சனி, 29 ஆகஸ்ட், 2020

புறம் பேசாதிரு

 💐💐💐🌹🌹🌹 🙏 🌹🌹💐💐


*''மற்றவர்களைப் பற்றி புறம் கூறாதீர்கள்...!*

.....................................................


நாம் மற்றவர்களோடு சொல்லாடலில் ஈடுபடும் போது நம்மை அறியாமலேயே, அங்கு நம்முடன் இல்லாத ஒருவரைப் பற்றிப் பேச ஆரம்பித்து விடுகிறோம்...


இது பெரும்பாலும் தவிர்க்க முடியாததாக ஆகிவிட்டது, ஏனென்றால், ‘புறம்’ பேசவில்லை என்றால் சொல்லாடல் பொருளற்றுப் போய் விடுகிறது...


மக்கள் ஒருவரைப் பற்றி அவர் இல்லாத நேரத்தில் பேசுவதற்கு முக்கியக் காரணம், பொறாமை தான். பொறாமை என்றால், ஒருவரது வெற்றிகளையும், நன்மைகளையும் பார்த்து ஏங்குவது...


அதனால், ஒருவரைப் பார்த்து பொறாமைப் படும் ஒருவர், அவரைப் பற்றி குறை கண்டு பிடிக்கத் தொடங்கி, அந்தக் குறைகளை மற்றவர்களிடம் கூற ஆரம்பிப்பார்...


ஒரு முறை தத்துவ மேதை சாக்ரடீஸைக் காண அவரது நண்பர் ஒருவர் வந்திருந்தார்.. அவர் சாக்ரடீசைப் பார்த்து,


“சாக்ரடீஸ்!"


"உங்கள் மாணவன் பிளாட்டோவைப் பற்றி நான் கேள்விப்பட்ட  ஒன்று தெரியுமா...?”


வந்தவரை ஏற இறங்கப் பார்த்த சாக்ரடீஸ்…


“பொறுங்கள்., பொறுங்கள்.. ஒரு நிமிடம். நீங்கள் கூற வருவதை என்னிடம் சொல்வதற்கு முன்னால் ஒரு சிறிய பரிசோதனை..."


அந்தப் பரிசோதனையில் நீங்கள் தேர்வு செய்து விட்டுப் பிறகு என்னிடம் நீங்க தாராளமாகக் கூற வருவதைக் கூறலாம்….”


வந்தவர் சற்று குழப்பத்துடனும், ஆச்சரியத்துடனும்….


“அது என்ன பரிசோதனை..?” என்றார்,


அதுக்கு பெயர் 'TRIPLE FILTER TEST”என்றார் சாக்ரடீஸ்  


“TRIPLE FILTER...?” அது என்ன...? என்றார் வந்தவர்...


“என்னிடம் கூறுவதுக்கு முன்னால் ஒரு நிமிடம் நீங்கள் சொல்வதை வடிகட்டி விட்டுப் பிறகு கூற வேண்டும்...!"


அதனால் தான் ''Triple Filter Test'' என்று கூறினேன்...


“முதல் வடிகட்டி (Filter) 'உண்மை’.


அதாவது "நீங்கள் கூற வரும் செய்தி உண்மை என்று உங்களுக்குத் தெரியுமா...?”


“இல்லை… நான்  கேள்விப்பட்டேன் அவ்வளவு தான்...!”


“பிறகு நீங்கள் கூற வந்த செய்தி உண்மையா...? இல்லையா என்று உங்களுக்குத் தெரியாது...   அப்படித் தானே...!"


சரி… போகட்டும்…


அடுத்து "நீங்கள் அவரைப் பற்றிக் கூற வந்த செய்தி நல்ல செய்தியா...?”


“அது... வந்து… இல்லை… இல்லை ….கெட்ட செய்தி…!”


"அப்படியா!, கூற வந்த செய்தி உண்மையா...? பொய்யா...!? என்று கூடத் தெரியாமல் அவரைப் பற்றி ஏதோ தவறாக கூறப் போகிறீர்கள்….!"


இந்த முறை, வந்திருந்த நபர் வருந்தி நெளிந்தார்...


“பரவாயில்லை…!"


இன்னும் ஒரு செயலில் வடிகட்டுதல் இருக்கிறது...


இதில் தேர்வு செய்தால் கூட அந்தச் செய்தியை நீங்கள் என்னிடம் நீங்கள் கூறலாம்...


இந்த மூன்றாவது வடிகட்டுதல்.., ‘பயன்'


அதாவது "நீங்கள் கூற வந்த செய்தி எந்த விதத்திலாவது எனக்குப் பயனாக இருக்குமா...?”


“இல்லை… அப்படி எதுவும் இல்லை...”


“ஓ…! அப்படியானால் நீங்கள் கூற வருகின்ற செய்தியால் எமக்கு நல்லது ஏதும் கிடையாது..."


தவிர, அது உண்மையா...? இல்லையா...! என்று உங்களுக்கே தெரியாது...!


மேலும்!, அதை என்னிடம் கூறுவதால் எனக்கு எந்தப் பயனும் இல்லை….!


"இப்படிப்பட்ட ஒரு செய்தியை நீங்கள் எனக்குக் கூற வேண்டுமா என்ன...? வேறு ஏதாவது பேசலாமே…!"


வந்தவர் வெட்கித் தலைகுனிந்தார்...


ஆம் இனிய நண்பர்களே...!


பிறரைப்பற்றி புறங் கூறுவதையும் அறவே விட்டொழிக்க வேண்டும், இது சாதனையாளர்களிடம் இந்தப் பழக்கங்கள் இருக்காது...!


இந்த வாழ்க்கை மிகவும் குறுகியது. ஆனால்!, சாதிக்க வேண்டிய செயல்கள் எண்ணற்றவை...!!


பிறரைப் பற்றி புறம் பேசுவதில் நாம் ஏன் நேரத்தை செலவழிக்க வேண்டும்...?


-உடுமலை சு. தண்டபாணி


💐💐💐🌹🌹🌹 🙏 🌹🌹💐💐

புதன், 19 ஆகஸ்ட், 2020

பக்குவம் என்றால்....*

 *பக்குவம் என்றால்....*


ஒரு சமயம் இரண்டு அமெரிக்க போர்ப்படைக் கப்பல்கள் கடலில் கடல் படையினருக்கு பயிற்சி அளிக்கும் பணியில்

ஈடுபட்டு இருந்தன. பனி மூட்டத்தினால் சில நாட்கள் தொடர்ந்து செல்லும் அவர்களுடைய பயணம் தாமதப்பட்டு வந்தது. 


