா பாக்யராஜ், சங்கர், ஃபகத் பாஸில் என நிறைய அறிமுகம் செய்து அவர்கள் வெற்றி பெற்றனர்..குஷ்பு, நக்மாவுக்கு திருப்புமுனை வெற்றிகளை தந்தவர்..இவரது இரண்டாவது மகன் ஃபர்ஹான் பாசிலும் நடிக்க வந்து விட்டார்...
ஃபாஸில் ஸ்பெஷல் என்னவென்றால் பாசம், காதல், ஆக்ஷன், ஃபேமிலி, க்ரைம், காமெடி என எல்லாத்தளங்களையும் தொட்டவர்...அவரது படங்கள் எல்லாமே சிறப்பான அனுபவம்...வாழ்நாளில் நீங்கள் பார்க்க வேண்டிய படங்கள் லிஸ்ட்டில் நிச்சயம் ஃபாஸில் படங்கள்இருக்கும்....
அது தான் ஃபாஸிலின் ஸ்பெஷல்...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக