சனி, 31 அக்டோபர், 2020
திங்கள், 12 அக்டோபர், 2020
நீங்கள் யார்?
👌🏽😊
_*கடன்* இல்லாமல், மாதாமாதம் வரும் சம்பளத்துக்குள் குடும்பம் நடத்தி, இப்போது இருக்கும் வசதிகள் போதுமானது எனும் மன நிறைவுடன் வாழ்ந்தால் நீங்கள் உலகின் மிகப் *பெரிய பணக்காரர்!*_
_*உங்கள்* வாழ்க்கைத்துணை உங்களை நேசித்தால் நீங்கள் உலகின் *கவர்ச்சியான நபர்!*_
_*உங்கள்* பிள்ளைகள் உங்களை ஆதர்சமாக நினைத்தால் நீங்கள் ஒரு *சூப்பர் ஸ்டார்!*_
_*"அந்த* அங்கிள் மாதிரி நீயும் வாழ்க்கையில நல்லா வரணும்" என அண்டை வீட்டுத் தாய்மார்கள் தன் பிள்ளைகளுக்கு அறிவுரை சொன்னால் நீங்கள் ஒரு *சூப்பர் ஹீரோ!*_
_*ஏதாவது* பிரச்னை என்றால் அதைத் தீர்க்க உங்கள் அண்டை அயலார், உற்றார் உறவினர் உங்களை நாடி வந்தால் நீங்கள் ஒரு *தலைவன்!*_
_*உங்களை* நேரில் பார்க்காதவர்களும் உங்களை மதித்தால் நீங்கள் ஒரு *பிரபலம்!*_
_*அழியும்* நிலையில் இருக்கும் ஒருவருக்கு எந்தப் பலனையும் எதிர்பாராமல் உதவி அவரை மீட்டு எடுத்தால் நீங்கள் *கடவுள்!*_
_*இதை* எல்லாம் செய்ய பெரிய அளவில் பணமோ செல்வாக்கோ அவசியமில்லை என்பது மிகப் பெரிய *உண்மை!*_
இறைவன் விரும்புவது
*இறைவன் விரும்புவது என்ன..?.*
குயவன் ஒருவன் பானைகளைச்
செய்து கொண்டிருந்தான்.
அங்கு ஏராளமான பானைகள், குடங்கள்,சட்டிகள்
அடுக்கப்பட்டிருந்தன.
அவன் அருகில் ஓர் ஆடும்
கட்டிப் போடப் பட்டிருந்தது.
அவ்வப்போது
அது 'மே..மே..' என்று
கத்திக் கொண்டிருந்தது.
அங்கே ஒரு வயதான மகான் ஒருவர் மெல்ல நடந்தே அங்கே வந்தார்.
குயவன் பானை செய்வதைப் பார்த்த படியே தரையில் அமர்ந்தார்.
வந்தவருக்கு ஒரு சிறு மண் கலயத்தில் குடிக்கத் தண்ணீர் கொடுத்தான் அந்தக் குயவன்.
அதை வாங்கிக் குடித்த குரு, ....
இந்த ஆட்டை நீ வளர்த்து வருகிறாயா ?
என்று கேட்டார்.
இல்லீங்க சாமி.
இது ஏதோ காட்டாடு.
இந்தப் பக்கமாக வந்தது.
பிடித்துக் கட்டிப் போட்டேன் !
என்றான் குயவன்.
எதற்காக ?
என்று கேட்டார் குரு.
பண்டிகை வரப் போகிறதே !
இறைவனுக்கு பலி
கொடுக்கலாமென்றுதான்....
என இழுத்தான் குயவன்.
பலியா ?
குரு வியப்புடனே வினவினார்.
ஆமாம்சாமி.
தெய்வத்துக்குத் திருவிழா அன்றைக்குப்
பலி கொடுத்தால் விசேஷம்.
தெய்வமும் மகிழ்ந்தே வரம் கொடுக்கும்.
எல்லாமே சுபீட்சமாக இருக்கும்.
இதைக் கேட்ட குரு எழுந்தார்.
தன் கையிலிருந்த குயவன் தண்ணீர் குடிக்க கொடுத்த மண் பானையை ஓங்கித் தரையில் அடித்தார்.
பானை துண்டு துண்டாகச் சிதறியது.
குயவன் திகைத்தே நின்றான்.
துறவியை வெறித்துப் பார்த்தான்.
துறவி,
பின் நிதானமாகத் கீழே குனிந்தார்.
சிதறிய ஓட்டாஞ் சில்லுகளை ஒன்று விடாமல் பொறுக்கி அடுக்கினார்.
பிறகு குயவனிடமே நீட்டினார்.
என்ன சாமி இது ?என்றான் குயவன் கோபமாக.
உனக்குத் தான் பிடிக்குமே அப்பா ?என்றார் குரு.
என்ன சாமி உளறுகிறீர்கள்?
குயவன் குரலில் உஷ்ணம் தெறித்தது.
என்னுடைய பானையை உடைத்து
அடுக்கி என்னிடமே நீட்டுகிறீர்கள்.
இது எனக்குப் பிடிக்கும் என்று வேறு சொல்கிறீர்கள். கேலியா ? கிண்டலா ?
என்னை வம்புக்கு இழுக்கிறீர்களா ?
அல்லது உங்களுக்குப் பைத்தியமா ?
என்றே ஆத்திரப் பட்டான்.
அப்படியெல்லாம் எதுவும் இல்லையப்பா.
உண்மையான அன்புடன் தான்
இதை செய்தேன்.
குரு சிறிதும் பதட்டப்
படாமலே சொன்னார்.
நான் செய்த அந்தப் பானையில் என் கடின உழைப்பு முழுவதும்
அடங்கியிருக்கிறதே !
அதை உடைக்க
நான் எப்படிச் சம்மதிப்பேன் ?
இது எனக்கு பிடிக்கும் என்று யார் உங்களுக்கு சொன்னது ?
சரி,
நல்லது.
ஆண்டவன்
படைத்த ஓர் உயிரை கதறக் கதற வெட்டிக் கொன்று பலியிடலாம் என்று மட்டும் உனக்கு யார் சொன்னது ?
இதை இறைவன் வேறு மகிழ்ந்து ஏற்றுக்
கொண்டு மகிழ்ந்தே வரம் தருவான் என்று நீ எப்படி நம்புகிறாய் ?
எந்தத் தாய் தன் குழந்தை கதறுவதைக்
கேட்டு சகிப்பாள் ?
அல்லது எந்தத் தகப்பன் தன் குழந்தை கொல்லப் படுவதை விரும்புவான்?
குருவிடமிருந்து அடுக்கடுக்காகக் கேள்விகள் பிறந்தன.
குயவன்
நிதானமாக ஆட்டின் கழுத்திலிருந்த கயிற்றை அவிழ்க்கத் தொடங்கினான்.
இறைவனிடம்
என்ன இல்லை ?
உன்னிடம் என்ன உண்டு ?
அவர் எதை கேட்கிறார் ?
எதை நீ கொடுப்பாய் ?
அவன் படைத்த இந்த உலகில் அவனால் படைக்கப்பட்ட நீ அவன் படைத்த பொருட்களை அவனுக்கே படைப்பாயா ?
*இறைவனுக்கு
நான் அதைச் செய்தேன்.
*இதைச் செய்வேன் என்பதும்*
*பதிலுக்கு அவன் அதைச் செய்வான், *இதைச் செய்வான்* *என்பதும் வெறும் ஆத்ம *வஞ்சனையே*
*தூய எண்ணங்களால் மட்டுமே இறைவனை உணர முடியும்*
மனதால் மட்டுமே இறையுணர்வை
எய்த முடியும்.
அன்பெனும் மலர் எடுத்து
அணுதினமும் பூசை செய்.
*நாம் எல்லா ஜீவன்களிடமும் அன்பு செலுத்தி சேர்ந்து வாழ்வதையே*
*இறைவன் எப்போதும்*
*விரும்புகின்றான்..!!*
ஞாயிறு, 27 செப்டம்பர், 2020
புதன், 23 செப்டம்பர், 2020
பெண்
ஒரு #பெண் என்பவள் #கடவுளுக்கு மேல் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.🤱🏻 👼🏻🤱🏻
எங்கோ யாரோ இருவருக்கு மகளாக பிறந்தாள் எனக்கு மனை
வியாக வந்த பின்பு அவளுக்கென்று இருந்த ஆசைகளை கனவுகளை மறந்து விட்டாள் 👩
இப்போது நான் அழுதால் அழுகிறாள்
நான் சிரித்தால் சிரிக்கிறாள்
நான் துடித்தால் துடிக்கிறாள்
எனக்காகவே வாழ்கிறாள்
ருசியாக உணவு சமைத்து தருகிறாள்
ரகசியமாக காதல் செய்கிறாள்
காலையில் நான் எழும்புவதற்கு முன்பு
அவள் எழுந்து விடுகிறாள்
இரவில் வீடு வருவதற்க்கு தாமதம் ஆனால்
நான் வரும் வரை தூங்காமல் விழித்திருக்கிறாள்
மாதவிடாய் வலி அவளை கொல்லும் போதும்
சிரித்துக் கொண்டே என் ஆடைகள் துவைக்கிறாள் வீட்டை சுத்தம் செய்கிறாள்
அன்பாக பேசுகிறாள் அனைத்து
வேலைகளையும் சளைக்காமல் செய்கிறாள்
சில இரவுகளில் கட்டிலில் கலந்து
இனிப்பான இன்பம் தருகிறாள்
ஓர் நாள் கர்ப்பம் ஆகி விட்டேன் என
காதுக்குள் சொல்லி மார்பில் சாய்ந்தால்
பக்குவமாக குழந்தை போல் பார்த்துக் கொண்டேன்
அவசரமாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றேன் ஒரு தாதிப் பெண் என்னையும் உள்ளே வர சென்னாள்.
இப்போது அவள் அருகில் நான் கத்தினால் கதறினால் ஏதேதோ செய்தால் வலியால் அவள் துடிப்பதை பார்த்து என்னால் தாங்க முடியவில்லை.
அழ வேண்டும் என்றும் நான் நினைக்க நினைக்கவில்லை
ஆனால் என்னை அறியாமல் கண்ணீர் வருகிறது
இந்த அன்புக்கு என்ன பெயர் என்று
எனக்கு தெரியவில்லை
சதை கிழிந்து குழந்தை வெளியில் வரும் போது
அவள் அடைந்த வலியை கடவுள்
கூட கவிதையில் சொல்லிவிட முடியாது
பாதி குழந்தை வெளியில் வந்திருகையில்
வலி தாங்க முடியாமல் கைகள் இரண்டையும் எடுத்து கும்பிட்டு அழுதால் எவ்வளவு வலி இருந்தால் அவள் கும்பிட்டு அழுதிருப்பால் என்று நினைக்கும் போது
நான் துடிதுடித்து அவளை இருக அணைத்து கொண்டேன் ஒரு பெரிய சத்தமிட்டு மயங்கி சாய்ந்தால்.❀ஷ•ரு❀
ஒரு சில நிமிடங்களில் குழந்தையை கையில் கொடுத்தார்கள்.
நான் அவள் நெற்றியில் முத்தம் வைத்து
இருக அணைத்து கொண்டேன்
அவள் அனுபவித்த வலி என்பது
நிச்சயமாக மரணத்தின் ஒத்திகை
என்று உணர்ந்தேன் 💫🌹
மரியாதை செய்யுங்கள் எம் இறைவிகளுக்கு
நான் நேசிக்கும் மனைவிக்காகவும்
நான் நேசிக்கும் அம்மாவுக்காகவும்
இந்த உலகிழ் வாழும் பெண்களுக்காகவும்
இந்த வரிகளை சமர்ப்பிக்கிறேன்.
நன்றிகள் கோடி பெண்களே...💓
மகிழ்வித்து மகிழுங்கள் மிக்க மகிழ்ச்சி🍁🍃
வியாழன், 17 செப்டம்பர், 2020
சந்தேகம்
*மனைவிக்கு திடீர் சந்தேகம் வந்தது*
தன்னுடைய கணவனுக்கு
காது கேட்கவில்லையோ என்று?
ஆனால்... இதை கணவணிடம்
நேரடியாகக் கேட்க அவருக்குத் தயக்கம்,
தயக்கம் என்ன...??? *பயம்தான்...*
இந்த விஷயத்தை அவரின் உறவுக்கார டாக்டருக்கு தெளிவாக விளக்கி ஒரு கடிதம் எழுதினார்....
டாக்டரிடம் இருந்து வந்த பதிலில்...
"இருபது அடி தூரத்தில் இருந்து கணவரிடம் ஏதாவது பேசிப் பாருங்கள்,...
கணவரின் காதில் விழவில்லை எனில்....
சற்று நெருங்கி பதினைந்து அடி தூரத்தில் இருந்துப் பேசுங்கள்,
பின் பத்து, ஐந்து இப்படி குறைத்துக் கொண்டே நெருங்கிச் சென்றுப் பேசுங்கள்.
எத்தனை அடி தூரத்தில் இருந்து பேசினால் கணவருக்கு காதுக் கேட்கவில்லை எனத் தெரிந்தால் அதற்கேற்றபடி சிகிச்சை அளிக்கலாம்" என்றிருந்தது.
அதைக் பார்த்தவுடன் மனைவிக்கு ஒரே *குஷி.*
வீட்டு வாசலில் இருந்தபடியே உள்ளிருந்த கணவரிடம்...
இன்று மகனுக்கு பள்ளி கட்டணம் கட்டியச்சா னு? எனக் கேட்டாள்.
பதில் எதுவும் இல்லை...
பின் வீட்டு வரவேற்பறையில் இருந்து அதே கேள்வியைக் கேட்டாள். அதற்கும் பதில் இல்லை,
ஹாலில் இருந்து கேட்டாள்,
சமையலறை வாசலில் இருந்தும் மீண்டும் மீண்டும் அதே கேள்வியைக் கேட்டாள். .
கணவரிடமிருந்து பதிலே இல்லை.
போச்சு *இரண்டு ஸ்பீக்கரும் அவுட்* ஆகிவிட்டதுபோல .
என்று மனதில் கன்ஃபார்ம் செய்து விட்டார்.
கடைசி வாய்ப்பாக கணவனின் காது அருகே சென்றுச் சத்தமாக....
*"இன்னைக்கு பையனுக்கு Fees கட்டியச்சா?"* எனக் கேட்டாள்.
காதில் ஏதோ குண்டு வெடித்தது போல் இருக்கவே அவளின் கணவன் அவளை கோபமாக திரும்பிப் பார்த்து,
”என்டீ இப்படி கத்துற, நீ வாசல் கேட்டிலிருந்து , வரவேற்பறையில் இருந்து,
ஹாலில் இருந்து, சமைலறை வாசலில் இருந்து கேட்க, கேட்க நானும் கட்டியச்சு கட்டிச்சு னு சொல்லிக்கிட்டே இருந்தேனே,
அது உன் காதில் விழவில்லையா?
*காதுல என்ன பஞ்சு மூட்டையா வைச்சிருக்க...?,?* எனப் பொரிந்துத் தள்ளிவிட்டான்...
மனைவி அதிர்ச்சியில் உறைந்துபோய் நின்றாள்.
*தவறு தன்னிடம் தானா?*
*கதையின் நீதி*:-
இப்படித்தான் பலர் பிரச்சனையை நம்மிடம் வைத்துக் கொண்டு...
அது பிறரிடம் இருப்பதாக நினைத்து வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்…
என்ன விசித்திரம்!!!
இந்தப் பதிவு *சிரிக்க மட்டும் அல்ல, சிந்திக்கவும்கூடத்தான்.*..
ஞாயிறு, 13 செப்டம்பர், 2020
எது? எதனால்?கெடும் ?
*எது? எதனால்?கெடும் ?*
01) பாராத பயிரும் கெடும்.
02) பாசத்தினால் பிள்ளை கெடும்.
03) கேளாத கடனும் கெடும்.
04) கேட்கும்போது உறவு கெடும்.
05) தேடாத செல்வம் கெடும்.
06) தெகிட்டினால் விருந்து கெடும்.
07) ஓதாத கல்வி கெடும்.
08) ஒழுக்கமில்லாத வாழ்வு கெடும்.
09) சேராத உறவும் கெடும்.
10) சிற்றின்பன் பெயரும் கெடும்.
11) நாடாத நட்பும் கெடும்.
12) நயமில்லா சொல்லும் கெடும்.
13) கண்டிக்காத பிள்ளை கெடும்.
14) கடன்பட்டால் வாழ்வு கெடும்.
15) பிரிவால் இன்பம் கெடும்.
16) பணத்தால் அமைதி கெடும்.
17) சினமிகுந்தால் அறமும் கெடும்.
18) சிந்திக்காத செயலும் கெடும்.
19) சோம்பினால் வளர்ச்சி கெடும்.
20) சுயமில்லா வேலை கெடும்.
21) மோகித்தால் முறைமை கெடும்.
22) முறையற்ற உறவும் கெடும்.
23) அச்சத்தால் வீரம் கெடும்.
24) அறியாமையால் முடிவு கெடும்.
25) உழுவாத நிலமும் கெடும்.
26)உழைக்காத உடலும் கெடும்.
27) இறைக்காத கிணறும் கெடும்.
28) இயற்கையழிக்கும் நாடும் கெடும்.
29) இல்லாலில்லா வம்சம் கெடும்.
30) இரக்கமில்லா மனிதம் கெடும்.
31) தோகையினால் துறவு கெடும்.
32) துணையில்லா வாழ்வு கெடும்.
33) ஓய்வில்லா முதுமை கெடும்.
34) ஒழுக்கமில்லா பெண்டிர் கெடும்.
35) அளவில்லா ஆசை கெடும்.
36) அச்சப்படும் கோழை கெடும்.
37) இலக்கில்லா பயணம் கெடும்.
38) இச்சையினால் உள்ளம் கெடும்.
39) உண்மையில்லா காதல் கெடும்.
40) உணர்வில்லாத இனமும் கெடும்.
41) செல்வம்போனால் சிறப்பு கெடும்.
42) சொல்பிறழ்ந்தால் பெயரும் கெடும்.
43) தூண்டாத திரியும் கெடும்.
44) தூற்றிப்பேசும் உரையும் கெடும்.
45) காய்க்காத மரமும் கெடும்.
46) காடழிந்தால் மழையும் கெடும்.
47) குறிபிறழ்ந்தால் வேட்டை கெடும்.
48) குற்றம்பார்த்தால் சுற்றம் கெடும்.
49) வசிக்காத வீடும் கெடும்.
50) வறுமைவந்தால் எல்லாம் கெடும்.
51) குளிக்காத மேனி கெடும்.
52) குளிர்ந்துபோனால் உணவு கெடும்.
53) பொய்யான அழகும் கெடும்.
54) பொய்யுரைத்தால் புகழும் கெடும்.
55) துடிப்பில்லா இளமை கெடும்.
56) துவண்டிட்டால் வெற்றி கெடும்.
57) தூங்காத இரவு கெடும்.
58) தூங்கினால் பகலும் கெடும்.
59) கவனமில்லா செயலும் கெடும்.
60) கருத்தில்லா எழுத்தும் கெடும்
தெரிந்து கொண்டீர்களா ?.
கெடாமல் பாதுகாக்க வேண்டியது
அவரவர் பொறுப்பு
வியாழன், 10 செப்டம்பர், 2020
அம்மா
*தாயிற்சிறந்தகோவிலுமில்லை*
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
"அமெரிக்காவில் மிகப்பெரிய பணக்காரர் அவர்..... தன் தாயின் பிறந்தநாளுக்கு பரிசளிக்க ....ஒரு பெரிய கடையின் முன், தன் காரை நிறுத்துகிறார்.
பிரபலமான பூக்கடை அது ,..."
எவ்வளவு விலை சார் இது"
" 250 டாலர்"!!.
" இதைவிட அருமையான 'பூ 'காண்பிக்க முடியுமா?
"வந்தவர் மிகப்பெரிய பணக்காரர் என கடைக்காரருக்கு தெரிகிறது....
" இது "ஆர்கிட்"வகைப் பூ...மிகஅருமையா இருக்கும்.... ஒரு வாரம் வரை வாடாது"
"500 டாலர்"!!
சரி, இதையே , 'பேக் செய்யுங்க...
"உங்களிடம், "கொரியர்" சர்வீஸ் இருக்கா?
கொரியர் சர்வீஸ்'சும், செய்கிறோம் ...அதற்கு ஒரு 100 டாலராகும்.
"வேண்டாம்... இந்த பூங்கொத்து இன்று என் தாயிடம் போய் சேர வேண்டும் இன்று என் தாயின் பிறந்தநாள் கொரியர் சர்வீஸ்' பல காரணங்களுக்காக தாமதமாகலாம் எனக்கு இன்றே போகணும்....
ஒன்று செய்யுங்க.....' ஒரு காரும் டிரைவரும், ஏற்பாடு செய்து ...இந்த பூங்கொத்தை,இன்றே என் தாயிடம் ,இந்த அட்ரஸ் சில் சேர்த்திடுங்க.
"ஓகே சார், இப்பவே ஏற்பாடு செய்கிறேன் இன்றே போய் சேர்ந்துவிடும்.... அதற்கும் சேர்த்து 500 டாலர்.
" நோ ப்ராப்ளம் பணத்தையும், அம்மாவின்,வீட்டு அட்ரஸ் கொடுத்து விட்டு நகர்ந்தார் அந்த பணக்காரர். மனம் முழுக்க மகிழ்ச்சி, தன் பிஸி நேரத்திலும், தன் அம்மாவின் பிறந்தநாளை மறக்காமல் ,பூங்கொத்து அனுப்பி விடுகிறோம் என சந்தோஷத்துடன் காரை காரில் ஏறப் போக.....
ஒரு சின்ன சிறுமி ஒரு ஐந்து ஆறு வயது இருக்கும் அழுதபடி இருக்கிறாள்....." குழந்தை ஏன் அழறே?
" அங்கிள் , எனக்கு ஒரு டாலர் பணம் தர முடியுமா ?
ஓகே, ஒரு டாலர் தானே தரேன் எதற்குப் பணம்? ஏன் அழுகிறாய்? ஏதாவது தொலைத்து விட்டாயா?
'நோ அங்கிள் " எங்க அம்மாவின் பிறந்தநாள் அங்கிள் இன்று ...
நான் வருடா,வருடம் அம்மாவின் பர்த்டே க்கு, அம்மாவுக்கு பிடித்த ஒரு ரோஜா பூ வாங்கித் தருவேன் என்று அம்மாவின் பிறந்தநாள்...என்னிடம்
பணம் இல்லை......நீங்க ஒரு டாலர்
கொடுத்தால் ஒரு ரோஜா பூ வாங்கி அம்மாவிற்கு கொடுப்பேன்.
அம்மா எனக்காக வெயிட் டிங்'.... ப்ளீஸ் அங்கிள் ஒரு டாலர் தரமுடியுமா?
" பாவம் ஏழை பெண் அவள்....." ஒரு டாலர் என்னமா!.... 10 டாலர் தரேன் எடுத்துக்கோ ...
"வேண்டாம் அங்கிள், ஒரே ஒரு டாலர் போதும்.... என ஒரு டாலரை மட்டும் எடுத்துக்கொண்டு 'சிட்'டாக பறந்தாள் அச் சிறுமி.
ஏதோ சாக்லேட் வாங்க தான் அப்படி ஒரு டாலர் கேட்கிறாளோ? என நினைத்து அந்த பணக்காரர் மெதுவாக காரை அவள் செல்லும் இடம் நோக்கிச் செலுத்த சொன்னார் டிரைவரிடம்.
.ஒரு சின்ன பூக்கடையில் ஒரு டாலர் கொடுத்து ஒரு சிகப்பு ரோஜா பூ வாங்க .....கடைக்காரர் அதை அழகாக பேக் செய்து கொடுக்கிறார்.
மிகுந்த சந்தோஷத்துடன், அச்சிறுமி' பூ வை எடுத்தபடி ஓட ....அச் சிறுமி எங்கு போகிறாள்?... எந்த வீடு?.. தாய் யார்? என அறிய டிரைவரிடம் காரை சிறுமியின் பின்னால் போக சொல்லுகிறார்.
சிறுமி, பல தெருக்களைக் கடந்து ஓடுகிறாள்.... அவளுக்கு தெரியாமல் அவளைப் பின் தொடர்கிறது கார்..
பல வளைவுகளை,தெருக்களை கடந்து,ஓடும் அவள்......போய் நிற்கும் இடம் சமாதி........ ஒரு கல்லறையின் அருகில் போய் நின்று, ரோஜா பூவை வைத்து.... "அம்மா, 'ஹாப்பி பர்த்டே' உனக்கு மிகப் பிடித்த ரோஜா பூ நான் வாங்கிட்டு வந்துட்டேன் மா ....என கூறி அம்மாவின் கல்லறையில் வணங்கி.... முத்தமிட ,....பார்த்துக்கொண்டிருந்த பணக்காரர்களில் கரகரவென நீர் சுரந்தது .
"சார் , 'மீட்டிங்கிற்கு, நேரமாச்சு... டிரைவர் அவசரப்படுத்த, கண்ணை துடைத்த படி அவசர அவசரமாக காரில் ஏறி, கடைக்கு போய், தான் வாங்கி வைத்த பூங்கொத்ததை, எடுத்துக்கொண்டு வண்டியை,வீட்டிற்கு போக சொன்னார்.
"பெரிய கார் ,தன் வீட்டின் முன் நிற்பதை பார்த்த .....92 வயதுடைய தாய் கண்ணை சுருக்கி," யாரது ?என பார்க்க ....
"அம்மா என அழைத்தபடி பூங்கொத்தை கொடுத்து.... "பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா "என
காலில் விழுந்த, மகனை ஆரத் தழுவிய தாய்......
" உனக்கு இருக்கும் எக்கச்சக்க வேலையில், ஏம்பா நீ வந்தே!!!!
" அம்மா ,"அன்பை எப்படி வெளிப் படுத்துவது, என ஒரு சிறுமியிடம் நான் கற்றேன்.
" உயிரோடு இல்லாத தன் தாய்க்கு அச் சிறுமி எப்படி பூங்கொத்தை கொடுத்து அன்பை வெளிப்படுத்தினாள்.....நெகிழ்ந்து விட்டேன்... ஆனால் நான்?...அச் சிறுமியின் மூலமாக அன்பை, எப்படி வெளிப் படுத்துவது என அறிந்தேன்
"உயிரோடு இருக்கும், என் தாய்க்கு நேரில் வந்து வாழ்த்து,பார்த்து, வாழ்த்து பெறுவதை விட பெரும் பாக்கியம் எனக்கு ஏது?...மகனை கட்டி அணைத்து முத்தமிட்டாள் அத் தாய்.
" தாய், தந்தை இருப்பவர்கள்.....அவர்களுக்கு கொடுக்கும் மரியாதையை, அன்பை, வாரி வழங்க தவறாதீர்கள்....அன்பை வெளிப்படுத்த மறக்காதீர்கள்.
உங்களின்,உங்கள் பண்பின்,அன்பை நினைத்து,மகிழ்ந்து.... ஒரு சொட்டு கண்ணீர் உங்கள் தாயின் கண்களில் இருந்து வந்தால்.....உங்கள் வாழ்க்கை சிறக்கும்.....
எல்லா தாய்க்கும் தன் பிள்ளைகளின் மகிழ்ச்சி,உயர்வு என்றும் சந்தோஷம்
"சந்தோஷத்தில்,...மகிழ்ச்சியில், எல்லா தாயின் கண்களிலும் ஆனந்த கண்ணீர் தான் சுரக்கும்......🤷♂️
ஞாயிறு, 6 செப்டம்பர், 2020
காணாமல் போகும் உறவுகள்...!"*
💐💐💐🌹🌹🌹 🙏 🌹🌹💐💐
*இன்றைய சிந்தனை ( 07.09.20 )*
............................................................
*''காணாமல் போகும் உறவுகள்...!"*
.............................................................
இன்றைய நவீன உலகத்தில் மனித உறவுகள் சிதைந்து விஞ்ஞானத்தோடு உறவு வளர்ந்து வருகிறது. இன்றைய உலகில் மனிதர்களுக்கு உறவுகள் தேவையில்லை...
மாறாக திறன்பேசி (SMART PHONE) இருந்தால் போதும் என்ற மன நிலையில் வாழ்ந்து வருகிறோம்...
ஆக!, மனித உறவுகள் இன்று ஊதாசினப்படுத்தப்பட்டு வருகின்றன என்பதே உண்மை...
பெற்ற பிள்ளைகளோடும், உற்றார் உறவினர்களோடும், சிரித்து மகிழ்ந்து உறவாடிய நாட்கள் போய், இன்று உறவுகள் களைந்து, குடும்பங்கள் சிதைந்து, பிள்ளைகளை மறந்து, கணிணியும், அலைபேசியும் இருந்தால் போதும் என்று நிலையில் வாழ்ந்து வருகிறோம்...
இது ஒருபுறம் இருக்க, இனி வரும் காலங்களில் அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, சின்ன அண்ணன், பெரிய அண்ணன், சின்ன அக்கா, பெரிய அக்கா, சித்தப்பா, பெரியப்பா, அத்தை, மாமா, மச்சான், மச்சினி, அண்ணி, கொழுந்தனார், நாத்தனார், தாய்மாமன், சித்தப்பா பையன், சித்தப்பா பொண்ணு, பெரியப்பா பையன், பெரியப்பா பொண்ணு, அத்தை பையன், அத்தை பொண்ணு, மாமன் பொண்ணு, மாமன் பையன்... இது போன்ற வார்த்தைகள் எல்லாம் 2050 மேல் யாருடைய காதிலும் விழாது...
எவரும் அப்படிக் கூப்பிடவும் மாட்டார்கள், அகராதியில் இருந்து கூட கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து விடும்...
காரணம்...!
நகரவாழ் பெரியோர்கள் கூறுவதுபோல "ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு" என்று ஒரே ஒரு குழந்தை மட்டும் போதும் என்று முடிவெடுக்க ஆரம்பித்ததுதான்...! அப்படி இருக்கும்போது இந்த உறவுகள் எல்லாம் எப்படி வரும்...?
கட்டிக் கொடுத்த பெண்ணுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் அண்ணனும் தம்பியும் பறந்து செல்வார்கள், இனி யார் போவார்கள்...? ஒவ்வொரு பெண்ணும், சொந்தபந்தம் ஏதுமின்றி ஆறுதலுக்கு ஆள் இன்றி தவிக்கப் போகிறார்கள்...
ஒவ்வொரு ஆணும் தன் இன்ப துன்பங்களில் பங்கு கொள்ள அண்ணன், தம்பி யாருமின்றி அவதிப்பட போகிறார்கள், அப்பா அம்மாவைத் தவிர எந்த உறவுகளும் இருக்கப் போவதில்லை...
அந்த ஒரு குழந்தையும் வெளியூருக்கோ, இல்லை தனிக்குடித்தனமோ சென்றுவிட்டால்...?
"ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு" என்று வளர்த்தவர்கள் எல்லாம் வயதான காலத்தில், ஏனென்று கேட்க நாதியற்று முதியோர் இல்லத்திலோ, இல்லை!, அந்த ஒரு குழந்தைக்காக கட்டிய வசதியான வீட்டிலோ அனாதையாக கிடந்து சாவார்கள்...!
உறவுகளின் உன்னத மதிப்பை உணராமல் பொருளாதார முன்னேற்றத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு
ஒரு குழந்தைக்கு மேல் வேண்டாம் என வாழ்ந்து கொண்டிருக்கும் அத்தனை பேருக்கும் இதே நிலைதான்...!
உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டால் ஓடோடி வந்து இனி யார் வரப்போகிறார்கள்...?
*ஆம் நண்பர்களே...!*
*வாகனங்கள், வீட்டு வசதி வாய்ப்புகளுடன் ''ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு'' என்ற பெயரில் உறவுகளற்ற ஒரு அனாதையை வளர்ப்பதற்கும், வயதான காலத்தில் நாதியற்று சாவதற்குமா...? இவ்வளவு பாடுபட்டு ஓடி ஓடி செல்வம் ஈட்டுகிறீர்கள்...?*
*ஒரே ஒருமுறை நம் கடைசி காலத்தை நினைத்துப் பார்ப்போம்...!*
*பணமில்லாத ஒருவனை அனாதை என்று யாரும் சொல்வதில்லை, ஆனால்!, உறவுகள் இல்லாத ஒருவன் எத்தனை கோடி வைத்திருந்தாலும் அனாதைதான் என்பதை மறந்து விடாதீர்கள்...!!*✍🏼🌹
நோய்களைப் பெருக்கும் மனநிலைகள்..!!*
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
*💗இன்றைய சிந்தனை...*
*நோய்களைப் பெருக்கும் மனநிலைகள்..!!*
"நம் உடலில் உள்ள செல்கள் நம் எண்ணங்களை சதா ஒட்டுக் கேட்டுக் கொண்டே இருக்கின்றன. நம் எண்ணங்களால் அந்த மாறவும் செய்கின்றன. உடலில் உள்ள ஒவ்வொரு செல்லின் மீதும் மனதின் ஆதிக்கம் அதிகமாகவே உள்ளது" என்று பிரபல மருத்துவ எழுத்தாளர் தீபக் சோப்ரா கூறுகிறார்.
அதை இன்றைய விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் உறுதி செய்கின்றன. நம் உடல் ஆரோக்கியத்திற்கும், நம் மனநிலைகளுக்கும் இடையே நிறையவே தொடர்பு இருக்கின்றது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. உதாரணமாக, பக்கவாதத்தினால் பாதிக்கப்படுபவர்களில் பெரும்பாலானோர் தங்கள் மனதில் நிறைய துக்கத்தைஅடக்கி வைத்திருக்கிறார்கள் அல்லது மன அழுத்தத்துடன் இருந்திருக்கிறார்கள் என்பது கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது.
பெரும்பாலானோர் மாரடைப்புக்கு டென்ஷனான வாழ்க்கை முறை காரணமாக இருந்திருக்கிறது என்று ஆராய்ச்சிகள் சொல்கின்றன. கேன்சருக்கும் கூட கவலையும், மன உளைச்சலும் காரணமாக இருக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். தொடர்ச்சியாக இருக்கும் இது போன்ற மனநிலைகள் பெரிய நோய்களுக்குக் காரணமாக இருக்கின்றன என்றால் குறுகிய காலத்திற்கு இருக்கும் மனநிலைகள் கூட தலைவலி, வயிற்று வலி, கழுத்து வலி, இரத்த அழுத்தம் போன்ற உபாதைகளுக்குக் காரணமாக இருக்கின்றன என்கின்றன ஆராய்ச்சி முடிவுகள்.
மனநிலைகளுக்கும் நோய்களுக்கும் இடையே உள்ள தொடர்பைக் குறித்து சென்ற ஆண்டு கலிபோர்னியா-லாஸ் ஏஞ்சல்ஸ் பல்கலைகழகம் நடத்திய ஒரு பெரும் ஆராய்ச்சியில் இதன் காரணங்களை ஆழமாக ஆராய்ந்திருக்கிறார்கள். அவர்கள் கண்டுபிடித்திருக்கும் உண்மை சுவாரசியமானது. பல பக்கங்கள் கொண்ட அந்த ஆராய்ச்சியின் முடிவுகளை முடிந்த வரை எளிமையாக, சுருக்கமாக இங்கு தருகிறேன்.
ஒவ்வொரு செல்லினுள்ளும் டெலொமெர் (telemere) என்ற ஒரு நுண்ணிய கடிகாரம் உள்ளது. அது ஒவ்வொரு முறை செல் இரண்டாகப் பிரியும் போதும் மீண்டும் குறுகி சிறியதாகிறது. தான்
பெற்றிருந்த ஆரோக்கியத்திற்குத் தேவையான வழிமுறைத் தகவல்களை சிறிது இழக்கிறது. ஆனால், செல்லினுள் இருக்கும் டெலொமெரெஸ் என்ற என்சைம் (telomerase enzyme) அந்த இழப்பினை சரிசெய்து அதன் பழைய அளவினையும் தக்க வைத்துக் கொள்ள உதவுகிறது. அந்த டெலொமெரெஸின் வேலையே ரிப்பேர் செய்து செல்லையும் அதன் மூலம் உடல்நலத்தையும் நல்ல நிலையில் வைத்துக் கொள்வது தான்.
ஆனால் மன உளைச்சல், மன அழுத்தம் போன்றவை அதிகமாக எழும் போது நிலைமையை சமாளிக்க உடலில் கார்ட்டிசோல் (Cortisol) என்ற ஹார்மோனை அதிகம் தயாராகிறது. அவை அதிக காலம் இரத்த ஓட்டத்தில் தங்கும் போது டெலொமெரெஸை வேலை செய்ய அனுமதிப்பதில்லை. அதன் காரணமாக செல்களின் பிரிவினை நடந்து கொண்டேயிருக்கையில் டெலொமெர் கடிகாரத்தின் அளவும், அதனிடம் உள்ள ஆரோக்கியத்திற்குத் தேவையான வழிமுறைத்தகவல்களும் குறைந்து கொண்டே வரும் போது அதை சரி செய்யும் ரிப்பேர் வேலை நடைபெறுவதில்லை. அதனால் நோய்க்கிருமிகள் உடலைத் தாக்க ஆரம்பிக்கும் போது தடுத்துப் போராடவோ, காத்துக் கொள்ளவோ போதிய சக்தியோ, ஞானமோ செல்களில் இல்லாமல் நம் உடல் நிராயுதபாணியாக நிற்க வேண்டி வருகிறது. விளைவு பலவிதமான நோய்கள் ஏற்படுகின்றன.
மனநலன் தொடர்ந்து சீர்கெடும் போது மனவியாதிகள் மட்டுமல்லாமல் உடல் வியாதிகளும் நம்மை ஆட்கொள்ள வருகின்றன என்பது தெளிவு. இன்றைய அவசர வாழ்க்கை முறை, சக்திக்கு மீறிய எதிர்பார்ப்புகள் மற்றும் செயல்பாடுகள், யதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள முடியாத தன்மை முதலானவையே இந்த காலத்தில் நம் மனநலம் சீர்கெட அடிப்படைக் காரணங்களாக இருக்கின்றன. நம் இயல்புக்கும், சக்திக்கும் ஏற்ப முறையாக வாழ்வை அமைத்துக் கொள்ளும் போது நம் மனநலம் பெருமளவு சீர்படுகிறது.
மனநிலை ஆரோக்கியமாக இருந்தால் நோயே வராது என்பதல்ல இன்றைய விஞ்ஞான ஆராய்ச்சிகளின் கருத்து. வந்த நோய் வேகமாக நீங்குவதும், நிரந்தரமாகத் தங்கி விடுவதும் பெரும்பாலும் நம் மனநிலைகளைப் பொறுத்தே என்று தான் ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். எனவே உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க மனதை ஆரோக்கியமாக வைத்திருப்போமாக..!!
*💗வாழ்க வளமுடன்💗*
*பகிர்வு*
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
புதன், 2 செப்டம்பர், 2020
தெருவில் படித்த பாடம்
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
படித்தவை.....
*தெருவில் படித்த பாடம்..!!*
அறிஞர்களிடமிருந்து பாடங்கள் பெறுகிறோம். அறிவு சார்ந்த நூல்களில் இருந்து பாடங்கள் பெறுகிறோம். இது பெரிய விஷயமில்லை. சில சமயங்களில் தெருக்களில் கூட சில பாடங்களை, அறிஞர்களல்லாத சாதாரண மனிதர்களிடமிருந்து பெறும் சந்தர்ப்பங்கள் உண்டு. சாதாரண மனிதர்களாகத் தோன்றுபவர்களிடமிருந்து கிடைக்கும் பாடங்கள் பக்கம் பக்கமாக படிக்கும் புத்தகங்களில் இருந்தும், மணிக்கணக்கில் பேசும் அறிஞர்களிடமிருந்தும் கிடைக்கும் பாடங்களுக்கு சற்றும் குறைந்ததல்ல. இன்னும் சொல்லப் போனால் அவை மிக எளிமையாகவும் ஆழமாகவும் நம் மனதில் பதிந்து விடுவதுண்டு.
அப்படி நானும் ஒரு பாடம் படித்தேன். சில வருடங்களுக்கு முன் ஒரு நாள், உச்சி வெயில் மண்டையைப் பிளக்கும் கோடைகால ஒரு மதிய நேரத்தில் வீட்டிற்கு வெளியே சத்தமாக எம்.ஜி.ஆர்
பாடல்களை ஒருவர் பாடுவது கேட்க ஆரம்பித்தது. சாதாரணமான குரல் தான் அது. ஆனால் உற்சாகமாகப் பாடுவது கேட்டது. ஜன்னல் வழியே வெளியே எட்டிப் பார்த்தேன்.
குப்பை எடுத்துச் செல்லும் லாரி ஒன்று சற்று தள்ளி நின்றிருந்தது. மூன்று துப்புரவு ஊழியர்கள் பெரிய குப்பைத் தொட்டியில் இருந்து குப்பைகளை கூடைகளில் எடுத்துச் சென்று அந்த லாரியில் போட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்கள் பல முறை வந்து குப்பைகளை அள்ளி எடுத்துச் சென்று அந்த லாரியில் போட்டு வர வேண்டி இருந்தது. அவர்களில் ஒருவன் தான் சத்தமாக
எம்.ஜி.ஆர் பாடல்களைப் பாடியவன். மற்ற இரு ஊழியர்களும் சுரத்தே இல்லாமல் தங்கள் வேலையைச் செய்து கொண்டிருக்க இவனோ அந்த வெயிலையும், செய்யும் வேலையின் பளுவையும்
பொருட்படுத்தாமல் ஆனந்தமாகப் பாடிக் கொண்டிருந்தான்.
எனக்கு முதலில் தோன்றியது அவன் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவன் என்று தான். ஏனென்றால் வேறு யாரும் அந்த வெயிலில், அந்த சூழ்நிலையில் அப்படிப் பாடிக் கொண்டிருக்க மாட்டார்கள். ஆனால் குரல் சாதாரணமாக இருக்கிறதே, மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற கூச்சமெல்லாம் இல்லாமல் அவன் பணி செய்த விதம் வித்தியாசமாக இருந்தது. அவன் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சி, பாடலில் திளைத்த விதம் எல்லாம் என்னை சிந்திக்க வைத்தது.
அடிக்கும் வெயிலையோ, செய்யும் தொழிலையோ அவன் மாற்ற முடியாது. ஆனால் செய்யும் விதத்தையும், செய்யும் மனநிலையையும் அவன் தேர்ந்தெடுக்க முடியும் அல்லவா? அவன் அதைத் தான் செய்து கொண்டிருந்தான். மற்றவர்கள் வெயிலை உணர்ந்த நேரத்தில் அவன் பாடல்களின் இனிமையை உணர்ந்தான். அவர்களுக்கு வேலை நேரம் அவனுக்கு பாட்டு நேரம் ஆகியது. அதே நேரத்தில் அவன் வேலையும் நடந்து கொண்டிருந்தது. முதலில் மனநிலை பாதிக்கப்பட்டவன் என்று தோன்றியது போய் அவன் தான் மனநிலை சரியானவன் என்று தோன்றியது. லாரியும் அந்தப் பணியாளர்களும் சென்று நிறைய நேரம் என்னை சிந்திக்க வைத்தது அந்த சம்பவம். கல்வியறிவில்லா விட்டாலும் வாழ்க்கையில் மகிழ்ச்சியை ஏற்படுத்திக் கொள்ளும் அந்த அசாதாரணமான அறிவு அவனிடம் இருந்ததாகத் தோன்றியது.
இன்னொரு நிகழ்ச்சி. 1994 ஜனவரி 17ல் நில நடுக்கத்தால் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் பெரிதும் பாதிக்கப் பட்டது. இரண்டு நாட்கள் கழித்தும் அங்கு நிலைமை சரியாகவில்லை. தெருக்களைக்
வாகனங்கள் கடக்க மிக அதிக நேரம் தேவைப்பட்டது. அங்கங்கே கார்கள் மணிக்கணக்கில் நின்றிருந்தன. ஒரு பிரபல தொலைக் காட்சி சேனல் நிருபர்கள் நின்று கொண்டிருந்த கார்களின்
ஜன்னல் கண்ணாடிகளைத் தட்டி அழைத்து பயணிகளின் கருத்தைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
ஒரு காரோட்டி கோபத்தின் உச்சத்தில் இருந்தார். "இந்த கலிபோர்னியா மாகாணமே மனிதர்கள் நிம்மதியாக வாழ முடியாத இடமாக மாறி விட்டது. முதலில் தீ பரவியது... பிறகு வெள்ளம்... இப்போதோ பூகம்பம். காலையில் எத்தனை சீக்கிரம் வீட்டை விட்டுக் கிளம்பினாலும் அலுவலகம் சென்று சேர தாமதம் தான் ஆகிறது. சே... என்ன தான் செய்வது?" என்று மனிதர் பொரிந்து தள்ளினார்.
அந்த நிருபர் அடுத்த காரின் ஜன்னலைத் தட்டிக் கேட்டார். அந்தக் காரோட்டி சிரித்துக் கொண்டே சொன்னார். "காலையில் ஐந்து மணிக்கே வீட்டில் இருந்து கிளம்பி விட்டேன். ஆனால் இந்த
போக்குவரத்து நெரிசலில் நான் வேலைக்குப் போய் சேர கண்டிப்பாய் தாமதம் தானாகும். ஆனால் ஐந்து மணிக்கே கிளம்பி விட்ட நான் இதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாது. அதனால் என்னை என் முதலாளி திட்ட முடியாது. அவருக்கும் போக்குவரத்து நெரிசல் தெரியும். நான் கிளம்பும் போதே படிக்க புத்தகம், கேட்க பாட்டு கேசட்டுகள், ·ப்ளாஸ்கில் காபி எல்லாம் எடுத்துக் கொண்டு வந்திருப்பதால் பிரச்னையில்லை. போய் சேர்கிற போது போய் சேர்ந்தால் போதும். அதுவரை பாட்டையும், புத்தகத்தையும் ரசிக்கலாம்."
பல பேர் கோபத்துடனும், எரிச்சலுடனும் இருக்க அந்தத் தெருவின் போக்குவரத்து நெரிசலில் அந்த மனிதர் மட்டும் பாதிக்கப்படாமல் இருந்த விதத்தை சிந்தித்துப் பாருங்கள். நிலநடுக்கமும், அதனால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலும் தவிர்க்க முடியாதவை. ஆத்திரப்படுவதாலோ, புலம்புவதாலோ அவற்றை மாற்றி விட முடியாது. அந்த சூழ்நிலையை ஏற்றுக் கொண்டு அதற்குத் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டு வந்து அலட்டிக் கொள்ளாமல் அமைதியாக இருந்த மனிதர் எவ்வளவு பெரிய பாடத்தை நமக்குக் கற்றுக் கொடுக்கிறார் பாருங்கள். காத்திருக்கும் அந்த நேரத்தைக் கூட அவருக்கு மட்டும் பயனுள்ளதாய் மாற்றிக் கொண்டது புத்திசாலித்தனமே அல்லவா?
உலகில் இயற்கை நிகழ்வுகளை நாம் மாற்ற முடியாது. நம் சூழ்நிலைகள் பலவற்றையும் மாற்றும் சக்தியும் நம்மிடம் இல்லை. அழுவதாலோ, புலம்புவதாலோ, ஆத்திரப்படுவதாலோ, வேறு விதமாய் இருந்திருக்க வேண்டும் என்று ஆசைப்படுவதாலோ எதுவும் மாறிவிடப் போவதில்லை. ஆனால் எதை எப்படி எடுத்துக் கொள்வது என்பது மட்டும் நம் கையிலேயே இருக்கிறது. நடப்பதை எப்படிக் காண்பது என்பதையும், எப்படி உபயோகப்படுத்திக் கொள்வது என்பதையும் நாமே தீர்மானிக்கிறோம். மேலே குறிப்பிட்ட துப்புரவுப் பணியாளரும், காரோட்டியும் பெரிய மேதைகள் அல்ல. வரலாற்றுப் பக்கங்களில் இடம் பெறும் சிந்தனையாளர்களும் அல்ல. ஆனால் அவர்கள் கற்றுக் கொடுக்கும் இந்தப் பாடம் மகிழ்ச்சிக்கான மகத்தான ரகசியம் அல்லவா?
*💗வாழ்க வளமுடன்💗*
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
சனி, 29 ஆகஸ்ட், 2020
புறம் பேசாதிரு
💐💐💐🌹🌹🌹 🙏 🌹🌹💐💐
*''மற்றவர்களைப் பற்றி புறம் கூறாதீர்கள்...!*
.....................................................
நாம் மற்றவர்களோடு சொல்லாடலில் ஈடுபடும் போது நம்மை அறியாமலேயே, அங்கு நம்முடன் இல்லாத ஒருவரைப் பற்றிப் பேச ஆரம்பித்து விடுகிறோம்...
இது பெரும்பாலும் தவிர்க்க முடியாததாக ஆகிவிட்டது, ஏனென்றால், ‘புறம்’ பேசவில்லை என்றால் சொல்லாடல் பொருளற்றுப் போய் விடுகிறது...
மக்கள் ஒருவரைப் பற்றி அவர் இல்லாத நேரத்தில் பேசுவதற்கு முக்கியக் காரணம், பொறாமை தான். பொறாமை என்றால், ஒருவரது வெற்றிகளையும், நன்மைகளையும் பார்த்து ஏங்குவது...
அதனால், ஒருவரைப் பார்த்து பொறாமைப் படும் ஒருவர், அவரைப் பற்றி குறை கண்டு பிடிக்கத் தொடங்கி, அந்தக் குறைகளை மற்றவர்களிடம் கூற ஆரம்பிப்பார்...
ஒரு முறை தத்துவ மேதை சாக்ரடீஸைக் காண அவரது நண்பர் ஒருவர் வந்திருந்தார்.. அவர் சாக்ரடீசைப் பார்த்து,
“சாக்ரடீஸ்!"
"உங்கள் மாணவன் பிளாட்டோவைப் பற்றி நான் கேள்விப்பட்ட ஒன்று தெரியுமா...?”
வந்தவரை ஏற இறங்கப் பார்த்த சாக்ரடீஸ்…
“பொறுங்கள்., பொறுங்கள்.. ஒரு நிமிடம். நீங்கள் கூற வருவதை என்னிடம் சொல்வதற்கு முன்னால் ஒரு சிறிய பரிசோதனை..."
அந்தப் பரிசோதனையில் நீங்கள் தேர்வு செய்து விட்டுப் பிறகு என்னிடம் நீங்க தாராளமாகக் கூற வருவதைக் கூறலாம்….”
வந்தவர் சற்று குழப்பத்துடனும், ஆச்சரியத்துடனும்….
“அது என்ன பரிசோதனை..?” என்றார்,
அதுக்கு பெயர் 'TRIPLE FILTER TEST”என்றார் சாக்ரடீஸ்
“TRIPLE FILTER...?” அது என்ன...? என்றார் வந்தவர்...
“என்னிடம் கூறுவதுக்கு முன்னால் ஒரு நிமிடம் நீங்கள் சொல்வதை வடிகட்டி விட்டுப் பிறகு கூற வேண்டும்...!"
அதனால் தான் ''Triple Filter Test'' என்று கூறினேன்...
“முதல் வடிகட்டி (Filter) 'உண்மை’.
அதாவது "நீங்கள் கூற வரும் செய்தி உண்மை என்று உங்களுக்குத் தெரியுமா...?”
“இல்லை… நான் கேள்விப்பட்டேன் அவ்வளவு தான்...!”
“பிறகு நீங்கள் கூற வந்த செய்தி உண்மையா...? இல்லையா என்று உங்களுக்குத் தெரியாது... அப்படித் தானே...!"
சரி… போகட்டும்…
அடுத்து "நீங்கள் அவரைப் பற்றிக் கூற வந்த செய்தி நல்ல செய்தியா...?”
“அது... வந்து… இல்லை… இல்லை ….கெட்ட செய்தி…!”
"அப்படியா!, கூற வந்த செய்தி உண்மையா...? பொய்யா...!? என்று கூடத் தெரியாமல் அவரைப் பற்றி ஏதோ தவறாக கூறப் போகிறீர்கள்….!"
இந்த முறை, வந்திருந்த நபர் வருந்தி நெளிந்தார்...
“பரவாயில்லை…!"
இன்னும் ஒரு செயலில் வடிகட்டுதல் இருக்கிறது...
இதில் தேர்வு செய்தால் கூட அந்தச் செய்தியை நீங்கள் என்னிடம் நீங்கள் கூறலாம்...
இந்த மூன்றாவது வடிகட்டுதல்.., ‘பயன்'
அதாவது "நீங்கள் கூற வந்த செய்தி எந்த விதத்திலாவது எனக்குப் பயனாக இருக்குமா...?”
“இல்லை… அப்படி எதுவும் இல்லை...”
“ஓ…! அப்படியானால் நீங்கள் கூற வருகின்ற செய்தியால் எமக்கு நல்லது ஏதும் கிடையாது..."
தவிர, அது உண்மையா...? இல்லையா...! என்று உங்களுக்கே தெரியாது...!
மேலும்!, அதை என்னிடம் கூறுவதால் எனக்கு எந்தப் பயனும் இல்லை….!
"இப்படிப்பட்ட ஒரு செய்தியை நீங்கள் எனக்குக் கூற வேண்டுமா என்ன...? வேறு ஏதாவது பேசலாமே…!"
வந்தவர் வெட்கித் தலைகுனிந்தார்...
ஆம் இனிய நண்பர்களே...!
பிறரைப்பற்றி புறங் கூறுவதையும் அறவே விட்டொழிக்க வேண்டும், இது சாதனையாளர்களிடம் இந்தப் பழக்கங்கள் இருக்காது...!
இந்த வாழ்க்கை மிகவும் குறுகியது. ஆனால்!, சாதிக்க வேண்டிய செயல்கள் எண்ணற்றவை...!!
பிறரைப் பற்றி புறம் பேசுவதில் நாம் ஏன் நேரத்தை செலவழிக்க வேண்டும்...?
-உடுமலை சு. தண்டபாணி
💐💐💐🌹🌹🌹 🙏 🌹🌹💐💐
புதன், 19 ஆகஸ்ட், 2020
பக்குவம் என்றால்....*
*பக்குவம் என்றால்....*
ஒரு சமயம் இரண்டு அமெரிக்க போர்ப்படைக் கப்பல்கள் கடலில் கடல் படையினருக்கு பயிற்சி அளிக்கும் பணியில்
ஈடுபட்டு இருந்தன. பனி மூட்டத்தினால் சில நாட்கள் தொடர்ந்து செல்லும் அவர்களுடைய பயணம் தாமதப்பட்டு வந்தது.
ஒரு நாள் இரவு கடும்
பனிமூட்டத்தில் கடற்பகுதி மூடியிருந்ததால் முன்னால் சென்று
கொண்டு இருந்த போர்ப்படைக் கப்பலின் மேற்தளத்தில் கப்பலின்
கேப்டன் நின்று மேற்பார்வை இட்டுக் கொண்டு இருந்தார்.
அப்போது தொலை நோக்கி வழியாக கண்காணித்துக் கொண்டு இருந்த
கடற்படை வீரர் கேப்டனிடம் சொன்னார். "ஐயா நாம் போகின்ற பாதையில் சற்று தொலைவில் விளக்கு வெளிச்சம் தெரிகிறது. அது இன்னொரு கப்பலாக இருக்கக்கூடும் என்று சந்தேகப்படுகிறேன்".
அது நின்று கொண்டு இருக்கிறதா இல்லை, நகர்கிறதா?
நகராமல் தான் இருக்கிறது.
உடனடியாக அவர்களுக்கு சிக்னல் அனுப்பு, நமது கப்பல் போகின்ற வழியில் அது நிற்கிறது என்று தெரிவி. உடனடியாக 20 டிகிரி விலகிப் போகச் சொல்."
அப்படியே சிக்னல் அனுப்பப் பட்டது. அங்கிருந்து உடனடியாக
பதில் சிக்னல் வந்தது. "நீங்கள் 20 டிகிரி விலகிப் போவது நல்லது".
எரிச்சலடைந்த கேப்டன் அடுத்த சிக்னல் அனுப்பினார் "நான் 6 கடல் போரில் வெற்றி பெற்ற கேப்டன்
சொல்கிறேன் 20 டிகிரி விலகிப் போங்கள்.
அதற்கும் மறுமொழி உடனடியாக எதிர் தரப்பில் இருந்து வந்தது. "ஐயா நான் கப்பல்படையின்
இரண்டாம் நிலை ஊழியன். தயவு செய்து 20 டிகிரி விலகிப் போங்கள்.
கேப்டனுக்கு ஒரு இரண்டாம் நிலை ஊழியன் இப்படி தனக்கு கீழ்படியாமல்
நடந்து கொள்வது பெரும் கோபத்தை ஏற்படுத்தியது.
கேப்டன் இறுதி எச்சரிக்கை செய்தி அனுப்பினார் "இது போர்ப்படைக் கப்பல். உடனடியாக 20 டிகிரி விலகுங்கள் அல்லது பீரங்கியால் சுடப்படுவீர்கள்".
பதில் உடனடியாக வந்தது. "இது கலங்கரை விளக்கம்"
மறு பேச்சு இல்லாமல் போர்ப்படைக் கப்பல்கள் தங்கள் பாதையை 20
டிகிரி மாற்றிக் கொண்டன.
ஒவ்வொருவர் வாழ்க்கைப்
பாதையிலும் இப்படி சில கலங்கரை
விளக்கங்கள் குறுக்கிடத்தான் செய்கின்றன. நம் விருப்பப்படி மாறவோ
நமக்காக விலகி வழி விடவோ செய்யாத சில சூழ்நிலைகள் இருக்கத்தான்
செய்கின்றன. மாற்றவே முடியாத இது போன்ற குறுக்கீடுகள் வரும் போது நாம் தான் நம் பாதையை சற்று மாற்றிக் கொண்டு செல்ல வேண்டும். அதை விட்டு விட்டு நான் மாற மாட்டேன், அதை மாற்றியே
தீருவேன் என்று பிடிவாதம் பிடித்து எதிர்த்து நின்றால் அது வடி கட்டிய முட்டாள் தனமாகவே இருக்கும்.
இப்படிப் பட்ட சூழ்நிலைகளில் தங்களை மாற்றிக் கொள்ள நேரிடுவது
சிலருக்கு கௌரவக் குறைவாக தோன்றுவதுண்டு.
மேலே குறிப்பிட்ட
நிகழ்ச்சியில் கேப்டனுக்கு வந்த கோபம் போல "ஈகோ" பிரச்சினை எழுவதுண்டு. ஆனால் சந்தர்ப்பங்களின் தன்மை அறிந்து தெளிவுடன்
மாறுவதும், வளைந்து கொடுப்பதும் பக்குவமேயன்றி தோல்வியல்ல.👍👍👍
புதன், 12 ஆகஸ்ட், 2020
சர்தார்ஜி ஜோக்ஸ்
சர்தார் ஒருத்தர் பஸ் ஸ்டாப்ல பஸ்க்காக வெய்ட் பண்ணிட்டு இருக்கார்.
பஸ் ஸ்டாப்ல நிக்காம தள்ளி போய் நிக்குது, சர்தாரும் பஸ்ஸ பிடிச்சிரலாம்னு ஒடுறார்…..
கிட்ட போகும் போது பஸ் மறுபடி கிளம்பிருது.. சரி அடுத்த ஸ்டாப்ல பிடிச்சிரலாம்னு ஒடுறார்,
அப்பவும் கிட்ட போகும் போது பஸ் மறுபடி கிளம்பிருது.. இப்படியே ஒடி ஒடி சர்தார் வீட்டுக்கே வந்திர்றார்.
வந்தவர் வீட்ல wife கிட்ட எல்லா கதையும் சொல்லிட்டு, பஸ் பின்னால ஒடியே வந்துட்டதால இன்னைக்கு 2.50 பைசா மிச்சம்னு சொல்றார்.
கேட்ட சர்தாரிணி(wife)க்கு ரொம்ப கோபம்,
என்னய்யா நீ பிழைக்க தெரியாத மனுசனா இருக்க பஸ் பின்னால ஒடி வந்ததுக்கு பதிலா ஒரு டாக்ஸி பின்னால ஓடி வந்த்திருந்தா 200 ரூபாயில்ல மிச்சம் ஆயிருக்கும்னு கடுப்பானார்………..
சர்தார் கடுமையா யோசிக்கத் தொடங்கினார்
அடுத்த நாளுக்காக………..
🤣🤣🤣
நம்ம சர்தார் பெயிண்டர்..( சுண்ணாம்பு அடிக்கறவர்.. ). ஒரு வீட்டுக்காரர் அவரைக் கூப்பிட்டு காண்ட்ராக்ட் பேசினார்..
"வீட்டுக்குப் பின்னாடி இருக்குற செவர்லே(சுவர்ல) சுண்ணாம்பு அடிக்கணும்.. என்ன கேக்கறே..?"
"நீங்க குடுக்கறதைக் குடுங்க.. நான் வேலையை ஆரம்பிக்கிறேன்.. "
ரொம்ப சீக்கிரமா வேலை முடிஞ்சுட்டுது.. வீட்டுக்காரர் 100 ரூபாய் கொடுத்தார்..சிங்கு திருப்தியுறாமல் கேட்டார்..
"பாத்து போட்டுக் குடுங்க முதலாளி.. வேலை அதிகமா செஞசுருக்கேன்.. நீங்க " செவர்லே "ன்னு சொன்னீங்க.. அங்க போயி பார்த்தா "குவாலிஸ் " நின்னுக்கிட்டுருந்துச்சு..!
🤣🤣🤣
சர்தார்ஜி கடைக்காரரிடம், “உங்களிடம் வாங்கிய ரேடியோ ஜப்பான் தயாரிப்பு இல்லை. நீங்கள் பொய் சொல்லி என்னிடம் அதை விற்றுவிட்டீர்கள்!” “
இல்லைங்க.. அது சோனி ரேடியோ, ஜப்பான் தயாரிப்புதான்”
“அப்ப ஏன், ஆன் பண்ணவுடனே ஆல் இந்தியா ரேடியோன்னு சொல்லுது?”
🤣🤣🤣
பின்லேடனை பிடிச்சா 5 லட்சம் பரிசு என்று போலிஸ் அறிவித்தவுடன், சர்தார்ஜி நேராக போலிஸாரிடம் போய் எனக்கு 5 லட்சம் குடுங்க என்று கேட்டிருக்கிறார்.
ஏன் என்று கேட்ட போலிஸ் அதிகாரி பதிலை கேட்டவுடன் தலைசுற்றி விழுந்து விட்டாரம்.
சர்தார்ஜி சொன்னாராம், எனக்கு பின்லேடனை ரொம்பப் புடிச்சிருக்கு.
🤣🤣🤣
சர்தார்ஜி இருவர் பஞ்சாப் தீவிரவாத குழுவில் இணைந்தார்கள்...முதல் பணி...ஒரு கார்ல குண்டு வைக்கறது...
சர்தார் 1 : டேய் மச்சி...நாம வெக்கற குண்டு வெக்கும்போதே வெடிச்சுட்டா என்னடா பன்றது
சர்தார் 2 : கவலப்படாத இன்னோன்னு வெச்சிருக்கேன்...
🤣🤣🤣
சர்தார்ஜியிடம் ஒருவர்...
ஒருவர் : “நீங்க எங்க பிறந்தீங்க..?
சர்தார்ஜி : “பஞ்சாப்பில்...
ஒருவர் : “பஞ்சாப்பிலே எந்த பாகம்?”
சர்தார்ஜி : “எந்த பாகமா? மொத்த உடலும் பஞ்சாப்பிலேதான் பிறந்தது”
🤣🤣🤣
சர்தார் திரைப்படம் பார்க்க சென்றார்.. தாமதமாகி விட்டதால் போகக் கூடாத ஒருவழிப் பாதையில் மகிழ்வுந்தைச் செலுத்தவே, போக்குவரத்துக் காவலரால் மடக்கி நிறுத்தப் பட்டார்..
காவலர் : என்னாய்யா சிங்கு.. எந்த ரோட்லே போற தெரியுதா..?
சர்தார் : தெரியுமே.. சினிமா கொட்டாய் ரோடு.. ஆனா ஏன் எல்லா காரும் திரும்பி வந்துகிட்டு இருக்கு..? டிக்கெட்டு தீந்து போச்சோ..?
🤣🤣🤣
சர்தார்ஜியும் அவரது காதலியும்...
காதலி : அன்பே...நம்ம என்கேஜ்மெண்ட் அன்னைக்கு கண்டிப்பா நீ எனக்கு ரிங் தரனும்..
சர்தார் : சரி...கண்டிப்பா...ஆனா லேண்ட் லைன்லயா, மொபைல்லயான்னு சொல்லிரு முன்னாலயே...!!
🤣🤣🤣
சர்தார்ஜி புதிதாக ஒரு மாருதி கார் வாங்கினார்.
அந்தக் காரில் தனது நண்பரைப் பார்க்க அமிர்தசரஸில் இருந்து ஜலந்தர் கிளம்பினார்.
சில மணி நேரங்களில் போய் சேர்ந்து விட்டதாக தனது அம்மாவுக்குத் தகவல் அனுப்பினார். ஆனால் மூன்று நாட்கள் கழித்துத்தான் திரும்பி வந்தார்.
அம்மா கேட்டார்: என்ன ஆச்சு? இவ்வளவு லேட்டா வர்றே?
சர்தார்ஜி: இந்த மாருதி கார் கம்பெனிக்காரங்களுக்கு கொஞ்சம்கூட விவரம் இல்லை. முன்னாடி போறதுக்கு 4 கியர் வச்சிருக்காங்க. அதனால் சீக்கிரம் போய் சேர்ந்துட்டேன். ஆனால் ஒரே ஒரு ரிவர்ஸ் கியர்தான் வச்சிருக்காங்க. அதுலே ஓட்டினா எப்படி சீக்கிரம் வரமுடியும்?
🤣🤣🤣
அஞ்சா சிங் ஒரு குதிரை வாங்கிட்டு வந்தாரு.. அவர் தம்பி கஞ்சா சிங்கும் ஒரு குதிரைய வாங்கிட்டு வந்துட்டாரு..
அடையாளம் வச்சுக்கறதுக்காக அஞ்சா தன் குதிரையோட வலது காதை வெட்டிட்டாரு..
ஆனா அவங்க அடுத்த வீட்டுக்காரன் ராவோடு ராவா கஞ்சா வோட குதிரை காதையும் அறுத்துட்டான்..
அசராத அஞ்சா இன்னொரு காதை வெட்டி விட. இன்னொரு குதிரை காதையும் வெட்டிட்டான். இப்படியே கண்ணு காலு எல்லாம் ஒவ்வொண்ணா போயிருச்சி.
அப்புறமும் அசராத அஞ்சா தம்பிக்கிட்ட சொன்னாரு..
" கவலைப் படாதடா கஞ்சா.. கருப்பு கலர் குதிரை உன்னோடது.. வெள்ளை என்னோடது..!
🤣🤣🤣
இந்த நிலை மாறும்...
🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃
*💗சிந்தனை கதை...*
*இந்த நிலை மாறும்..!!*
(சற்று நீளம் தான். ஆனால், அவசியம் படிக்க வேண்டிய பதிவு. தவற விடாதீர்கள்)
ஒரு நாட்டின் ராஜாவுக்கு ஒருநாள் சிந்தனை ஒன்று தோன்றியது, அதாவது தனது வாழ்வில் துன்பத்தினால் இறுதியை அடைந்த ஒருவனுக்கு, அவனை காப்பாற்றக் கூடிய ஒரு மந்திரம் எதுவாக இருக்கும்? என்பதே அந்த சிந்தனை .
மன்னனும் எவ்வளவோ முயன்றும் அப்படி ஒரு மந்திரம் என்னவென்று தெரியவில்லை , உடனே நாட்டு மக்களுக்கு பறையறிவிக்க சொன்னான்.
“வாழ்வின் துன்பத்தில் சிக்கி இறுதி நாளில் இருக்கும் ஒருவனை காப்பற்றக் கூடிய மந்திரத்தினை” சொல்பவருக்கு தனது நாட்டில் ஒரு பகுதியை தருவதாக அறிவித்தான். நிறைய பேர் தினமும் வரத் துவங்கினார்கள். ஒவ்வொருவர் ஒவ்வொரு மந்திரங்களை சொன்னார்கள்.
நமசிவாய என்றார் ஒருவர். ஓம் சக்தி என்றார் மற்றவர். உன்னையே நம்பு என்றார் இன்னொருவர். ஆனால் மன்னன் திருப்தியாகவில்லை. எல்லோர் சொன்னதையும் ஏதோ ஒரு காரணம் சொல்லி மறுத்தான், அவர்களின் பதிலில் அவன் மனம் ஏனோ சமாதானமாகவில்லை. இந் நிலையில் ஒருநாள் மன்னனைக் காண ஒருவன் வந்தான் .
அவன் மன்னனிடம் ஒரு மோதிரம் தந்து “மன்னா, நீங்கள் எந்த குறையுமின்றி நீடுழி வாழ வேண்டும், ஒருக்கால் நீங்கள் சொன்னது போல ஒரு நிலை உங்களுக்கு வருமானால் அன்றைய தினம் இந்த மோதிரத்தை திறந்து பாருங்கள், அது வரை இதனை பார்க்க வேண்டாம்”, பின்னொரு நாளில் தங்களை சந்திக்கின்றேன் என்று சொல்லி மோதிரத்தை மிகவும் பவ்யமாக மன்னனிடம் தந்து விட்டு சென்றான். மன்னனுக்கு அந்த மனிதனின் சொல்லும் செயலும் ஒரு விதமான நம்பிக்கையும், எதிர்பார்ப்பையும், மன அமைதியையும் தந்தது. இந்த சம்பவத்திற்கு பின் மன்னன் இதனை மறந்தே போனான்.
சில வருடங்களுக்குப்பின் . . .
திடீர் என இந்த மன்னனுக்கும் வேறு நாட்டு மன்னனுக்கும் போர் மூண்டது. தயார் நிலையில் இல்லாததால் இந்த மன்னன் தோற்றுப் போனான். நாடு , மனைவி , மக்களை இழந்த மன்னன் மிகவும் மனம் தளர்ந்து வாழ்வினை முடித்துக் கொள்ள எண்ணினான். தப்பித்து உயிர் பிழைத்த தன் நிலையை எண்ணி எண்ணி மனம் சஞ்சலமான மன்னன், தூரத்தில் ஒரு மலையினை கண்டான்.
இந்த மலையில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொள்ள தீர்மானித்த அந்த மன்னன் மலையின் மீதேறினான். தட்டுத் தடுமாறி மலையின் உச்சியை அடைந்த மன்னன், இறைவா, என்னை ஏற்றுக்கொள் என்று வானத்தை நோக்கி இரு கைகளையும் உயர்த்தி விண்ணைப் பார்த்து உரக்க கூவினான். அப்போது அவன் கையில் இருந்த மோதிரம் சூரிய ஒளியில் மின்னியதை கண்டான்.
உடனே, அவன் மனதில் அந்த மனிதன் சொல்லிய வார்த்தைகள் ஒலித்தன.
“மன்னா, நீங்கள் எந்த குறையுமின்றி நீடுழி வாழ வேண்டும், ஒருக்கால் நீங்கள் சொன்னது போல ஒரு நிலை உங்களுக்கு வருமானால் அன்றைய தினம் இந்த மோதிரத்தை திறந்து பாருங்கள், அது வரை இதனை பார்க்க வேண்டாம்”
இப்போது அது போன்ற நிலை தானே அதில் என்ன தான் உள்ளது பார்ப்போம், என்று தற்காலிகமாக கீழே விழுந்து மரணிக்கும் எண்ணத்தை கைவிட்டு விட்டு அமர்ந்து அந்த மோதிரத்தை திருப்பி உள்ளே என்ன இருக்கின்றது என பார்த்தான். மோதிரத்தின் உள்ளே சிறிய காகிதம் ஒன்று சுருட்டி வைக்கப்பட்டிருந்தது, அதனை மிகவும் ஜாக்கிரத்கையாக எடுத்து பார்த்தான், ஒரே ஒரு வாசகம் ஒரே ஒரு வரியில் எழுதப்பட்டிருந்தது .
அந்த வாசகம் இதுதான் . . . .
*"இந்த நிலை மாறும்"*
அவ்வளவுதான். வேறொன்றும் இல்லை, முன்னும் பின்னும் திருப்பிப் பார்த்த மன்னன் ஏதும் காணாததால் அந்த வாசகத்தினை பற்றி யோசித்தான். தான் தற்போது உள்ள நிலை மாறும், இதற்காக தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு வந்து விட்டோமே என்றெண்ணி மனதினை தைரியப்படுத்திக் கொண்டு மன்னன் மலையிலிருந்து கீழிறங்கினான்.
தனது ஆதரவாளர்களைக் தேடிக் கண்டு பிடித்தான், கிராமங்களில் வாழும் மக்கள் தங்களது மன்னனைக் கண்டதும் மகிழ்ந்து கொண்டாடினார்கள். இளைஞர்களை ஒன்று திரட்டி படைகளை உருவாக்கினான். அரண்மனையில் இருந்த அவனது பழைய படை வீரர்களின் ரகசிய ஒத்துழைப்போடு, எதிர்பாராமல் திடீரென்று அரண்மனையின் ரகசிய வாசல் வழியாக உள்நுழைந்து எதிரி நாட்டு மன்னனை அதிரடியாக கைது செய்து சிறையிலடைத்து மீண்டும் மன்னனான்.
மீண்டும் மன்னன் ஆட்சியிலமர்ந்ததும் மக்கள் மிகவும் ஆனந்த வசமானார்கள். இந் நாளை விமரிசையாகக் கொண்டாட எண்ணிய மன்னன் , இந்த வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்த மோதிரம் கொடுத்த மனிதனை பறையறிவித்து வரவழைத்தான். நாடு முழுக்க ஒரே கொண்டாட்டமாக இருந்தது, அரண்மனையில் மக்கள் கூட்டம், அரியணையில் மன்னன், அருகில் மகாராணி, மன்னனின் குழந்தைகள், மந்திரி, பிரதானிகள், ஆடல் பாடல் என்று எங்கும் சந்தோஷ வெள்ளம் அலை பாய்ந்து கொண்டிருந்தது.
மோதிரம் கொடுத்த மனிதன் வந்தான் , மன்னனை தாழ்ந்து பணிந்தான். மன்னன் அரியணையில் இருந்து இறங்கி வந்து வரவேற்றான். தான் அறிவித்திருந்த படி பாதி நாட்டினை நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றான் மன்னன். மன்னா, நாட்டினை ஆளும் தகுதி கொண்டவர் தாங்கள் தான், எனக்கு ஏதும் வேண்டாம் என்று பணிவோடு சொன்னான் அந்த மனிதன். மன்னன் எவ்வளவோ மன்றாடியும் எதனையும் ஏற்க மறுத்தான் அந்த மனிதன்.
இறுதியாக மன்னன் சொன்னான், அன்பரே, நீங்கள் ஏதேனும் என்னிடம் இருந்து பெற விரும்பினால் தயங்காமல் கேளுங்கள். அந்த மனிதன், மன்னா, “வாழ்வின் மிக அதிக சந்தோஷத்தின் உச்சாணியில் தாங்கள் தற்போது அமர்ந்துள்ளீர்கள் என்பது உண்மைதானே“
மன்னன் : “ஆமாம் அது உண்மை தான் அன்பரே”
அப்படியானால் அந்த மோதிரத்தினை இப்போது எடுத்துப் பாருங்கள் என்றான் அந்த மனிதன். ஏன் என மன்னன் வினவ , எடுத்துப் பாருங்களேன் என்றான் அந்த மனிதன். சரி என சொல்லிய மன்னன், தனது விரலில் இருந்த , மோதிரத்தினை எடுத்து உள்ளிருக்கும் அந்த சிறிய காகிதத்தை பிரித்துப் பார்த்தான். அதில் அந்த மந்திர வாசகம் தெரிந்தது .
*இந்த நிலை மாறும்*
இது தான் மன்னா வாழ்க்கை, இந்த நிலை மாறும், எனவே எதிலும் கவனமாகவும் சந்தோஷமாகவும் இருங்கள், நான் வருகின்றேன் என்று அவையோரை பணிந்து மன்னனிடமிருந்து விடை பெற்றான் அந்த மனிதன். நெஞ்சம் தழுதழுக்க அவன் செல்லும் திசையைப் பார்த்து வணங்கி நின்றான் மன்னன். இழந்த வாழ்வை மீட்டுத் தந்த மந்திரம் தந்தவனல்லவா இந்த மனிதன்..!
அன்பின் நண்பர்களே, உங்கள் சம்பந்தமான எந்த முடிவினையும் எடுக்கும் உரிமை உங்களுக்கே உள்ளது. சந்தேகம் வேண்டாம், இதில் வேறு கருத்தில்லை, உங்களின் எந்த முடிவினையும் தடுக்கும் எண்ணமும் எமக்கில்லை. ஆனால், எந்த முடிவெடுக்கும் முன்னரும் இந்த மந்திர வாசகம் நினைவில் வரட்டும்.
*இந்த நிலை மாறும்...*
*வளமோடு வாழுங்கள், வாழும் நாளெல்லாம்..!!*
🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃
செவ்வாய், 11 ஆகஸ்ட், 2020
வார்த்தை
ஒரு டீக்கடையில் எழுதப்பட்டிருந்த வாசகம், டீயை விடவும் சூடாக இருந்தது.
"இருவடை எடுத்து ஒருவடை என்பார்
திருவோடு ஏந்தி தெருவோடு போவார்..!"
மாஸ்டர் டீ போடுகிற நேரத்தில், தட்டிலிருக்கும் வடையில் இரண்டை கபளீகரம் செய்து விட்டு, ஒரு வடை தான் என்று காசு கொடுப்பவர்களை கண்டிப்பதற்காக எழுதப்பட்ட வாசகம் இது. சுவாரஸ்யமாக இருக்கிறது என்றாலும் வடை எடுக்கிற எல்லோருக்கும் இது சங்கடத்தையே ஏற்படுத்தும்.
இதைப் படிக்கும்போது உங்களுக்குள் ஏற்படும் மன உணர்விற்கும், இனி வரும் வரிகளை படிக்கும்போது ஏற்படும் மன உணர்விற்கும் உள்ள வித்தியாசத்தினை கவனியுங்கள்.
ஒரு ஆட்டோவில், டிரைவர் சீட்டின் முதுகில் எழுதப்பட்ட வாசகம்..
‘உங்களின் வழிச் செலவு, எங்களின் வாழ்க்கை செலவு.’
இந்த வாசகம், இறங்கிய பின் யாரையும் பேரம் பேச விடாது. மீட்டருக்கு மேல் ஐந்து ரூபாய் போட்டுக் கொடுங்க சார் என்கிற வார்த்தைக்கும் இந்த வாசகத்திற்கு எத்தனை வேறுபாடு. அதனால் தான் சொல்கிறேன், சொல்லும் விதத்தில் வெல்லலாம்.
ஒரு மொத்த விற்பனை மீன் கடையில் எழுதப்பட்டிருந்த வாசகம்,
‘மீன் சாப்பிட வேண்டாம் என்று நினைத்தேன். மீனவன் சாப்பிட வேண்டாமா?’
வார்த்தைகளில் இல்லை வெற்றி. அது வெளிவரும் விதத்தில் தான் வெற்றி இருக்கிறது.
டீக்கடையின் வரிகளும், ஆட்டோவில் எழுதப்பட்ட வரிகளும் ஒரே விஷயத்தை தான் சொல்கிறது. ஆனால் சொல்லப்பட்ட விதம் தான் அதில் வித்தியாசம். சொல்ல வந்ததை அழகாக சொல்வது ஒரு கலை.
நினைக்கும் விஷயங்களை எல்லாம் பேசாமல், அதை செம்மை படுத்தி பேசிப்பாருங்கள்.. வெற்றி நிச்சயம்.
ஒரு ஹோட்டலில் எழுதி மாட்டி இருக்கும் வாசகம்...
‘வீட்டு சமையலுக்கு ஒரு நாள் விடுமுறை விடுங்கள்.’
எண்ணங்கள் அழகானால் வார்த்தைகள் அழகாகும், வார்த்தைகள் அழகானால் சிந்தனைகள் அழகாகும், சிந்தனைகள் அழகானால் வாழ்க்கையே அழகாகும்!!!
சனி, 8 ஆகஸ்ட், 2020
வாழ்க்கை
🍂வாழ்க்கையில் உயரும் வரை காதைப் பொத்திக் கொள்....
உயர்ந்த பிறகு வாயைப் பொத்திக் கொள்.... !!!
🍂பறவைகளின் நிம்மதியை கெடுக்க
ஒரு *கல்* போதும்.....
மனிதர்களின் நிம்மதியை கெடுக்க ஒரு *"சொல்"* போதும்......!
🍂எல்லோருடைய வாழ்க்கையும் ஒரு மெழுகுவர்த்தி போலத்தான்...
தூரத்தில் இருந்து பார்த்தால் ஒளி மட்டும் பிரகாசமாக தான் தெரியும்...
அருகில் சென்று பார்த்தால் தான் அவர்கள் உருகி கண்ணீர் வடிப்பது தெரியும்... !
🍂வாழ்க்கையில் முற்பகுதியில் வெற்றிபெற சுறுசுறுப்பும் ஊக்கமும் தேவை....
பிற்பகுதியில் வெற்றி பெற பொறுமையும் தன்னடக்கமும் தேவை.. !!
🍂வாழ்வில் நல்லது, நடந்தால் அதற்கு நானே காரணம் என்பதும்..
கெட்டது நடந்தால் அது மற்றவர்களால் என்றும் பிதற்றாதீர்கள்..
அனைத்திற்கும் நாம தான் காரணமென பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள் ...
🍂எதையாவது கொடுத்து நல்ல பெயர் தொடர்ந்து வாங்க நினைத்தால் ... அதை கொடுக்கும் வரைதான் நிலைக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்....
🍂ஆறுதல் என்பது பிரச்சனைக்கு தற்காலிக தீர்வு...
மாறுதல் என்பதே என்றும் நிரந்தர தீர்வு...
*நல்லதே நினைப்போம் .*
*நல்லதே நடக்கும்.*🙏🏼
ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2020
ஈகோ.....?
புதன், 29 ஜூலை, 2020
ஆக்சிஜன் இல்லாவிடில் பூமி
திங்கள், 27 ஜூலை, 2020
மனிதம் பற்றிய உளவியல் தகவல்
சனி, 25 ஜூலை, 2020
நல்ல மனம் வாழும்
நானே செல்போன் விற்பனை , பழுது நீக்கும் கடை தான் வைத்திருக்கிறேன்.
ஆனால் இந்த செல்போனை தவறவிட்டது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. சுமார் 25 ஆயிரம் ருபாய் மதிப்பு.எப்படியோ கீழே விழுந்திருக்கிறது.
வேறு ஒரு போனில் இருந்து ,அந்த நம்பருக்கு கால் செய்தேன் முதலில் பதில் இல்லை. மூன்றாம் முறை எடுக்கப்பட்டது .
'' ஹலோ '' என்றது ஒரு சிறுவனின் குரல்.
'' இந்த போன் என்னோடது , மிஸ் பண்ணிட்டேன். எங்க இருக்கீங்கனு சொல்லுங்க. நானே வந்து வாங்கிக்கறேன். ''
'' கே.ஜெ ஸ்டோர் பக்கத்துல வந்துட்டு இருந்தேன் அங்கிள் , ரோட்ல ஒரு போன் ரிங் ஆயிட்டு இருந்துச்சு. அதான் எடுத்து பேசறேன் ''
''அங்கேயே இருங்க 2 நிமிசத்துல வந்துடறேன் ''
நான் உடனே கிளம்பி கே.ஜெ ஸ்டோர் அருகில் சென்றேன். சிறுவன் நின்று கொண்டிருந்தேன். கொரோனா காலம் என்பதால் மாஸ்க் அணிந்திருந்தான். நானும் அணிந்து இருந்தேன்.
'' நான் தான் தம்பி , போன் மிஸ் பண்ணது''
'' இந்தாங்க அங்கிள் ''
'' உன் பேர் என்ன தம்பி ''
'' இளங்கோ ''
'' என்ன க்ளாஸ் படிக்கிற தம்பி ?''
''செவென்த் போகணும் அங்கிள் ''
'' எந்த ஸ்கூல் ''
சொன்னான்.
'' தேங்க்ஸ்பா , போன் எடுத்து ஆஃப் பண்ணி வச்சுக்காம , என்கிட்ட கொடுத்தியே, பெரிய விஷயம் பா ''
'' போன் தொலைச்சவங்க பாவம் தானே, போன் இல்லமா எவ்ளோ கஷ்டப்படுவாங்கனு தான் நினைச்சேன் அங்கிள்.
போனை நானே எடுத்து வச்சிக்கணும்னு நான் நினைக்கவே இல்லை ''
நான் அவனிடம் 500 ருபாய் கொடுத்தேன்.
''காசெல்லாம் வேண்டாம் அங்கிள். ''
''என்னோட சந்தோஷத்துக்காக வாங்கிக்க இளங்கோ. அதுக்கு அப்புறம் இந்த பணத்துல என்ன வேணா பண்ணிக்கோ ''
அவன் சட்டைப்பையில் வைத்துவிட்டு கிளம்பி கடைக்கு வந்தேன் . நான் விற்பனையும், உதவியாளன் ராகுல் ரிப்பேரும் கவனிப்போம்.
ஒரு மணிக்கு நானும் , இரண்டு மணிக்கு மேல் அவனும் உணவு இடைவேளைக்கு செல்வது வழக்கம்.
நான் வீட்டிற்கு சென்று இரண்டு மணிக்கு திரும்ப வந்தபோது கடைவாசலில் அந்த சிறுவன் ,இளங்கோ நின்றிருந்தான்.
ராகுலும் இளங்கோவும் பேசிக்கொண்டு இருந்தார்கள்.
'' இந்த போன்ல டிஸ்பிளே உடைஞ்சு இருக்கு. மதர் போர்டும் போச்சு , இதை ரிப்பேர் பண்றது வேஸ்ட் . 4000 ருபாய் ஆகும். 4000 ரூபாய்க்கு இதே மாடல் புதுபோன் கிடைக்கும்''
'' 500 ரூபாய்க்கு இதை ரிப்பேர் பண்ண முடியாதா ?''
'' ம்ம்ஹூம் முடியாது ''
நான் கடைக்கு உள்ளே நுழையும்போது இளங்கோ சோகமாக வெளியேறினான். நான் கூப்பிட்டேன்.
'' என்ன தம்பி , போன் காட்டு ''
கொடுத்தான்.
''ராகுல் , இதுல எல்லா பார்ட்ஸும் மாத்திடு''
'' பத்து நிமிஷம் வெய்ட் பண்ணு தம்பி ''
''ஓகே அங்கிள் ''
''இந்த போன் யாரோடது , எப்படி உடைஞ்சிது ''
'' அப்பாவோட போன். ஒரு நாள் தெரியாம கீழ போட்டுட்டாரு ''
'' உங்க அப்பா என்ன பண்றாரு''
'' சினிமா தியேட்டர்ல வேலை பண்ணாரு. இப்போ தியேட்டர் எல்லாம் மூடிட்டாங்க. இப்போ 3 மாசமா வீட்ல தான் இருக்காரு. ஆன்லைன் க்ளாஸ் அட்டென்ட் பண்ண போன் வாங்கிதங்கப்பானு கேட்டேன். காசில்லைனு சொல்லிட்டாரு. இப்போ தான் உடைஞ்ச போன் ரிப்பேர் பண்ண பணம் கிடைச்சுது ''
அவனுடன் மேலும் பேசிக்கொண்டு இருந்தேன். ராகுல் போனை தயார் செய்து முடித்து இருந்தான்.
இளங்கோவிடம் கொடுத்தேன். சந்தோசமாக போனை வாங்கிப்பார்த்தான்.
'' எவ்வளவு ஆச்சு ,அங்கிள்''
'' இப்போ உன்கிட்ட எவ்வளவு இருக்கு''
''500 ருபாய் தான் இருக்கு , அதுவும் நீங்க கொடுத்தது தான் ''
அவனிடம் 500 ருபாய் வாங்கிக்கொண்டுமீதம் 400 ருபாய் கொடுத்தேன் .
''100 ருபாய் எடுத்துக்கிட்டேன்பா , போயிட்டுவா''
'' அங்கிள் , காலைல நான் உங்க கிட்ட போன் திரும்ப கொடுத்ததால தானே எனக்கு கம்மியா காசு வாங்கி ரிப்பேர் பண்ணீங்க '' என்றான் .
'' அதுமட்டும் இல்லப்பா , உங்க க்ளாஸ்ல பிரபு னு ஒரு பையன் படிக்கறானா ?''
'' ஆமா அங்கிள் ''
'' அவங்க அப்பா தான் நான் . காலைல நீ படிக்கிற ஸ்கூல் பேர் சொன்னேல, நான் சாப்பிட வீட்டுக்கு போனப்ப , பிரபு கிட்ட இளங்கோ பத்தி தெரியுமா னு கேட்டேன்.
தெரியும்பா ,அவன் தான் எப்பவும் க்ளாஸ்ல ஃபர்ஸ்ட் மார்க். ஆனா ஆன்லைன் க்ளாஸ் ஒரு நாள் கூட அவன் அட்டென்ட் பண்ணவே இல்ல . என்னாச்சுன்னு தெரியலனு சொன்னான் .
நீ ஆன்லைன் க்ளாஸ் அட்டென்ட் பண்ண முடியாம எவ்வளவு மனசு கஷ்டப்படுவேன்னு தெரியும் இளங்கோ. அதன் உனக்கு கம்மி விலைல ரிப்பேர் பண்ணி கொடுத்தேன். நல்லாப் படிக்கணும் ''
''ரொம்ப தேங்க்ஸ் அங்கிள்'' என்று சொல்லிவிட்டு தன் சட்டையில் கண்ணீரை துடைத்துக்கொண்டான்.
அந்த கண்ணீருக்கு பின்னால் சோகமோ , மகிழ்ச்சியோ , அல்லது இரண்டுமே இருக்கக்கூடும் .
..
[#sharedpost](https://www.facebook.com/hashtag/sharedpost?__eep__=6&__tn__=*NK-y)
படித்ததில் பிடித்தது பக
வியாழன், 23 ஜூலை, 2020
நேர்மை
வாசலில் அமர்ந்து நியுஸ் பேப்பர் வாசித்து கொண்டிருந்த மணிவாசகம் காம்பவுண்ட் கேட் திறக்கும் ஓசை கேட்டு நிமிர்ந்தார்.
கேட்டை திறந்தபடி ஒரு 50ஐ கடந்த நபர் நின்றிருந்தார். அழுக்கு சட்டை, எண்ணெய் காணாத தலை, கிழிசல் லுங்கி அணிந்திருந்த அவர் சிநேகமாய் சிரித்தவாறே ஐயா, பழைய நியுஸ் பேப்பர் எடுக்கறேங்க! அம்மா வரச் சொல்லி இருந்தாங்க என்றார்.
ஊம்.. என்ற மணிவாசகம், ”என்ன விலைக்கு எடுத்துக்கறே?”
”இங்கிலீஷ் பேப்பர்னா 12 ரூபா கிலோ! தமிழ்னா பத்து ரூபாங்க!”
“ரொம்ப கம்மியா யிருக்கே!”
”இல்லீங்க போனமாசம் 10 ரூபா 8 ரூபாதான் எடுத்தேங்க! இப்ப ரெண்டு ரூபா கூடியிருக்கு!”
” ஒரு மாசம் பேப்பர் பில் எவ்வளவு தெரியுமா?”
“நமக்கெதுக்குங்க அதெல்லாம்?”
“230 ரூபா சில சமயம் 250 கூட! ஆனா ஒரு மாசம் பழைய பேப்பரை வித்தா பத்து ரூபாதான் கிடைக்குது..!”
”வேஸ்ட் பேப்பர்தானுங்களே? இதை கொண்டு போய் கடையில போட்டா எங்களுக்கு கிலோவுக்கு ஒரு ரூபா கிடைக்கும் அவ்வளவுதான்!”
”சரி சரி உள்ளே வா வீடே ஒரே நியுஸ் பேப்பர் அடைசலா இருக்குண்னு எம்பொண்டாட்டி கத்திக்கிட்டிருந்தா அதான் வர சொல்லியிருக்கா. எடையெல்லாம் ஒழுங்கா போடுவே இல்லே!”
”கரெக்டா இருக்கும் சார்!”
அந்த மனிதர் பழைய இரும்புத்தராசுடன் உள்ளே நுழைய ”லட்சுமி! பழைய பேப்பர் எடுக்க வந்திருக்காங்க சீக்கிரம் வா!”
”நான் கொஞ்சம் அடுப்படியிலே வேலையா இருக்கேன். நீங்களே எடுத்துப் போடக்கூடாதா?”
”அப்ப திருப்பி அனுப்பிச்சரவா?”
”அதெல்லாம் ஒண்ணும் வேணாம் நானே வந்து எடுத்து போட்டுத் தொலைக்கிறேன்.”
லட்சுமி முணுமுணுத்தபடி கிச்சனில் இருந்து வந்து ஹாலில் கப்போர்டில் கிடந்த பேப்பர்களை அள்ளி வராந்தாவில் போட்டாள்.
சிதறிக்கிடந்த பேப்பர்களை அடுக்க ஆரம்பித்தார் அந்த பெரியவர்.
”அப்படியே ஒரு கயிரு போட்டு கட்டி வைச்சிருந்தா எடை போட சுலபமா இருந்திருக்கும்யா!”
”ஏன் நீ கயிறு கொண்டு வர மாட்டியா? ”
“இருக்குய்யா ! வண்டியிலே இருக்கு! போய் கொண்டு வரனும்!”
” போய் கொண்டு வா!”
”அந்த பெரியவர் எழுந்தார்.
ரொம்ப தாகமா இருக்குய்யா! குடிக்க கொஞ்சம் தண்ணீ கிடைக்குமா?”
”கேட்டு ஓரமா ஒரு பைப் இருக்கு பாரு! அதுலே பிடிச்சு குடிச்சுட்டு போய் கயிறு கொண்டுவா!”
பெரியவர் எழுந்து போய் அந்த குழாயை திருகினார். வெயிலில் சுடுதண்ணீராய் கையில் விழுந்த நீரை கொஞ்சம் கீழே விட்டு முகம் கழுவி பின்னர் இரண்டு கை பிடித்து அருந்தினார். முகத்தை தோளில் போட்டிருந்த அழுக்குத்துண்டால் துடைத்துக்கொன்டு வெளியே நிறுத்தியிருந்த அந்த மூன்று சக்கர ட்ரை சைக்கிளை உள்ளே தள்ளிக் கொண்டு வந்தார்.
”கயிரை எடுத்து வான்னு சொன்னா வண்டியையே கொண்டு வந்திட்டியே?” மணிவாசகம் கேட்க
”பேப்பர் நிறைய இருக்குதுய்யா! அதான் எடை போட்டதும் வண்டியிலே எடுத்து போக சவுகரியமா இருக்கும்னு கொண்டு வந்தேன்.”
”சரி பெரியவரே! உங்க பேரு என்ன?”
“முத்து”
“எத்தனை வருஷமா இந்த தொழில் பண்றீங்க?”
”அது ஆகிப்போச்சுங்க முப்பது வருஷம்!”
”ஒருநாளைக்கு எவ்வளோ கிடைக்கும்.?”
”அது வியாபாரத்தை பொருத்துங்க! வீடுங்கள்லே வேண்டாம்னு எவ்வளோ தூக்கி போடறீங்களோ அவ்வளவும் எங்களுக்கு சோறூ போடற தெய்வங்கள்!”
பேசிக்கொண்டே இருந்தாலும் பெரியவர் முத்து பேப்பர்களை இரண்டு மூன்று அடுக்குகளாக அடுக்கி கட்டினார். அப்புறம் எடை போட ஆரம்பித்தார். இரண்டு கிலோ எடைக்கல் ஒன்றும் ஒருகிலோ எடைக்கல் ஒன்றையும் சேர்த்து தராசில் வைத்து மறுபக்கம் பேப்பர்களை வைத்தார்.
தூக்க முடியாமல் தராசை தூக்கி நிறுத்த முள் பேப்பர் இருந்த பக்கம் தாழ்ந்தது. கொஞ்சம் பேப்பர்களை எடுத்துவிட்டு மீண்டும் நிறுத்தார்.
இதற்குள் வார இதழ்கள் சில நாவல் புத்தகங்கலையும் என் மகன் படித்து முடித்த கல்லூரி பாடப் புத்தகங்களையும் கொண்டுவந்து போட்டாள் லட்சுமி.
” பேப்பர் வரைக்கு 5 எடை இருக்குய்யா! அஞ்சு மூணு 15 கிலோ.
”புக் எல்லாம் எட்டு கிலோ இருக்கு மொத்தம் 23 கிலோ.
பேப்பருக்கு 150 ரூபா. புக்கு கிலோ பன்னெண்டு ரூபா அப்போ தொண்ணூத்தாறூ ரூபா. மொத்தம் எரநூத்து நாப்பத்தாறு ரூபா ” என்றவர் "ஐயா, எதாவது தக்காளி வெங்காயம் வேணுங்களா?”
”உன் அழுகின தக்காளி யாருக்கு வேணும்? பணத்தை கொடுத்திட்டு பேப்பரை எடுத்துட்டு கிளம்பு.”
”ஐயா, அம்பது ரூபா கம்மியா இருக்கு! அதுக்கு எதாவது வெங்காயம் தக்காளி வாங்கிக்குங்க!”
”அதானே பாத்தேன். இப்படி எதையாவது சொல்லி அழுகுன தக்காளியை தலையிலே கட்டப் பாக்கறீயா?”
”இல்லே சார். இன்னைக்கு காலையிலே மார்க்கெட்ல எடுத்த புது தக்காளி நீங்களே பொறுக்கி எடுத்துக்கங்க! ரெண்டரை கிலோ ஐம்பது ரூபா”
”மார்க்கெட்ல தக்காளி கிலோ பாஞ்சு ரூபாதான்!”
”அது நேத்து ரேட்டுங்கய்யா! இன்னிக்கு கிலோ இருபது ரூபாதான்! உங்களுக்கா வேனும்னா மூணு கிலோ போடறேன்”
”யாருக்கு வேணும் உன் பிச்சை! ரூபா இருந்தா கொடுத்துட்டு பேப்பரை எடுத்துக்கோ. இல்லேன்னா கிளம்பு. நாங்க வேற ஆளுக்கு போட்டுக்கறோம்!”
” முத போணி ஐயா! காலையிலே இருந்து வெயில்ல சுத்திட்டு வரேன்! கடைக்கு இன்னும் அஞ்சு கிலோ மீட்டர் போகணும் ”
”அதுக்கு”
”இரு நூரு ரூபா இப்ப வாங்கிடுங்க! மிச்சம் ஐம்பது ரூபா நாளக்கி வரும்போது கொடுத்துடறேன்!”
”முழுசா அம்பது ரூபாயை ஆட்டையை போட பாக்கிறீயே?”
”அப்படியெல்லாம் பண்ண மாட்டேன்யா! இந்த ஏரியாவுலேதான் முப்பது வருஷமா வியாபாரம் பண்ணிகிட்டு இருக்கேன். உங்க துட்டு எனக்கு வேண்டாம்யா! ஏமாத்தி துண்ணா உடம்புலே ஒட்டாதுய்யா! நாளைக்கு கண்டிப்பா கொண்டு வந்து கொடுத்துடறேன்யா!”
”அப்ப ஒண்ணு பண்ணு இருநூரு ரூபாவுக்கு எவ்வளோ பேப்பரோ அதை மட்டும் எடுத்துட்டு போ! நாளக்கி வரும்போது மீதி பணம் கொடுத்திட்டு மிச்சத்தை எடுத்துப்போ” கறாராக சொன்னார் மணி வாசகம்.
இனி பேசி பிரயோசனம் இல்லை என்று அவர் சொன்னபடி இருநூறு ரூபாயை கொடுத்துவிட்டு பேப்பர் பதினைந்து கிலோவையும் நாலு கிலோ எடை புத்தகத்தையும் எடுத்துக்கொண்டு கிளம்பினார் முத்து.
”‘பாவங்க அந்தாளு! இப்படி பச்சாதாபமே இல்லாம விரட்டறீங்க!அந்த அம்பது ரூபாவை அவன் ஏமாத்த மாட்டான். அப்படியே ஏமாத்தினாலும் நாம கொறைஞ்சா போயிருவோம்.”
”ஏன் பேச மாட்டே? ஒவ்வொரு ரூபாவும் நான் உழைச்சு சம்பாதிச்சு இந்த அளவுக்கு வந்திருக்கேன். யாருகிட்டேயும் நான் ஏமாறத் தயாரா இல்லே! அவன் நாளக்கி வர மாட்டான் பாரு. இந்த மாதிரி எத்தனை பேரை நான் எடை போட்டு வைச்சிருக்கேன் தெரியுமா? அந்த ஓட்டை தராசுலே எடை போட்டா எப்படியும் கிலோவுக்கு நூறு கிராம் லாபம் கிடைக்கும். நம்மகிட்டே பத்து ரூபாய்க்கு எடுத்து பன்னென்டு ரூபாவுக்கு விப்பான். ஏமாந்தா எடையிலே இன்னும் கொள்ளையடிப்பான்.
”இப்படி ஒரு ரூபா ரெண்டு ரூபா லாபம் வரலைன்னா அவன் தொழில் செஞ்சு பிரயோசனம் இல்லாம போயிருங்க! அவன் வயித்து பொழைப்ப பாக்க வேணாம்.
”சரிசரி! அவனாலே நமக்குள்ளே எதுக்கு பிரச்சனை? ஆக வேண்டிய வேலையைப்பாரு” என்று மனைவியை அடக்கினார் மணிவாசகம்.
மறுநாள் மணி வாசகம் சொன்னபடி முத்து வரவில்லை! பொழுது சாய்ந்துவிட்ட்து.
“பார்த்தியா! நான் சொல்லை! அவன் வர மாட்டான்னு!” என்று அமர்த்தலாக சொன்னார்.
”இன்னிக்கு வேற லைன்ல போயிருப்பார். நாளைக்கு வருவார்னு நினைக்கிறேன்.”
”உன் நினைப்பை காயப்போடு. நமக்கு நாலு கிலோ பேப்பர் மிச்சம் ஆச்சு! இல்லேன்னா அம்பது ரூபா நஷ்டம் ஆகியிருக்கும்”.
லட்சுமி தலையில் அடித்துக்கொண்டு உள்ளே சென்றாள்.
மறுநாள் அதிகாலை வேலையிலேயே கேட் கதவு திறக்கவும் செடிகளுக்கு நீர் விட்டுக்கொண்டிருந்த மணி வாசகம் அப்படியே போட்டுவிட்டு கவனித்தார்.
முத்து உள்ளே நுழையவும் தன் கணிப்பு பொய்யாகி விட்ட்தே என்ற வருத்தமுடன்
”என்னய்யா! அம்பது ரூபா கொண்டு வந்துட்டியா?”
”இல்லீங்கய்யா. நான் வந்தது”
”தான் நினைத்தது சரிதான் என்று உள்ளுக்குள் பெருமிதப்பட்டு கொண்டு அம்பது ரூபா இல்லாம பேப்பர் போட முடியாது என்றார்.
”சரிங்கய்யா! நான் அம்பது ரூபா கொடுத்திட்டே பேப்பர் எடுத்துக்கறேன் .ஆனா”
”என்னய்யா ஆனா?”
”முந்தா நாள் நீங்க போட்ட புக்ஸ்களை எடுத்துட்டு போனேன். அதுல சில பாட புஸ்தகமும் இருந்தது. அதை கடையிலே போடறதை விட பழைய புத்தக கடையில கொடுத்தா கொஞ்சம் ரூபா அதிகம் கிடைக்கும்னு தனியா எடுத்து வைச்சேன். பேப்பரை மட்டும் கடையிலே போட்டுட்டு வீட்டுக்கு போய் புக்ஸ்களை புரட்டினேன். அப்ப அதிலே இந்த காசு இருந்துச்சுய்யா? என்று இரண்டு ஐநூறு ரூபா நோட்டுக்களை நீட்டினார் முத்து.
மணிவாசகம் அதிர்ந்து போனார். ஐம்பது ரூபாயை நம்பாத நான் எங்கே ஆயிரம் ரூபாயை அதுவும் எப்போதோ வைத்து நான் மறந்து போன அந்த ரூபாயை திருப்பி தரும் முத்து எங்கே? மிகவும் எடையில் மிகவும் தாழ்ந்து போய் விட்டோமே என்று வருத்தம் அவர் முகத்தில் அப்பட்டமாய் தெரிந்தது.
மனம் தெளிவடைந்தவராய் ”பெரியவரே! புத்தகத்தை எடைக்கு போட்டப்புறம் அது உங்களுக்குத்தான் சொந்தம். அதுலே பணம் இருந்தாலும் அது உங்களோடதுதான். நீங்களே வச்சுக்கங்க!”
“நீங்க பெரிய மனசோட இந்த பணத்தை கொடுத்தாலும் உழைக்காம இவ்வளோ பணம் கிடைச்சா அப்புறம் அது என் மனசை மாத்திடும். இதே மாதிரி தினமும் கிடைக்காதான்னு ஏங்க வைக்கும். அப்புறம் என் நேர்மையை கொன்னுடும். வேணாங்கய்யா! இதை நீங்களே வச்சிக்குங்க! ”என்று மணிவாசகம் கையில் ரூபாயை திணித்துவிட்டு கிள்ம்பினார் முத்து.
”பெரியவரே ஒரு நிமிஷம்! நேத்து எடை போட்டு வைச்ச புத்தகத்தையாவது எடுத்துட்டு போங்க!”
”அம்பது ரூபா கிடைச்சதும் கண்டிப்பா வரேன்! ”சொல்லிவிட்டு அவர் நடக்க அப்படியே உறைந்து போய் நின்றார் மணிவாசகம்.
பேரன்பைப் பொழிவதே ேபேரானந்தம்
*💗இன்றைய சிந்தனை...*
*நேசித்துப் பெறும் தோல்வி..!!*
உலகை இயக்கும் மாபெரும் சக்தி எது என்று என்னைக் கேட்டால் அன்பு தான் என்பேன்.
உள் மன அமைதி முதல் உலக அமைதி வரை அனைத்தும் அன்பினால் மட்டுமே சாத்தியம். அன்பு குறையும் போது மனதில் வன்மம் வளர்கிறது. அன்பு வற்றிய மனம் தான் பிறர் துயரைப் பார்க்க மறுக்கிறது. அன்பு போதாமை தான் குற்றங்கள் செய்யத் தூண்டுகிறது. நம் எல்லோரிடத்திலும் அன்பு இருக்கிறது. ஆனால் அது மிகக் குறுகிய வட்டத்தில் பலகீனமாக இயங்குகிறது. அதுவும் நிபந்தனைகளுடன் அளிக்கப்படுகிறது. நம் அன்பு ஏற்றுக்கொள்ளப்படா விட்டால் அது வெறுப்பாக மாறுகிறது. நமக்கு வரும் அன்பு பகிரப்பட்டால் நாம் கொடுக்கும் அன்பு குறைகிறது. ஒரு பக்கம் உள்ள அன்பு இன்னொரு பக்கம் செல்கிறது.
*சக்தியின் அடையாளம்..*
அன்பை நிரூபிக்க மனம் பல விளையாட்டுக்கள் புரிகிறது. அன்பைப் பெறவும் பல வித்தைகள் புரிகிறது. பாதகங்கள் செய்யும் போதெல்லாம் அன்பினால் என்று வசனம் பேச வைக்கிறது. எந்த அன்பு நிஜம் என்று தெரியாமல் பல நேரங்களில் குழம்புகிறது மனம். தன்னலம் கருதாமல் பிரதி பலன் எண்ணாமல் பிறர் மீது செலுத்தும் உணர்வு தான் அன்பு. அது பெறுபவரின் தகுதி அல்ல. கொடுப்பவரின் தகுதி. அது கொடுக்கல் வாங்கல் வியாபாரம் அல்ல. அள்ளித் தரும் அளவற்ற சக்தியின் அடையாளம்.
பிள்ளை மீது தாய் உயிரையே வைக்கிறாள். காதலியைக் காதலன் உயிரே என்று அழைக்கிறான். நட்பு தான் உயிரை விடப் பெரிது என்கிறான். கொள்கைக்கு உயிரைக் கொடுப்பேன் என்று பறை சாற்றுகிறான் தொண்டன். அடிப்படையில் அனைத்தும் அன்பு தானே?
*ஆள் பார்த்துதான்..*
இவ்வளவு சக்தி மிகுந்த அன்பு ஏன் தடைபட்டுப் போகிறது?
இரண்டாம் பிள்ளை வந்தவுடன் முதல் பிள்ளை தனிமையை உணர்கிறது. மகன் மணந்தவுடன் தாய் தனிமைப்படுகிறாள். ஒருதலைக் காதல் என்றால் காதலனோ காதலியோ தனிமையைத் தழுவுகிறார்கள். அன்பைப் பெறும் போராட்டத்தில் தான் வலிகள் ஏற்படுகின்றன. ஆனால், அன்பைக் கொடுப்பவர்களுக்கு என்றுமே தோல்வியில்லை. நம் அன்பு எத்தனை பரந்து விரிந்துள்ளது என்பதில் தான் நம் மன வளம் அடங்கியுள்ளது.
நம் குழந்தை மீது கொண்டுள்ள அதே அன்பை பிற குழந்தைகள் மீது நம்மால் கொள்ள முடிந்தால் அது தான் அளவற்ற அன்பு. இது யதார்த்தத்தில் நடக்குமா? சாலையில் யாரோ ஒரு பெண் அடிபட்டுக் கிடக்கிறாள் என்றால் அதை ஒரு செய்தியாக மட்டும் உள்வாங்குகிறது மனம். ஆனால், அது தன் பெண் என்று தெரிந்தவுடன் பதை பதைக்கிறது. ஏன் என்றால் ஆள் பார்த்து தான் அன்பு வருகிறது!
ஆனால், சாலையில் அடிபட்டிருக்கும் பெண்ணைத் தன் பெண்ணாக நினைக்க முடிந்தால், அங்கு நிபந்தனையில்லா அளவற்ற அன்பு சுரக்கிறது என்று பொருள். நம் பிள்ளை சாப்பிடாமல் படுத்தால் மனம் பதை பதைக்கிறது. ஆனால், நம் தெருவிலேயே எத்தனை பிள்ளைகள் பசியோடு உறங்குகிறார்கள் என்று நினைத்துப் பார்க்கிறதா மனம்? இப்படிப் பிறர் மீது நிஜமான அன்பும் அக்கறையும் கொண்டால் நம்மால் குற்றங்கள் செய்ய இயலாது.
*அன்பைத் தின்னும் சுயநலம்..*
மக்கள் மீது அன்பு கொண்ட அரசியல் தலைவர்கள் மக்கள் பணத்தில் ஊழல் செய்ய மாட்டார்கள். மக்கள் வரிப்பணத்தில் மக்கள் விரோதத் திட்டங்களைச் செயல்படுத்த மாட்டார்கள். ரசிகர்கள் மீது நிஜமான அன்பிருந்தால் சினிமாக்காரர்கள் தாங்களே தங்கள் குடும்பத்துடன் உட்கார்ந்து பார்க்க முடியாத வன்முறையான ஆபாசமான சினிமாக்கள் எடுக்க மாட்டார்கள். துன்பம் இழைக்கப்பட்டவர் மீது உண்மையான அன்பிருக்கும் ஊடகக்காரர்கள் துன்புறுத்தும் கேள்விகள் கேட்டு, அவற்றை எழுதி, படமாகக் காட்டி பாதிக்கப்பட்டவர்களைக் காயப்படுத்த மாட்டார்கள். வாடிக்கையாளர்கள் மீது நிஜமான அன்பிருந்தால் வியாபாரிகள் மோசமான பொருட்களை அநியாயமான விலைக்கு விற்க மாட்டார்கள்.
பிற மனிதர்கள் மீது அன்பிருந்தால் நம்மைச் சுற்றியுள்ளவர்கள் வறுமையில் தவிக்கையில் நம்மால் குற்ற உணர்வில்லாமல் மிதமிஞ்சிய சுகபோகங்களை அனுபவிக்க இயலாது. பிறர் உணர்வுகளைக் கண்டு கொள்ளாமல் செல்வதற்குப் பழகுகையில் அன்பு வற்றத் தொடங்குகிறது. அது அதிக பட்சம் ஓரிருவர் மீதுகூடச் செலுத்த முடியா வண்ணம் பற்றாக்குறை ஆகிறது. சுயநலம் அன்பைத் தின்ன ஆரம்பிக்கிறது. இதுதான் நம்மைச் சமூகத்துக்கு எதிரான மனிதர்களாக மாற்றுகிறது.
‘யாருக்கு என்ன நடந்தாலும் நம் வேலை நடந்தால் சரி’ என்பது பொது விதியாகிறது, பிழைக்கச் சொல்லித் தரும் கல்வி, அன்பைப் போதிக்கத் தவறுகிறது. பிறரை மிதித்துப் பெறும் வெற்றியை விடப் பிறரை நேசித்துப் பெறும் தோல்வி மகத்தானது என்று அடுத்த தலைமுறைக்காவது சொல்லித் தர வேண்டும்.
*அன்பை அள்ளித் தரும் மனம் விரிவடையும். உறுதி பெறும். பொலிவு பெறும்.*
அன்பு காட்டுபவர்கள் முகத்தில் உள்ள பரவசக் களிப்பை பாருங்கள். அது ஆயிரம் பாடங்கள் சொல்லும். செடிக்கு நீர் ஊற்றும் போதோ, நாய்க்குச் சோறிடும் போதோ, பிள்ளைக்குப் பாலூட்டும் போதோ, ஆர்வத்துடன் பாடம் சொல்லிக் கொடுக்கும் போதோ, ரசிகர்களுக்காகப் பாடகர் குழைந்து பாடும் போதோ, அன்புடன் கொடுக்கும் எல்லாத் தருணங்களிலும் மனிதர்கள் அழகாய்த் தெரிவார்கள்!
பெரிய அறிவும் சிறிய அன்பும் கொண்ட மனிதர்கள் வாழும் சமூகம் ஆபத்தானது. அன்பு கலக்காத அறிவு, நாசத்தை மட்டுமே நடத்திக் காட்டும். எல்லா உயிரும் ஓருயிரே என்று உணர்ந்து அன்பு செலுத்துவது தான் பேரன்பு. அது தான் பேரறிவு. அழியாத அன்பைத் தர ஆயிரம் வழிகள் உள்ளன!
*பேரன்பைப் பொழிவதே பேரானந்தம் என்று உணர்கையில் நம் மனம் சுகம் பெறும். வாழ்க்கை வளம் பெறும்!*
*💗வாழ்க வளமுடன்💗*
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஞாயிறு, 19 ஜூலை, 2020
காதலிக்க நேரமில்லை- தமிழ் சினிமாவின் வரம்
அதே காதல் கதை தான்.. ஆனால்... திரையில்... விளையாடி இருக்கும்... அனுபவம்.. புதுமைதான்.....
சின்னமலை எஸ்டேட் முதலாளி விஸ்வநாதனிடம் வேலை கேட்டு டெண்ட் போட்டு போராடி....பக்கெட்டால் அடி வாங்கி... பின் அவரின் இளைய மகள் ராஜஸ்ரீ மீது காதல் கொண்டு அந்தப் பெண்ணுக்கும் தன் மீது காதல் வர வைக்கும் அசோக்.... ஏழை பணக்காரன் இடைவெளியில் மாட்டிக் கொண்டு விழிக்கும் தன் காதலை சேர்த்து வைக்க...தன் நண்பன் வாசுவிடம் பணக்கார அப்பாவாக வேஷம் அணிந்து வர சொல்கிறான்... வாசுவாசுவும் நண்பனுக்காக வருகிறான்.. வந்து அசோக்கின் அப்பாவைப் போலவே நடிக்கிறான்.... அங்கே அவனுக்கு ஒரு சந்தோஷ ஷாக்.. விஸ்வநாதனின் இரண்டு பெண்களில் மூத்தவள் காஞ்சனாதான் வாசுவின் காதலி... இனி சொல்லவா வேண்டும்.. இருவரும்.. தங்கள் காதலுக்காக நடத்தும் நாடகம்தான் எவர்க்ரீன் ... அட்டகாச "காதலிக்க நேரமில்லை..."
வாசுவாக வரும் முத்துராமன்..அப்பாவாக வேஷம் போட்டதுமே பட்டென்று வேறு ஓர் உடல்மொழிக்குள் நுழைந்து விடுவது நடிப்பின் பல்கலைக் கழக திறவுகள். நிறைய திரைப் பகிர்வுகள் கொண்ட ஒரு நடிகன் அவர்... எந்த வித ஈகோவும் இல்லாமல்.. புது முகத்துக்கு அத்தனை இடம் அளித்திருப்பது.. அவரின் பண்பட்ட நடிப்பை மட்டுமல்ல... தொழில் மீது கொண்ட பக்தியையும் காட்டுகிறது.
எழுத்து போட்டு முடிந்ததுமே முத்துராமன்... காஞ்சனாவின் பாடலோடுதான் படமே ஆரம்பிக்கிறது.. இப்படி....பாடலோடு படத்தை ஆரம்பிக்கும் புதுமை விரும்பிகளில் ஸ்ரீதர்க்கும் இடமுண்டு என்பதில் ஆச்சரியமே இல்லை.. அவர் அப்படித்தான்...கருப்பு வெள்ளையில் ஓர் ஈஸ்ட்மென் இயக்குனர்...
அசோக் ஆக வரும் அறிமுக நாயகன் ரவிச்சந்திரன்... அம்சம்... அழகு... ஆர்வம்... ஒரு வகையான நளினத்தோடே வலம் வருவது புன்னகை...மலேசியாவில் இருந்து புறப்பட்ட கனவு நாயகனை மெல்ல திறந்து விடும்... பருவம் வடியும் முகத்தில்...காதலிக்க நேரமில்லை என்று யாரும் கூற முடியாத கவர்ச்சி....படம் நெடுக... நவ நாகரிக இளைஞனை கண் முன் நடத்துக்கிறார்..
வாசுவின் அப்பாவாக வரும்.. ராகவன்.. அவரின் பாத்திரத்தில் வழியாமல்.. நிறைந்து நிற்கிறார் வழக்கம் போல... சற்று டெசிபல் அதிகம் தான் என்றாலும் அவரின் குரல் வந்தாலே ஒரு வகை நெருக்கத்துக்குள் மனம் புகுந்து விடுவதை மீண்டும் மீண்டும் விரும்புகிறது..... நினைவுகள்.
ராஜஸ்ரீயின் கன்னங்களில்... காதலை... அள்ளலாம் போல. அனுபவம் புதுமை பாடலில் ஒரு காட்சியில் டைட் க்ளோஸ் போயிருப்பார்கள் ஒளிப்பதிவாளர்கள் வின்சென்ட்டும் சுந்தரமும். வாலிபத்தை தூண்டி விடும்.. மிகச் சிறந்த காதல் நுணுக்கத்தின் மொத்தத் திரையும்... பருவம் சொட்டும் மதி மயக்கமென தீரவே முடியாத பெண்மைக்குள் நம்மையும் இழுத்து விடும்.......
விஸ்வநாதன்- பாலையா....
என்ன சொல்வது.. ஒவ்வொரு காட்சிக்கும் அவர் அடிக்கும் சிக்ஸர் ஐ .. பேசாமல் விட்டு விட்டு வேடிக்கைதான் பார்க்க முடியும்.. அசராமல் மனிதர் நொறுக்குகிறார்... உடல் மொழி ஆகட்டும்.. உள்ள மொழி ஆகாட்டும்.. வசனத்தின் நேரமாகட்டும்... அது கொண்ட கூராகட்டும்... மொத்த கதையின் பாதியயைத் தன் தோள் மீது சுமந்து கொண்டு திரியும்.. நடிப்பின் அசாத்தியத்தை மெச்சத்தான் வேண்டும். "..போதும்பா.. கதை இதுக்கு மேல பயங்கரமா இருக்கும் போல. என்று மிரண்டு அலறும் பாதிக் கதையின் இரவுக்குள் நாம்.. கதவுகளையும்..... ஜன்னல்களையும் அடைத்து வைத்துக் கொண்டு சிரிக்காமல் இருக்கவே முடியாது...
மீனாவாக வரும் சச்சு.. அழகி... எப்படி காமெடிக்கு போனார் என்று சந்தேகம் வருகிறது..."மலரென்ற முகம் ஒன்று சிரிக்கட்டும்..."- அள்ளுது.... சச்சுவின் ஆட்டம்... துள்ளல்...நாகேஷ் திருப்பிய பொம்மையாக அசத்தும் சச்சுவின் அளவான தேவையான நடிப்போ... பார்வையோ.. நடனமோ... அது நாடத்தில் இருந்து கற்றவை என்பதை மிக அழகாக காட்டுகிறது... அவருக்கு வைக்கும் பிரேம்....
விமானப் பணிப்பெண்ணாக இருந்த வசுந்தரா தேவியை அழைத்து வந்து காஞ்சனாவாக்கி ...."என்ன பார்வை.. உந்தன் பார்வை ...." என்று ஆட விட்டிருப்பது.. சினிமாவின் சாத்தியம்....... சத்தியம். ஓவியத்தில் இருந்து வெளி வந்த பெண்ணைப் போல.. இருக்கும்... காஞ்சனாவை... காலம் கடந்து சென்று காதலிக்க வைத்து விட... மீண்டும் ஸ்ரீதரே வேண்டும்.....
"உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா.... உதவிக்கு வரலாமா.. சம்மதம் வருமா.. சந்தேகம்...தானா..." P B ஸ்ரீநிவாஸ்- ன் தேன் நழுவும் குரலில்.. ... அட்டகட்டி காட்டுக்குள்.. கொஞ்ச தூரம் வண்டி ஓட்டலாம் போலதான் தோன்றியது...
இருக்கும்....அறிவையெல்லாம் மொத்தமாய் கொட்டி விட்டாரோ என்ற சந்தேகத்தோடு தான் கவியரசைக் காண வேண்டி இருக்கிறது.. விஸ்வநாதன் ராமமூர்த்தி.. இசை தெய்வங்கள்...
"ஓஹோ புரடக்சன்" செல்லப்பா.... என்று ஸ்டைலாக நாகேஷ் கூறும் போது நான் வீட்டுக்குள்ளேயே விசில் அடித்து கத்தினேன்...அவர் வரும் காட்சிகளில் எல்லாம்.. ஒரு படி அதன் நிறத்தை மாற்றி அமைத்து இன்னும் கொஞ்சம் சுவாரஷ்யம் சேர்த்து விட்டு கையில் பேடோடு பிரேமை கூர்ந்து கவனித்தபடி திரையை விட்டு வெளியேறும் போது.. யப்பப்பா...மகா கலைஞன் மிரட்டுகிறான்....இந்த நடிப்பு பித்தனிடம் மெய் மறந்து கிடக்கத்தான் இன்னும் காத்திருக்கிறது.... காதலிக்க நேரமில்லை கண்கள். சச்சுவோடு காடு மலை எல்லாம சுற்றி கடைசி வரை படம் எடுக்காமல் போவதும்.. பின் அவர் கை பிடிப்பதும்... சிரிப்பின்... சீசாக்கள். திறந்து திறந்து திறந்து கொண்டே இருப்பது... நாகேஷ் எனும்... தவம்..
அதுவரை தன்னிடம் வேலை செய்து வந்த அசோக்.. ஒரு கோடீஸ்வரனின் பிள்ளை என்று தெரிந்த பின்.. அசோகனை "அசோகர்" என்று அழைக்கும் அந்த நடுக்கத்தில் பாலையாவின்... விஸ்வரூபம்... நம்மை அறியாமல் சத்தம் போட்டு சிரிக்க வைத்து கை தட்ட வைக்கும் அதிர்வலைகள் நம்மை சுற்றி தானாகவே உருவாக்கி விடுகிறது...அது காலத்தின் நல்ல சினிமாவின் சாட்சிகள்...
சின்னமலை எஸ்டேட் என்பது வேறு எங்கும் இல்லை.. ஆழியார் தான். சினிமாவுக்காக சின்னமலை ஆக மாற்றி இருக்கிறார்கள். ஆனாலும்.... சின்னமலை எஸ்டேட்டாகவே இன்னமும் ஆழியாரைக் கடக்கையில் தோன்ற வைத்து விட்டதில்தான் ஸ்ரீதரின் ஆக்கம் ஒளிந்திருக்கிறது...
இன்னமும் நாகேஷ் சொல்லிக் கொண்டிருக்கும் கதையும்..அதற்கு.....பாலையாவின் எதிர்வினைகளும் கண்களின் திரையை விட்டகலவில்லை...அது எல்லா காலத்துக்கும் தன்னை மாற்றிக் கொண்டே நகரும்..... சதுர பொக்கிஷம்.
- கவிஜி
பயத்தை கொல்வோம் - கொரானாவை வெல்வோம்
ஒரு நாள் இரவு... மன்னனின் காதில் ஒரு பூச்சி நுழைந்து விட்டது .
காதில் இருந்த பூச்சியை எடுக்கமன்னனைச் சேர்ந்தவர்கள் படாத பாடுபட்டார்கள்
அவர்கள் முயற்சி எதுவும் பலிக்கவில்லை.
ராஜவைத்தியரிடம் பிரச்னையைச் சொன்னான் .
அவரும் எவ்வளவோ பாடுபட்டார் .
தொலைதூரத்தில் இருந்து மூலிகைகள் வரவழைக்கப் பட்டன
மூலிகையைப் பிழிந்து சாறு எடுத்து மன்னனின் காதிற்குள் விட்டார்கள்.
எதற்கும் பலன் இல்லை .
மன்னனின் காதில் உள்ள பூச்சி பிரச்னையைத் தீர்த்து வைப்பவர்களுக்கு பிரமாண்டமான பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
எங்கிருந்தெல்லாமோ வைத்தியர்கள் வந்தார்கள் ,யாராலும் அந்தப் பூச்சியை வெளியே எடுக்க முடியவில்லை .
மன்னனின் காதிற்குள் அந்தப் பூச்சி அங்கும் இங்கும் பறந்துகொண்டிருந்ததால்,அவனால் நிம்மதியாக தூங்க முடியவில்லை
உணவு சாப்பிடுவது குறைந்து
மன்னன் தன் பொலிவு இழந்தான் .
ராஜ கம்பீரமாக உலா வந்து கொண்டிருந்தவன் ,
இப்போது பஞ்சத்தில் அடிபட்டவனைப்போல் காணப்பட்டான்
எந்த நேரமும் படுக்கையிலேயே இருந்தான் .
தன்னுடைய முடிவு நெருங்கிவிட்டது என்பதாக உணர்ந்தான்.
இந்த நேரத்தில் இமயமலையிலிருந்து ஒரு துறவி சீடர்கள் புடை சூழ நாட்டிற்கு வந்திருப்பதாக செய்திகள் வந்தன .
அரண்மனைக்கு வந்து சேர்ந்த துறவி
மன்னனின் காதை நன்றாகப் பரிசோதித்தார் .
பின் சிறிதுநேரம் தியானத்தில் ஆழ்ந்தார்.
"இது மிகவும் அபூர்வ வகை பூச்சி அரசே!
நம் பக்கத்து மூலிகைகளுக்கு இது கட்டுப்படாது .
இங்கிருந்து நூறு யோஜனை தூரத்தில் உள்ள ஒரு காட்டில் விளையும் அபூர்வமான ஒரு மூலிகைக்குத்தான் இந்தப் பூச்சி கட்டுப்படும் .
இன்றே என் சீடர்களை அனுப்பி அந்த மூலிகையை கொண்டு வர செய்கிறேன்,அதன்பின் உங்கள் பிரச்னை முற்றிலுமாகத் தீர்ந்துவிடும்." என்றார்.
அந்த மூலிகையை எப்படி இனம் கண்டுகொள்ள வேண்டும் என்று விளக்கிச் சொல்லி,தன் சீடர்களில் சிறந்தவர்கள் இருவரை அனுப்பி வைத்தார் துறவி
மூன்றே வாரங்களில் சீடர்கள் மூலிகையுடன் வந்தார்கள்.
அது 'ராஜ மூலிகை' என்பதால்
அதை வைத்து ஒரு நாள் முழுவதும் பூஜை செய்யவேண்டும் என்று துறவி சொல்லி விட்டார் .
மறுநாள் காலை விடிவதற்கு முன்னால் ,பிரம்ம முகூர்த்த நேரத்தில் மன்னனின் காதில் அந்த மூலிகைச் சாறு அரைத்து ஊற்றப்பட்டது
அடுத்த சில நொடிகளில் செத்த பூச்சி வெளியில் வந்து விழுந்தது .
மன்னனிடம் அந்தப் பூச்சியைக் காட்டினார் துறவி .
துறவியின் கால்களில் விழுந்து வணங்கினான் மன்னன்.
மன்னன்இப்போது நிம்மதியாகத் தூங்கினான் .
நன்றாக உண்டான்,பழைய பொலிவு திரும்பி விட்டது
துறவி விடை பெற்றுக்கொண்டார் .
அவர்கள் நாட்டு எல்லையைத் தாண்டியதும் ,துறவியின் சீடர்களில் ஒருவன் கேட்டான்
""குருதேவா...!!! அந்த அற்புதமான மூலிகை பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்...!!!'
துறவி புன்னகை பூத்தார் !
"பூச்சி அத்தனை நாள் எங்கே இருந்தது என்று நினைக்கிறீர்கள்?
மன்னனின் செவிக்குள் .
அதுதான் இல்லை
மன்னனின் காதிற்குள் பூச்சி போனது உண்மையாக இருந்திருக்கலாம் .
போன சிறிது நேரத்திலேயே அது செத்திருக்கும் ,இல்லை வெளியே வந்திருக்கும்
அந்தச் சிறிது நேரத்தில்
அது மன்னனின் செவிகளுக்குள் ஒரு குறுகுறுப்பு உணர்வை ஏற்படுத்திவிட்டது .
அது மன்னனின் மனதில் அது குறுகுறுப்பு உணர்வை ஆழமாகப் பதிந்துவிட்டது
எனவே அந்தப் பூச்சிகாதுக்குள் உயிருடன் இருப்பதாகவே மன்னன் நினைத்துக் கொண்டிருந்தான்
"குருதேவா அதை விளக்கிச் சொல்லி மன்னனை குணப்படுத்தியிருக்கலாமே...???''
மனோவியாதியை அப்படி எளிதாகக்குணப்படுத்திவிட முடியாது அப்பனே....!!!
பிரச்னை தீவிரமானது என்று மன்னன் நினைத்துக் கொண்டிருந்தான் .
அதனால் தான் நானும் சிகிச்சை தீவிரமானது என்று பாசாங்கு செய்தேன் .
தொலைதூரத்தில் இருந்து மூலிகை வர வேண்டும் என்று பொய் சொன்னேன் .
அந்த மூலிகை நம் ஊரில் சாதாரணமாக விளையும் திருநீற்று பச்சிலைதான் .
ஆனால் அதை யாரும் கவனிக்காமல் பார்த்துக் கொண்டேன்
பின் ஒருநாள் பூஜை செய்து
காலை இருட்டு நேரத்தில் மூலிகைச் சாற்றை மன்னனின் காதில் விட்டு
ஏற்கனவே பிடித்து வைத்திருந்த ஒரு செத்த பூச்சியைக்காட்டினேன் .
மன்னன் நம்பி விட்டான்
அவன் நோயும் தீர்ந்தது.
சீடர்கள் வியப்புத் தாளாமல் தங்கள் குருவைப் பார்த்தார்கள்.
இன்று மனித இனத்தைப் பீடித்திருக்கும் நோய்களில் பெரும்பான்மையானவை
நம் மனங்களில் தான் இருக்கின்றன.
காதில் நுழைந்த பூச்சி செத்துவிட்டாலும், மனதில் நுழைந்தபூச்சிதான் நம்மைச் சாகடித்துக் கொண்டிருக்கிறது
பூச்சி காதில் இல்லை ,மனதில் இருக்கிறது
'இது நகைச்சுவை அல்ல;
இது வாழ்வியல் கருத்தை நச்சென்று சொல்லும் விளக்கம் .
காதில் இல்லாத பூச்சிக்காகத் தன் உடல்நலத்தைக் கெடுத்துக் கொண்ட மன்னன் போல
இல்லாத பிரச்னையை, இருப்பதாக நினைத்துக்கொண்டு,நம்மில் பலபேர் தவித்துக் கொண்டிருக்கிறோம்!
("கொரோனா, இல்லவே யில்லை", என்று சொல்லவில்லை. அது கொடுக்கும் தொல்லையை விட, "அதைப் பற்றி ஏற்படுத்தப் பட்டிருக்கிற பயமே", அதிக தொல்லை கொடுக்கிது!)
அவரவர்கள் " கொரோனா தொற்றை" - "கொரோனாவை" அல்ல!
"தொற்றை"-
கட்டுப்படுத்துவதிலேயே "போட்டி போட்டுக் கொண்டு" - பந்தயத்தில் ஓடுவது போல், ஓடிக்கொண் டிருக்கிறார்கள்! ஆச்சர்யமாக இருக் கிறது!
இத்தனைக்கும் -
இது , "கொல்லும் நோய் அல்ல"! இதனால் பாதிக்கப் பட்டவர்களில் 80 சதவிகிதம் பேர் சாதாரண சிகிச்சையில் குணம் அடைகிறார்கள். 15 சதவீதம் பேருக்கு ஆக்ஸிஜன் தேவைப் படுகிறது, மற்றவர்களுக்கு தான் பிளாஸ்மா தெரபி முதலியவை செய்யவேண்டி வரும்!", என்றெல்லாம் சொல்லப் பட்டிருக்கிறது!
முதலில் பயத்தை கொல்வோம் கொரோனாவை வெல்வோம்...