ஒரு நாள் இரவு கடும்

பனிமூட்டத்தில் கடற்பகுதி மூடியிருந்ததால் முன்னால் சென்று

கொண்டு இருந்த போர்ப்படைக் கப்பலின் மேற்தளத்தில் கப்பலின்

கேப்டன் நின்று மேற்பார்வை இட்டுக் கொண்டு இருந்தார்.


அப்போது தொலை நோக்கி வழியாக கண்காணித்துக் கொண்டு இருந்த

கடற்படை வீரர் கேப்டனிடம் சொன்னார். "ஐயா நாம் போகின்ற பாதையில் சற்று தொலைவில் விளக்கு வெளிச்சம் தெரிகிறது. அது இன்னொரு கப்பலாக இருக்கக்கூடும் என்று சந்தேகப்படுகிறேன்".


அது நின்று கொண்டு இருக்கிறதா இல்லை, நகர்கிறதா?


நகராமல் தான் இருக்கிறது.


உடனடியாக அவர்களுக்கு சிக்னல் அனுப்பு, நமது கப்பல் போகின்ற வழியில் அது நிற்கிறது என்று தெரிவி. உடனடியாக 20 டிகிரி விலகிப் போகச் சொல்."


அப்படியே சிக்னல் அனுப்பப் பட்டது. அங்கிருந்து உடனடியாக

பதில் சிக்னல் வந்தது. "நீங்கள் 20 டிகிரி விலகிப் போவது நல்லது".


எரிச்சலடைந்த கேப்டன் அடுத்த சிக்னல் அனுப்பினார் "நான் 6 கடல் போரில் வெற்றி பெற்ற கேப்டன்

சொல்கிறேன் 20 டிகிரி விலகிப் போங்கள்.


அதற்கும் மறுமொழி உடனடியாக எதிர் தரப்பில் இருந்து வந்தது. "ஐயா நான் கப்பல்படையின்

இரண்டாம் நிலை ஊழியன். தயவு செய்து 20 டிகிரி விலகிப் போங்கள்.


கேப்டனுக்கு ஒரு இரண்டாம் நிலை ஊழியன் இப்படி தனக்கு கீழ்படியாமல்

நடந்து கொள்வது பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. 


கேப்டன் இறுதி எச்சரிக்கை செய்தி அனுப்பினார் "இது போர்ப்படைக் கப்பல். உடனடியாக 20 டிகிரி விலகுங்கள் அல்லது பீரங்கியால் சுடப்படுவீர்கள்".


பதில் உடனடியாக வந்தது. "இது கலங்கரை விளக்கம்"


மறு பேச்சு இல்லாமல் போர்ப்படைக் கப்பல்கள் தங்கள் பாதையை 20

டிகிரி மாற்றிக் கொண்டன.


ஒவ்வொருவர் வாழ்க்கைப்

பாதையிலும் இப்படி சில கலங்கரை

விளக்கங்கள் குறுக்கிடத்தான் செய்கின்றன. நம் விருப்பப்படி மாறவோ

நமக்காக விலகி வழி விடவோ செய்யாத சில சூழ்நிலைகள் இருக்கத்தான்

செய்கின்றன. மாற்றவே முடியாத இது போன்ற குறுக்கீடுகள் வரும் போது நாம் தான் நம் பாதையை சற்று மாற்றிக் கொண்டு செல்ல வேண்டும். அதை விட்டு விட்டு நான் மாற மாட்டேன், அதை மாற்றியே

தீருவேன் என்று பிடிவாதம் பிடித்து எதிர்த்து நின்றால் அது வடி கட்டிய முட்டாள் தனமாகவே இருக்கும்.


இப்படிப் பட்ட சூழ்நிலைகளில் தங்களை மாற்றிக் கொள்ள நேரிடுவது

சிலருக்கு கௌரவக் குறைவாக தோன்றுவதுண்டு. 


மேலே குறிப்பிட்ட

நிகழ்ச்சியில் கேப்டனுக்கு வந்த கோபம் போல "ஈகோ" பிரச்சினை எழுவதுண்டு. ஆனால் சந்தர்ப்பங்களின் தன்மை அறிந்து தெளிவுடன்

மாறுவதும், வளைந்து கொடுப்பதும் பக்குவமேயன்றி தோல்வியல்ல.👍👍👍

புதன், 12 ஆகஸ்ட், 2020

சர்தார்ஜி ஜோக்ஸ்

 சர்தார் ஒருத்தர் பஸ் ஸ்டாப்ல பஸ்க்காக வெய்ட் பண்ணிட்டு இருக்கார்.


பஸ் ஸ்டாப்ல நிக்காம தள்ளி போய் நிக்குது, சர்தாரும் பஸ்ஸ பிடிச்சிரலாம்னு ஒடுறார்…..


கிட்ட போகும் போது பஸ் மறுபடி கிளம்பிருது.. சரி அடுத்த ஸ்டாப்ல பிடிச்சிரலாம்னு ஒடுறார்,


அப்பவும் கிட்ட போகும் போது பஸ் மறுபடி கிளம்பிருது.. இப்படியே ஒடி ஒடி சர்தார் வீட்டுக்கே வந்திர்றார்.


வந்தவர் வீட்ல wife கிட்ட எல்லா கதையும் சொல்லிட்டு, பஸ் பின்னால ஒடியே வந்துட்டதால இன்னைக்கு 2.50 பைசா மிச்சம்னு சொல்றார்.


கேட்ட சர்தாரிணி(wife)க்கு ரொம்ப கோபம்,


என்னய்யா நீ பிழைக்க தெரியாத மனுசனா இருக்க பஸ் பின்னால ஒடி வந்ததுக்கு பதிலா ஒரு டாக்ஸி பின்னால ஓடி வந்த்திருந்தா 200 ரூபாயில்ல மிச்சம் ஆயிருக்கும்னு கடுப்பானார்………..


சர்தார் கடுமையா யோசிக்கத் தொடங்கினார்


அடுத்த நாளுக்காக………..


