சனி, 29 ஆகஸ்ட், 2020

புறம் பேசாதிரு

 💐💐💐🌹🌹🌹 🙏 🌹🌹💐💐


*''மற்றவர்களைப் பற்றி புறம் கூறாதீர்கள்...!*

.....................................................


நாம் மற்றவர்களோடு சொல்லாடலில் ஈடுபடும் போது நம்மை அறியாமலேயே, அங்கு நம்முடன் இல்லாத ஒருவரைப் பற்றிப் பேச ஆரம்பித்து விடுகிறோம்...


இது பெரும்பாலும் தவிர்க்க முடியாததாக ஆகிவிட்டது, ஏனென்றால், ‘புறம்’ பேசவில்லை என்றால் சொல்லாடல் பொருளற்றுப் போய் விடுகிறது...


மக்கள் ஒருவரைப் பற்றி அவர் இல்லாத நேரத்தில் பேசுவதற்கு முக்கியக் காரணம், பொறாமை தான். பொறாமை என்றால், ஒருவரது வெற்றிகளையும், நன்மைகளையும் பார்த்து ஏங்குவது...


அதனால், ஒருவரைப் பார்த்து பொறாமைப் படும் ஒருவர், அவரைப் பற்றி குறை கண்டு பிடிக்கத் தொடங்கி, அந்தக் குறைகளை மற்றவர்களிடம் கூற ஆரம்பிப்பார்...


ஒரு முறை தத்துவ மேதை சாக்ரடீஸைக் காண அவரது நண்பர் ஒருவர் வந்திருந்தார்.. அவர் சாக்ரடீசைப் பார்த்து,


“சாக்ரடீஸ்!"


"உங்கள் மாணவன் பிளாட்டோவைப் பற்றி நான் கேள்விப்பட்ட  ஒன்று தெரியுமா...?”


வந்தவரை ஏற இறங்கப் பார்த்த சாக்ரடீஸ்…


“பொறுங்கள்., பொறுங்கள்.. ஒரு நிமிடம். நீங்கள் கூற வருவதை என்னிடம் சொல்வதற்கு முன்னால் ஒரு சிறிய பரிசோதனை..."


அந்தப் பரிசோதனையில் நீங்கள் தேர்வு செய்து விட்டுப் பிறகு என்னிடம் நீங்க தாராளமாகக் கூற வருவதைக் கூறலாம்….”


வந்தவர் சற்று குழப்பத்துடனும், ஆச்சரியத்துடனும்….


“அது என்ன பரிசோதனை..?” என்றார்,


அதுக்கு பெயர் 'TRIPLE FILTER TEST”என்றார் சாக்ரடீஸ்  


“TRIPLE FILTER...?” அது என்ன...? என்றார் வந்தவர்...


“என்னிடம் கூறுவதுக்கு முன்னால் ஒரு நிமிடம் நீங்கள் சொல்வதை வடிகட்டி விட்டுப் பிறகு கூற வேண்டும்...!"


அதனால் தான் ''Triple Filter Test'' என்று கூறினேன்...


“முதல் வடிகட்டி (Filter) 'உண்மை’.


அதாவது "நீங்கள் கூற வரும் செய்தி உண்மை என்று உங்களுக்குத் தெரியுமா...?”


“இல்லை… நான்  கேள்விப்பட்டேன் அவ்வளவு தான்...!”


“பிறகு நீங்கள் கூற வந்த செய்தி உண்மையா...? இல்லையா என்று உங்களுக்குத் தெரியாது...   அப்படித் தானே...!"


சரி… போகட்டும்…


அடுத்து "நீங்கள் அவரைப் பற்றிக் கூற வந்த செய்தி நல்ல செய்தியா...?”


“அது... வந்து… இல்லை… இல்லை ….கெட்ட செய்தி…!”


"அப்படியா!, கூற வந்த செய்தி உண்மையா...? பொய்யா...!? என்று கூடத் தெரியாமல் அவரைப் பற்றி ஏதோ தவறாக கூறப் போகிறீர்கள்….!"


இந்த முறை, வந்திருந்த நபர் வருந்தி நெளிந்தார்...


“பரவாயில்லை…!"


இன்னும் ஒரு செயலில் வடிகட்டுதல் இருக்கிறது...


இதில் தேர்வு செய்தால் கூட அந்தச் செய்தியை நீங்கள் என்னிடம் நீங்கள் கூறலாம்...


இந்த மூன்றாவது வடிகட்டுதல்.., ‘பயன்'


அதாவது "நீங்கள் கூற வந்த செய்தி எந்த விதத்திலாவது எனக்குப் பயனாக இருக்குமா...?”


“இல்லை… அப்படி எதுவும் இல்லை...”


“ஓ…! அப்படியானால் நீங்கள் கூற வருகின்ற செய்தியால் எமக்கு நல்லது ஏதும் கிடையாது..."


தவிர, அது உண்மையா...? இல்லையா...! என்று உங்களுக்கே தெரியாது...!


மேலும்!, அதை என்னிடம் கூறுவதால் எனக்கு எந்தப் பயனும் இல்லை….!


"இப்படிப்பட்ட ஒரு செய்தியை நீங்கள் எனக்குக் கூற வேண்டுமா என்ன...? வேறு ஏதாவது பேசலாமே…!"


வந்தவர் வெட்கித் தலைகுனிந்தார்...


ஆம் இனிய நண்பர்களே...!


பிறரைப்பற்றி புறங் கூறுவதையும் அறவே விட்டொழிக்க வேண்டும், இது சாதனையாளர்களிடம் இந்தப் பழக்கங்கள் இருக்காது...!


இந்த வாழ்க்கை மிகவும் குறுகியது. ஆனால்!, சாதிக்க வேண்டிய செயல்கள் எண்ணற்றவை...!!


பிறரைப் பற்றி புறம் பேசுவதில் நாம் ஏன் நேரத்தை செலவழிக்க வேண்டும்...?


-உடுமலை சு. தண்டபாணி


💐💐💐🌹🌹🌹 🙏 🌹🌹💐💐

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக