மூடு பனி (1980)
பெண் பாலியல் தொழிலார்களை கொல்வது 19ம் நூற்றண்டில் அதிகமா காணப்பட்டது அதுவம் ஐரோப்பாவில் JACK the Ripper, Long island serial killer என பல பேர்கள் உலவிய தருணம் அது. இன்றும் அமெரிக்காகவில் ஒரு prostitueஆக இருப்பவர் கொலைசெய்ய படுவதற்கு 200% அதிகம் வாய்ப்பு இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கறது.
சிகப்பு ரோஜாக்கள் (1978) பிறகு வந்த தமிழ் சீரியல் கில்லர் கதைகளில் மிக முக்கியமான படம் மூடு பனி. எழுதி இயக்கியவர் பாலு மகேந்திர. இந்த திரைப்படம் இரண்டு நாவல்கள்களை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டுஉள்ளது. இதுவும் ஒரு விடுதலை மற்றும் The Collector.
கதையானது விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்கள் மீது அதீத வெறுப்பு காரணமாக அவர்களை கொல்லும் எண்ணம் மேலோங்கும் சந்துரு (பிரதாப் பொத்தன்) பெங்களூரில் இருக்கிறான். அவனுடைய தாய் தந்தை இழந்து தனிமையில் வாழும் ஒரு பணக்கார தொழிலதிபர்.
அவனுக்கும் கதையின் நாயகி ரேகாவுக்கும் (ஷோபா) ஒரு தியேட்டரில் சந்திப்பு நிகழ்கிறது. அதற்கு பிறகு அவர்களுடைய சந்திப்பு சந்துருவுடைய ஆஃபிஸில் நிகழ்கிறது ஒரு டொனேஷன் கேட்டு அவரும் அவருடைய தோழியும் அங்கு வந்து செல்கிறார்கள்.
தன்னுடைய இந்த பெண்கள் மீதான வெறுப்பு அதுவும் விலைமாதர்கள் மீதான கொலை வெறி அதிகமாகி அவன் கொல்ல ஆரம்பிக்கிறான். அப்படி ஒரு விலைமாதரை கொலை செய்யும் போது அவன் பயன்படுத்திய ஸ்கூட்டர் போலீசில் எவிடென்சனாக கிடைக்கிறது. தன்னுடைய இந்த கொலை செய்யும் வெறியை பற்றி அவனுடைய மனோதத்துவ டாக்டரிடம் அவன் ஆலோசனை கேட்கிறான் அதில் அவர் உனக்கு மனதிற்கு பிடித்த பெண்ணை கல்யாணம் செய்து கொண்டு வாழ்ந்தால் இந்த போக்கு மாறுபடும் எனவும் கூறுகிறார்.
இதை ஏற்று தான் ஆசைப்படும் பெண்ணான ரேகாவிடம் சென்று தன்னை கல்யாணம் செய்து கொள்ள சம்மதமா எனக்கேட்கிறான். அதற்குஅவள் ஒத்துக்கொள்ளவில்லை அதன் பிறகு அவளை ஒரு நாளில் கடத்தி அவனுடைய ஊட்டி பங்களாவிற்கு கூடி சென்றுவிடுகிறான்.
அதன் பிறகு ரேகா தப்பித்தலா இல்லையா ?
சந்துரு போலீஸிடம் சிக்கினானா ?
அவனுடைய இந்த நிலைக்கு என்ன காரணம் ?
எனும் பல கேள்விகளுக்கு சஸ்பென்சோடு பதில் சொல்லியுள்ளனர்.
பிரதாப் போத்தன் ஒரு psychoவாக நடிக்க தேர்ந்து எடுத்துஇருப்பது அவருக்கு மிகவும் பொருத்தமான வேடம். ஒரு நிஜமான psycho மனேரிசம் கச்சிதமாக பொருந்தியிருக்கும். கதையில் வரும் காந்திமதி கேரக்டர், அப்போதைய Brothel தொழில் செய்யும் பெண்களை கையாளும் விதம் பல படங்களுக்கு ஒரு டெம்ப்ளட்டேஆக அமைந்து இருப்பார்.
படத்தில் வரும் மாஸ்டர் ஹாஜா ஷெரிப் (அந்த ஏழு நாட்கள் - எடோ கோபி) ஒரு சிறு வேடம் என்றாலும் அருமையாக நடித்துஇருப்பர். போலீஸ்அகா வரும் கல்கத்தா விசுவநாதன் கேரக்டர் அப்போதைய போலீசிற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு.
படத்தில் வரும் ஆங்கில உரையாடல்கள் இப்போதைக்கு இருக்கும் GVM படங்களின் சாயலை நியாபகப்படுத்துகிறது. படத்தின் சினிமாட்டோகிராபி வேற லெவல் ஒவொரு பிரமேலும் மகேந்திர ஜாலம் காட்டியுள்ளார். அப்போதைக்கு வந்த படங்களில் இந்த படத்தின் கிளாஸுப் காட்சிகள் அதிகம் பேசப்பட்டது.
நாயகியாக வரும் ஷோபா அருமையாக நடித்துஇருப்பர் அவருடைய இறுதியாண்டாக அமைந்ததோ என்னவோ அவர் வரும் இடங்களில் பிரகாசமாக ஒளிருந்துஇருப்பர். படத்தின் வெற்றிக்கு காரணமாக இருந்த இசை இளையராஜாவின் ட்ரடே மார்க் பாடலான "என் இனிய பொன் நிலவே..." ஒரு கிளாசிக் மெலடி.
இந்த திரைப்படம் psycho (1