🤣🤣🤣

நம்ம சர்தார் பெயிண்டர்..( சுண்ணாம்பு அடிக்கறவர்.. ). ஒரு வீட்டுக்காரர் அவரைக் கூப்பிட்டு காண்ட்ராக்ட் பேசினார்..


"வீட்டுக்குப் பின்னாடி இருக்குற செவர்லே(சுவர்ல) சுண்ணாம்பு அடிக்கணும்.. என்ன கேக்கறே..?"


"நீங்க குடுக்கறதைக் குடுங்க.. நான் வேலையை ஆரம்பிக்கிறேன்.. "


ரொம்ப சீக்கிரமா வேலை முடிஞ்சுட்டுது.. வீட்டுக்காரர் 100 ரூபாய் கொடுத்தார்..சிங்கு திருப்தியுறாமல் கேட்டார்..


"பாத்து போட்டுக் குடுங்க முதலாளி.. வேலை அதிகமா செஞசுருக்கேன்.. நீங்க " செவர்லே "ன்னு சொன்னீங்க.. அங்க போயி பார்த்தா "குவாலிஸ் " நின்னுக்கிட்டுருந்துச்சு..!


🤣🤣🤣

 சர்தார்ஜி கடைக்காரரிடம், “உங்களிடம் வாங்கிய ரேடியோ ஜப்பான் தயாரிப்பு இல்லை. நீங்கள் பொய் சொல்லி என்னிடம் அதை விற்றுவிட்டீர்கள்!” “


இல்லைங்க.. அது சோனி ரேடியோ, ஜப்பான் தயாரிப்புதான்”


“அப்ப ஏன், ஆன் பண்ணவுடனே ஆல் இந்தியா ரேடியோன்னு சொல்லுது?”


🤣🤣🤣

பின்லேடனை பிடி‌ச்சா 5 லட்சம் பரிசு என்று போலி‌ஸ் அ‌றி‌வி‌த்தவுட‌ன், சர்தார்ஜி நேராக போலிஸாரிடம் போய் எனக்கு 5 லட்சம் குடுங்க என்று கேட்டிருக்கிறார்.


ஏன் என்று கேட்ட போலி‌ஸ் அதிகாரி பதிலை கேட்டவுடன் தலைசுற்றி விழுந்து விட்டாரம்.


சர்தார்ஜி சொன்னாரா‌ம், எனக்கு பின்லேடனை ரொம்பப் புடிச்சிருக்கு.


🤣🤣🤣 

சர்தார்ஜி இருவர் பஞ்சாப் தீவிரவாத குழுவில் இணைந்தார்கள்...முதல் பணி...ஒரு கார்ல குண்டு வைக்கறது...


சர்தார் 1 : டேய் மச்சி...நாம வெக்கற குண்டு வெக்கும்போதே வெடிச்சுட்டா என்னடா பன்றது


சர்தார் 2 : கவலப்படாத இன்னோன்னு வெச்சிருக்கேன்...


🤣🤣🤣

சர்தார்ஜியிடம் ஒருவர்...


ஒருவர் : “நீங்க எங்க பிறந்தீங்க..?


சர்தார்ஜி : “பஞ்சாப்பில்...


ஒருவர் : “பஞ்சாப்பிலே எந்த பாகம்?”


சர்தார்ஜி : “எந்த பாகமா? மொத்த உடலும் பஞ்சாப்பிலேதான் பிறந்தது”


🤣🤣🤣

சர்தார் திரைப்படம் பார்க்க சென்றார்.. தாமதமாகி விட்டதால் போகக் கூடாத ஒருவழிப் பாதையில் மகிழ்வுந்தைச் செலுத்தவே, போக்குவரத்துக் காவலரால் மடக்கி நிறுத்தப் பட்டார்..


காவலர் : என்னாய்யா சிங்கு.. எந்த ரோட்லே போற தெரியுதா..?


சர்தார் : தெரியுமே.. சினிமா கொட்டாய் ரோடு.. ஆனா ஏன் எல்லா காரும் திரும்பி வந்துகிட்டு இருக்கு..? டிக்கெட்டு தீந்து போச்சோ..?


🤣🤣🤣 

சர்தார்ஜியும் அவரது காதலியும்...


காதலி : அன்பே...நம்ம என்கேஜ்மெண்ட் அன்னைக்கு கண்டிப்பா நீ எனக்கு ரிங் தரனும்..


சர்தார் : சரி...கண்டிப்பா...ஆனா லேண்ட் லைன்லயா, மொபைல்லயான்னு சொல்லிரு முன்னாலயே...!!


🤣🤣🤣

 சர்தார்ஜி புதிதாக ஒரு மாருதி கார் வாங்கினார்.


அந்தக் காரில் தனது நண்பரைப் பார்க்க அமிர்தசரஸில் இருந்து ஜலந்தர் கிளம்பினார்.


சில மணி நேரங்களில் போய் சேர்ந்து விட்டதாக தனது அம்மாவுக்குத் தகவல் அனுப்பினார். ஆனால் மூன்று நாட்கள் கழித்துத்தான் திரும்பி வந்தார்.


அம்மா கேட்டார்: என்ன ஆச்சு? இவ்வளவு லேட்டா வர்றே?


சர்தார்ஜி: இந்த மாருதி கார் கம்பெனிக்காரங்களுக்கு கொஞ்சம்கூட விவரம் இல்லை. முன்னாடி போறதுக்கு 4 கியர் வச்சிருக்காங்க. அதனால் சீக்கிரம் போய் சேர்ந்துட்டேன். ஆனால் ஒரே ஒரு ரிவர்ஸ் கியர்தான் வச்சிருக்காங்க. அதுலே ஓட்டினா எப்படி சீக்கிரம் வரமுடியும்?


🤣🤣🤣

அஞ்சா சிங் ஒரு குதிரை வாங்கிட்டு வந்தாரு.. அவர் தம்பி கஞ்சா சிங்கும் ஒரு குதிரைய வாங்கிட்டு வந்துட்டாரு..


அடையாளம் வச்சுக்கறதுக்காக அஞ்சா தன் குதிரையோட வலது காதை வெட்டிட்டாரு..


ஆனா அவங்க அடுத்த வீட்டுக்காரன் ராவோடு ராவா கஞ்சா வோட குதிரை காதையும் அறுத்துட்டான்..


அசராத அஞ்சா இன்னொரு காதை வெட்டி விட. இன்னொரு குதிரை காதையும் வெட்டிட்டான். இப்படியே கண்ணு காலு எல்லாம் ஒவ்வொண்ணா போயிருச்சி.

அப்புறமும் அசராத அஞ்சா தம்பிக்கிட்ட சொன்னாரு..


" கவலைப் படாதடா கஞ்சா.. கருப்பு கலர் குதிரை உன்னோடது.. வெள்ளை என்னோடது..!


🤣🤣🤣

இந்த நிலை மாறும்...

 🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃


*💗சிந்தனை கதை...*


*இந்த நிலை மாறும்..!!*


(சற்று நீளம் தான். ஆனால், அவசியம் படிக்க வேண்டிய பதிவு. தவற விடாதீர்கள்)


ஒரு நாட்டின் ராஜாவுக்கு ஒருநாள் சிந்தனை ஒன்று தோன்றியது, அதாவது தனது வாழ்வில் துன்பத்தினால் இறுதியை அடைந்த ஒருவனுக்கு, அவனை காப்பாற்றக் கூடிய ஒரு மந்திரம் எதுவாக இருக்கும்? என்பதே அந்த சிந்தனை .


மன்னனும் எவ்வளவோ முயன்றும் அப்படி ஒரு மந்திரம் என்னவென்று தெரியவில்லை , உடனே நாட்டு மக்களுக்கு பறையறிவிக்க சொன்னான்.


“வாழ்வின் துன்பத்தில் சிக்கி இறுதி நாளில் இருக்கும் ஒருவனை காப்பற்றக் கூடிய மந்திரத்தினை” சொல்பவருக்கு தனது நாட்டில் ஒரு பகுதியை தருவதாக அறிவித்தான். நிறைய பேர் தினமும் வரத் துவங்கினார்கள். ஒவ்வொருவர் ஒவ்வொரு மந்திரங்களை சொன்னார்கள்.


நமசிவாய என்றார் ஒருவர். ஓம் சக்தி என்றார் மற்றவர். உன்னையே நம்பு என்றார் இன்னொருவர். ஆனால் மன்னன் திருப்தியாகவில்லை. எல்லோர் சொன்னதையும் ஏதோ ஒரு காரணம் சொல்லி மறுத்தான், அவர்களின் பதிலில் அவன் மனம் ஏனோ சமாதானமாகவில்லை. இந் நிலையில் ஒருநாள் மன்னனைக் காண ஒருவன் வந்தான் .


அவன் மன்னனிடம் ஒரு மோதிரம் தந்து “மன்னா, நீங்கள் எந்த குறையுமின்றி நீடுழி வாழ வேண்டும், ஒருக்கால் நீங்கள் சொன்னது போல ஒரு நிலை உங்களுக்கு வருமானால் அன்றைய தினம் இந்த மோதிரத்தை திறந்து பாருங்கள், அது வரை இதனை பார்க்க வேண்டாம்”, பின்னொரு நாளில் தங்களை சந்திக்கின்றேன் என்று சொல்லி மோதிரத்தை மிகவும் பவ்யமாக மன்னனிடம் தந்து விட்டு சென்றான். மன்னனுக்கு அந்த மனிதனின் சொல்லும் செயலும் ஒரு விதமான நம்பிக்கையும், எதிர்பார்ப்பையும், மன அமைதியையும் தந்தது. இந்த சம்பவத்திற்கு பின் மன்னன் இதனை மறந்தே போனான்.


சில வருடங்களுக்குப்பின் . . .


திடீர் என இந்த மன்னனுக்கும் வேறு நாட்டு மன்னனுக்கும் போர் மூண்டது. தயார் நிலையில் இல்லாததால் இந்த மன்னன் தோற்றுப் போனான். நாடு , மனைவி , மக்களை இழந்த மன்னன் மிகவும் மனம் தளர்ந்து வாழ்வினை முடித்துக் கொள்ள எண்ணினான். தப்பித்து உயிர் பிழைத்த தன் நிலையை எண்ணி எண்ணி மனம் சஞ்சலமான மன்னன், தூரத்தில் ஒரு மலையினை கண்டான்.


இந்த மலையில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொள்ள தீர்மானித்த அந்த மன்னன் மலையின் மீதேறினான். தட்டுத் தடுமாறி மலையின் உச்சியை அடைந்த மன்னன், இறைவா, என்னை ஏற்றுக்கொள் என்று வானத்தை நோக்கி இரு கைகளையும் உயர்த்தி விண்ணைப் பார்த்து உரக்க கூவினான். அப்போது அவன் கையில் இருந்த மோதிரம் சூரிய ஒளியில் மின்னியதை கண்டான்.

உடனே, அவன் மனதில் அந்த மனிதன் சொல்லிய வார்த்தைகள் ஒலித்தன.


“மன்னா, நீங்கள் எந்த குறையுமின்றி நீடுழி வாழ வேண்டும், ஒருக்கால் நீங்கள் சொன்னது போல ஒரு நிலை உங்களுக்கு வருமானால் அன்றைய தினம் இந்த மோதிரத்தை திறந்து பாருங்கள், அது வரை இதனை பார்க்க வேண்டாம்”


இப்போது அது போன்ற நிலை தானே அதில் என்ன தான் உள்ளது பார்ப்போம், என்று தற்காலிகமாக கீழே விழுந்து மரணிக்கும் எண்ணத்தை கைவிட்டு விட்டு அமர்ந்து அந்த மோதிரத்தை திருப்பி உள்ளே என்ன இருக்கின்றது என பார்த்தான். மோதிரத்தின் உள்ளே சிறிய காகிதம் ஒன்று சுருட்டி வைக்கப்பட்டிருந்தது, அதனை மிகவும் ஜாக்கிரத்கையாக எடுத்து பார்த்தான், ஒரே ஒரு வாசகம் ஒரே ஒரு வரியில் எழுதப்பட்டிருந்தது .


அந்த வாசகம் இதுதான் . . . .

*"இந்த நிலை மாறும்"*


அவ்வளவுதான். வேறொன்றும் இல்லை, முன்னும் பின்னும் திருப்பிப் பார்த்த மன்னன் ஏதும் காணாததால் அந்த வாசகத்தினை பற்றி யோசித்தான். தான் தற்போது உள்ள நிலை மாறும், இதற்காக தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு வந்து விட்டோமே என்றெண்ணி மனதினை தைரியப்படுத்திக் கொண்டு மன்னன் மலையிலிருந்து கீழிறங்கினான்.


தனது ஆதரவாளர்களைக் தேடிக் கண்டு பிடித்தான், கிராமங்களில் வாழும் மக்கள் தங்களது மன்னனைக் கண்டதும் மகிழ்ந்து கொண்டாடினார்கள். இளைஞர்களை ஒன்று திரட்டி படைகளை உருவாக்கினான். அரண்மனையில் இருந்த அவனது பழைய படை வீரர்களின் ரகசிய ஒத்துழைப்போடு, எதிர்பாராமல் திடீரென்று அரண்மனையின் ரகசிய வாசல் வழியாக உள்நுழைந்து எதிரி நாட்டு மன்னனை அதிரடியாக கைது செய்து சிறையிலடைத்து மீண்டும் மன்னனான்.


மீண்டும் மன்னன் ஆட்சியிலமர்ந்ததும் மக்கள் மிகவும் ஆனந்த வசமானார்கள். இந் நாளை விமரிசையாகக் கொண்டாட எண்ணிய மன்னன் , இந்த வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்த மோதிரம் கொடுத்த மனிதனை பறையறிவித்து வரவழைத்தான். நாடு முழுக்க ஒரே கொண்டாட்டமாக இருந்தது, அரண்மனையில் மக்கள் கூட்டம், அரியணையில் மன்னன், அருகில் மகாராணி, மன்னனின் குழந்தைகள், மந்திரி, பிரதானிகள், ஆடல் பாடல் என்று எங்கும் சந்தோஷ வெள்ளம் அலை பாய்ந்து கொண்டிருந்தது.


மோதிரம் கொடுத்த மனிதன் வந்தான் , மன்னனை தாழ்ந்து பணிந்தான். மன்னன் அரியணையில் இருந்து இறங்கி வந்து வரவேற்றான். தான் அறிவித்திருந்த படி பாதி நாட்டினை நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றான் மன்னன். மன்னா, நாட்டினை ஆளும் தகுதி கொண்டவர் தாங்கள் தான், எனக்கு ஏதும் வேண்டாம் என்று பணிவோடு சொன்னான் அந்த மனிதன். மன்னன் எவ்வளவோ மன்றாடியும் எதனையும் ஏற்க மறுத்தான் அந்த மனிதன்.


இறுதியாக மன்னன் சொன்னான், அன்பரே, நீங்கள் ஏதேனும் என்னிடம் இருந்து பெற விரும்பினால் தயங்காமல் கேளுங்கள். அந்த மனிதன், மன்னா, “வாழ்வின் மிக அதிக சந்தோஷத்தின் உச்சாணியில் தாங்கள் தற்போது அமர்ந்துள்ளீர்கள் என்பது உண்மைதானே“


மன்னன் : “ஆமாம் அது உண்மை தான் அன்பரே”


அப்படியானால் அந்த மோதிரத்தினை இப்போது எடுத்துப் பாருங்கள் என்றான் அந்த மனிதன். ஏன் என மன்னன் வினவ , எடுத்துப் பாருங்களேன் என்றான் அந்த மனிதன். சரி என சொல்லிய மன்னன், தனது விரலில் இருந்த , மோதிரத்தினை எடுத்து உள்ளிருக்கும் அந்த சிறிய காகிதத்தை பிரித்துப் பார்த்தான். அதில் அந்த மந்திர வாசகம் தெரிந்தது .


*இந்த நிலை மாறும்*


இது தான் மன்னா வாழ்க்கை, இந்த நிலை மாறும், எனவே எதிலும் கவனமாகவும் சந்தோஷமாகவும் இருங்கள், நான் வருகின்றேன் என்று அவையோரை பணிந்து மன்னனிடமிருந்து விடை பெற்றான் அந்த மனிதன். நெஞ்சம் தழுதழுக்க அவன் செல்லும் திசையைப் பார்த்து வணங்கி நின்றான் மன்னன். இழந்த வாழ்வை மீட்டுத் தந்த மந்திரம் தந்தவனல்லவா இந்த மனிதன்..!


அன்பின் நண்பர்களே, உங்கள் சம்பந்தமான எந்த முடிவினையும் எடுக்கும் உரிமை உங்களுக்கே உள்ளது. சந்தேகம் வேண்டாம், இதில் வேறு கருத்தில்லை, உங்களின் எந்த முடிவினையும் தடுக்கும் எண்ணமும் எமக்கில்லை. ஆனால், எந்த முடிவெடுக்கும் முன்னரும் இந்த மந்திர வாசகம் நினைவில் வரட்டும்.


*இந்த நிலை மாறும்...*


*வளமோடு வாழுங்கள், வாழும் நாளெல்லாம்..!!*


🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2020

வார்த்தை

 ஒரு டீக்கடையில் எழுதப்பட்டிருந்த வாசகம், டீயை விடவும் சூடாக இருந்தது.


"இருவடை எடுத்து ஒருவடை என்பார்

திருவோடு ஏந்தி தெருவோடு போவார்..!"


மாஸ்டர் டீ போடுகிற நேரத்தில், தட்டிலிருக்கும் வடையில் இரண்டை கபளீகரம் செய்து விட்டு, ஒரு வடை தான் என்று காசு கொடுப்பவர்களை கண்டிப்பதற்காக எழுதப்பட்ட வாசகம் இது. சுவாரஸ்யமாக இருக்கிறது என்றாலும் வடை எடுக்கிற எல்லோருக்கும் இது சங்கடத்தையே ஏற்படுத்தும்.


இதைப் படிக்கும்போது உங்களுக்குள் ஏற்படும் மன உணர்விற்கும், இனி வரும் வரிகளை படிக்கும்போது ஏற்படும் மன உணர்விற்கும் உள்ள வித்தியாசத்தினை கவனியுங்கள்.


ஒரு ஆட்டோவில், டிரைவர் சீட்டின் முதுகில் எழுதப்பட்ட வாசகம்.. 


‘உங்களின் வழிச் செலவு, எங்களின் வாழ்க்கை செலவு.’


இந்த வாசகம், இறங்கிய பின் யாரையும் பேரம் பேச விடாது. மீட்டருக்கு மேல் ஐந்து ரூபாய் போட்டுக் கொடுங்க சார் என்கிற வார்த்தைக்கும் இந்த வாசகத்திற்கு எத்தனை வேறுபாடு. அதனால் தான் சொல்கிறேன், சொல்லும் விதத்தில் வெல்லலாம்.


ஒரு மொத்த விற்பனை மீன் கடையில் எழுதப்பட்டிருந்த வாசகம்,


‘மீன் சாப்பிட வேண்டாம் என்று நினைத்தேன். மீனவன் சாப்பிட வேண்டாமா?’


வார்த்தைகளில் இல்லை வெற்றி. அது வெளிவரும் விதத்தில் தான் வெற்றி இருக்கிறது. 


டீக்கடையின் வரிகளும், ஆட்டோவில் எழுதப்பட்ட வரிகளும் ஒரே விஷயத்தை தான் சொல்கிறது. ஆனால் சொல்லப்பட்ட விதம் தான் அதில் வித்தியாசம். சொல்ல வந்ததை அழகாக சொல்வது ஒரு கலை.


நினைக்கும் விஷயங்களை எல்லாம் பேசாமல், அதை செம்மை படுத்தி பேசிப்பாருங்கள்.. வெற்றி நிச்சயம்.


ஒரு ஹோட்டலில் எழுதி மாட்டி இருக்கும் வாசகம்...

‘வீட்டு சமையலுக்கு ஒரு நாள் விடுமுறை விடுங்கள்.’


எண்ணங்கள் அழகானால் வார்த்தைகள் அழகாகும், வார்த்தைகள் அழகானால் சிந்தனைகள் அழகாகும், சிந்தனைகள் அழகானால் வாழ்க்கையே அழகாகும்!!!

சனி, 8 ஆகஸ்ட், 2020

வாழ்க்கை

 🍂வாழ்க்கையில் உயரும் வரை காதைப் பொத்திக் கொள்....

உயர்ந்த பிறகு வாயைப் பொத்திக் கொள்.... !!!


🍂பறவைகளின் நிம்மதியை கெடுக்க 

ஒரு *கல்* போதும்.....

மனிதர்களின் நிம்மதியை கெடுக்க ஒரு  *"சொல்"*  போதும்......!


🍂எல்லோருடைய வாழ்க்கையும் ஒரு மெழுகுவர்த்தி போலத்தான்...

தூரத்தில் இருந்து பார்த்தால் ஒளி மட்டும் பிரகாசமாக தான் தெரியும்...

அருகில் சென்று பார்த்தால் தான் அவர்கள் உருகி கண்ணீர் வடிப்பது தெரியும்... !


🍂வாழ்க்கையில் முற்பகுதியில் வெற்றிபெற சுறுசுறுப்பும் ஊக்கமும் தேவை....

பிற்பகுதியில் வெற்றி பெற பொறுமையும் தன்னடக்கமும் தேவை.. !!


🍂வாழ்வில் நல்லது, நடந்தால் அதற்கு நானே காரணம் என்பதும்..

கெட்டது நடந்தால் அது மற்றவர்களால் என்றும் பிதற்றாதீர்கள்..

அனைத்திற்கும் நாம தான் காரணமென பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள் ...


🍂எதையாவது கொடுத்து நல்ல பெயர் தொடர்ந்து வாங்க நினைத்தால் ... அதை கொடுக்கும் வரைதான் நிலைக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்....


🍂ஆறுதல் என்பது பிரச்சனைக்கு தற்காலிக தீர்வு...

மாறுதல் என்பதே என்றும் நிரந்தர தீர்வு...


 *நல்லதே நினைப்போம் .* 

 *நல்லதே நடக்கும்.*🙏🏼

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2020

ஈகோ.....?

*ஈகோ….என்றால் என்ன ?* 😏


*​ஈகோ என்பது என்ன?*
*தன்னைப் பற்றியே சிந்தித்தல், சுயநலம், வறட்டுக் கௌரவம், தலைக்கனம், உயர்வு மனப்பான்மை, பணிவின்மை ஆகிய குணங்களின் ஒட்டுமொத்த வெளிப்பாடாகும். மனிதனுக்கு பணம், பதவி, அழகு, செல்வாக்கு கூடும் பொழுது, அதே நேரத்தில் படிப்படியாக மமதை, ஆணவம், செருக்கு, திமிர், கர்வம் சிலருக்கு கூடி விடுகிறது.*

*கடவுள் நம்மை விட்டு வெளியேறுவது என்பதன் சுருக்கம் தான் (Ending God Out) ஈகோ என்பர்.*

*நமது பலவீனத்தை, தவறை யாராவது சுட்டிக்காட்டினால் ஈகோ விழித்துக் கொள்கிறது. மோதல் ஏற்படுகிறது.*

*ஈகோ மனிதர்களின் அடையாளம்:*

*நம்மிடம் வணக்கத்தை கட்டாயம் எதிர்பார்ப்பர். நன்கு தெரிந்தவர் என்றாலும், கண்டும் காணாதது போல நடப்பர். அதிகம் பேச மாட்டார். தம் இனத்துடன் மட்டும் பழகுவர். தம்மை நாடியே பிறர் வர வேண்டும் என்று இருப்பர். தன்னை விட மற்றவருக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது என எதிர்பார்ப்பர். தான் மட்டும் தான் சிறந்தவர் என நம்புவர். ஈரமும், இரக்கக் குணமும் அற்றதன்மை பேச்சில் வெளிப்படும். மற்றவர் தன்னை மதிக்க வேண்டும், புகழ வேண்டும் என்பதில் தீராத ஆசை கொள்வர், தன்னை முந்தி செல்வோர் மீது பொறாமைபடுவர். தன் சுயநலத்திற்காக பிறரை சாடுவர்.*

*தன்னைவிட குறைந்த படிப்பு, பதவி, அந்தஸ்து உள்ளவர்களிடம் அதிகம் பேச மாட்டார்கள். தவறு செய்தால் மன்னிப்பு கேட்க மாட்டார்கள். தன்னை சாதாரண மனிதர்களாய் நினைத்து கொள்வதே கனவிலும் கற்பனை செய்து பார்க்க முடியாத காரியமாகும். பிறர் தன்னை மிகவும் குறைவாக மதிப்பிடுவார்கள் என்றநினைப்பில் தங்களை பெரிய ஆளாக காண்பிப்பதற்கு முயல்வர்.*

*எல்லா புனிதமான தோற்றத்திற்கு மறுபுறம் இன்னொரு மோசமான குரூரமான முகமிருக்கும். தகவல் தொடர்பு சரியான முறையில் இருக்காது. தெரியாதததைக் கேட்டு தெரிந்துகொள்ள தயங்குவர். அதிக  முக்கியத்துவம் யாருக்கு கொடுக்கப்படுகிறது என்பதில் தீவிரமாக இருப்பர். ஈகோ பிரச்சினையால் பல விஷயங்களில் முரண்டு பிடிப்பது. முட்டுக்கட்டை போட்டு இழுத்தடிப்பது இவர்களது வழக்கமாக இருக்கும்.*

*ஈகோ மனிதர்களை சமாளிப்பது எப்படி?*

*நமது வாழ்க்கைத் துணையோ, நமது அதிகாரியோ, நண்பர்களோ உறவினர்களோ ஈகோ குணம் உடையவர்களாக இருந்து விட்டால் இவர்களிடம் சற்று விலகியே வாழ வேண்டும். இவர்களுக்கு எதிராக நாம் செயல்பட்டால் அது அவர்களின் ஈகோவைக் கூட்டிவிடும். முடிவில்லாத தொல்லைகள், மனஉளைச்சல் ஏற்படும்.*

*யார் பெரியவர் என்ற சிக்கலுக்கு என்னதான் வழி? சிலர் இவர்களை விட்டு விலகி சென்று விடுகிறார்கள். இத்தகைய சூழல் அவர்களைக் காட்டிலும் மிகத் திறமையாக கையாண்டு சமாளிக்கிறவர்களும் உண்டு. சகித்துக் கொண்டு வேறு வழியின்றி அடிமையாக வாழ்க்கையை ஓட்டுகிறவர்களும் உண்டு.*

*இறைவனது படைப்பில் உயர்ந்தவர், தாழ்ந்தவர் எவருமில்லை? அவரவர் திறமைக்கேற்ப வாழ்வில் உயரத்தை எட்டுகிறார்கள். வளர்ச்சி பெறுகிறார்கள். எல்லோரும் ஒரே மட்டத்தில் சம அந்தஸ்தில் இருக்க முடியாது.*

*ஈகோ குணம் படைத்தவர்களை சமாளிப்பது மிகக் கடினம் தான். நமது ஒவ்வொரு நாள் அலுவலையும் நரகமாக்கி விடுவார்கள். நம்மைத் தீவிரமாக கண்காணிப்பார்கள். குறைச்சலாக பேசுவார்கள். மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும். தங்கள் பணிக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காது. மனதில் வலியை உண்டாக்கும் நிகழ்வுகள் தொடர்கதை ஆகும். விலகிச் செல்லவும் முடியாது. அவஸ்தை பட நேரிடும். பாதிப்பின் தாக்கத்தால், எதிலும் கவனம் செலுத்த இயலாது.

*ஈகோ மோதல்களும் விளைவுகளும்:*

*டீ அருந்துபவர்கள் பால்  அல்லது தண்ணீரை கலந்துதான் அருந்துகிறார்கள். அதன் சுவைக்கும் (புத்துணர்ச்க்கும் ) காரணம் டீ தூளா , பாலா , தண்ணீரா  எதற்கு முக்கியத்துவம் என்பதுதான் சிக்கலின் ஆரம்பம். கூட்டு முயற்சியால் தொடர்ந்து வெற்றியும், வரவேற்பும் பெற்றபலர் திடீரென ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக பிரிந்த பின்னர் இருவருக்குமே பெரும் பாதிப்பு ஏற்பட்டு ஒரு கட்டத்தில் துறையே விட்டே ஒதுங்கும் நிலை பலரது வாழ்வில் ஏற்பட்டு உள்ளது. அரசியல், சினிமா, சங்கங்கள் ,அலுவலகம், தொழில், கிரிக்கெட், உள்ளிட்ட பல துறைகளில் கூட்டு முயற்சியும் பங்களிப்புமே வெற்றிக்கு காரணமாக உள்ளது. கௌரவப்போட்டி பலரது எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது. உரிய மரியாதை வழங்காததால் தொடர்ந்து பின்னுக்கு செல்லும் நிலை ஏற்படுகிறது. இதனால் புறந்தள்ளப்பட்டவர்கள் பலர்.*

*இரண்டு ஆசிரியர்களுக்கு இடையே ஈகோ மோதல் ஏற்பட்டால் அது பல மாணவர்களின் கல்வியைப் பாதிக்கிறது. கணவன் மனைவி இடையே ஈகோ தகராறு ஏற்பட்டு வாழ்வில் விரிசல் விழுந்தால் பிள்ளைகளைப் பெரிதும் பாதிக்கிறது. ஈகோ மனிதர்களை ஆட்டிப்படைக்கிறது. பிறந்த வீட்டில் மாப்பிள்ளைகளில் யாருக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது என சகோதரிகள் யுத்தம் செய்கின்றனர். நண்பர்கள் ஈகோ மோதலால் பிரிந்தால் அவர்கள் செய்த பல நன்மைகள் மறந்து விடும். சில தீமைகள் மட்டும் பெரிதாகத் தெரியும். பிரிந்த உறவுகள் மீண்டும் இணைந்திட ஈகோ தடுக்கிறது. இதனால் பாதகங்களை சந்திக்க நேரிடுகிறது. அவல  நிலைக்கு தள்ளி விடுகிறது. அரிதான வாய்ப்புகள் வீணடிக்கப்படுகிறது.*

*ஈகோ பிரச்சினையால், வாழ்க்கையை தொலைக்கும் பெண்கள் பலருண்டு. எல்லோரும் உயிரோடு இருந்தும் எந்த உறவும் இல்லாமல் அநாதையாக அவஸ்தைபடுபவர்கள் பலர். ஈகோவால் காதல், உறவு, நட்பு எல்லாம் நொறுங்கிப் போகிறது. அதிகமான குடும்ப உறவுக்கு ஈகோ தான் வேட்டு வைக்கிறது. வாழ்வில் வெற்றிக் கொடி நாட்டி முன்னணியில் இருந்தவர்கள் தடாலென சரிந்து விழுந்து சகதியில் புரண்டெதெல்லாம் ஈகோ என்கிற உயிர்கொல்லியால்தான். ஈகோவால் முகவரி இழந்து காணாமல் போனவர்கள் ஏராளம்.*

*உலக அளவில் இந்தியா சில துறைகளில் தலை நிமிரக் காரணமாக இருந்தவர்கள் கூட ஈகோ மனிதர்களால் அவமானங்களையும், வேதனைகளையும் சந்தித்து இருக்கிறார்கள். உறவுகளை அழிப்பதற்கு, பாழ்படுத்துவதற்கு, நாசம் செய்வதற்கு ஈகோ என்கிற ஒன்று மட்டும் போதுமானது.*

*அதிகப்படியான ஈகோ நமது திறமைகளை கொன்றுவிடுகிறது. உறவுகள் இயற்கையாய் இறப்பதில்லை. ஈகோவால் படுகொலை செய்யப்படுகிறது. ஈகோதான் மனிதனின் மிகவும் மோசமான எதிரியாகும்.*

*நம்முள் இருக்கும் ஈகோ என்கிற மிகப்பெரிய ஆயுதம் நம்மையே கீழே தள்ள நம்மாலேயே பயன்படுத்தப்படுகிறது என்பதுதான் உச்சக்கட்ட சோகம். தொழில் பங்குதாரர்களின் ஈகோ மோதல் வியாபாரத்தில் நஷ்டத்தை தருகிறது.*

*ஈகோ அற்றவர்களின் இயல்புகள்:*

*ஈகோ இல்லாத மனிதர்கள் பதவி கிடைத்து விட்டது என்று அதிகப்படியான அதிகாரம் செய்ய மாட்டார்கள். பதவி நிலையானது அல்ல என்பது அவர்களுக்கு மிக நன்றாகத் தெரியும். அழகு கூடுகிறது என கர்வம் கொள்ளமாட்டார்கள். அவர்களுக்கு தெரியும். ஒருநாள் உடல் அழகு மங்கப்போகிறது என்று. பணக்காரர் ஆனாலும் பகட்டாக இருப்பதில்லை. பணத்தின் மதிப்பு குறைந்து கொண்டே போகிறது என்பதை நன்கு உணர்ந்தவர்கள். அந்தஸ்து வந்தாலும், உடன்பிறந்தவர்களை முற்றிலுமாக பிரிந்துவிட மாட்டார்கள். நட்பு கசந்து விடாமல், திருமண வாழ்க்கை சரிந்து விடாமல் கவனமாக நடந்து கொள்வார்கள்.*

*விட்டுக் கொடுப்பதால் குறைந்து போவதில்லை என்பதை உணர்ந்தவர்கள். நல்லது, கெட்டதை ஒதுக்கி வைக்காமல் முக்கிய குடும்ப நிகழ்வுகளில் தவறாமல் பங்கேற்பவர்கள். தானாக முன்வந்து, தவறுக்கு வருத்தம் தெரிவிப்பார்கள். கணவன் மனைவிக்குள் சிறு சண்டை என்றால் ஈகோ  பார்க்காமல் சரணடைந்து விடுவர். தாங்களே பேசித் தீர்த்துக் கொள்வார்கள். நடுவில் யாரையும் நுழைய விட்டால் சிறிய பிரச்சனை பூதாகரமாக வெடிக்க வாய்ப்புண்டு என்பதை நன்கு உணர்ந்தவர்கள். எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றாமல் தண்ணீரை ஊற்றி அணைப்பவர்கள் இவர்கள்.*

*பல நாடுகளை கைப்பற்றிய மன்னாதி மன்னர்களானலும் நோயுற்றபோது அவர்களது உயிரை மருத்துவர்களால் காப்பாற்றமுடியவில்லை. கோடி கோடியாய் குவிந்தவர்கள் ஒரு குன்றிமணிக்கூட தன்னுடன் எடுத்துச் செல்ல இயலாது. பூமிக்கு வரும் போது ஒன்றும் கொண்டு வரவில்லை. போகும் போது ஒன்றும் எடுத்து செல்வதில்லை.*

*பக்குவப்பட்ட மிகப்பெரிய மாமனிதர்கள் தன் மீதான தவறு சுட்டிக்காட்டப்படும் போது கொந்தளிப்பதில்லை. திருத்திக் கொள்ளவே முயற்சிக்கிறார்கள். தம்மை விட்டு சுற்றத்தார், தோழர்கள், பாசமானவர்கள், நம் மேல் அக்கறை கொண்டு உள்ளவர்களிடம் இருந்து பிரிந்து தனித்தீவாக இருக்க விரும்புவதில்லை. ஈகோ வாழ்வை நிர்மூலமாக்கிவிடும் என்பதை நன்கு உயர்ந்தவர்களாக இருக்கிறார்கள். உயர்நிலைக்கு சென்றபின்பும் சாதாரணப் பணிகளை மேற்கொள்வர். மிகப்பெரிய சாதனை படைத்த மாமனிதர்கள் பேருந்தில், சைக்கிளில் எதைப் பற்றியும் கவலைப்படாமல் பயணிக்கிறார்கள். மகாத்மா காந்தியடிகள் ரயிலில் மூன்றாம் வகுப்பில்தான் பயணம் மேற்கொண்டார். தொழில் அதிபர் ரத்தன் டாட்டா தனது கோப்புகளை தானே கை நிறைய எடுத்துக் கொண்டு லிப்டில், தனது அறைக்கு செல்லத் தயங்குவதில்லை.*

*ஈகோவை விட்டுவிட்டால் வாழ்வு லேசாகி விடும் என்பதை உணர்ந்தவர்கள். வானம், பூமி, ஆறு, கடல், மலை எல்லாம் இறைவன் தந்தது. நாம் உருவாக்கியது அல்ல. நமது சக்தி, பலம், முயற்சி நமக்கு செல்வத்தை தந்து இருக்கலாம். ஞாபகமிருக்கட்டும். நமது திறமைகள் கடவுளால் நமக்குத் தரப்பட்ட கொடை.*

*மனிதனின் அறிவாற்றல் அதிகரிக்கும் போது ஈகோ குறைந்து விடுகிறது. அறிவாற்றல் குறைந்தவர்களிடம் ஈகோ அதிகரிக்கிறது.*

*ஈகோவிற்கும் படிப்பிற்கும் சம்பந்தமில்லை....என்பதனை நினைவில் கொள்ளவும்.*

         
        🌷🌳🌲🌴☘🌷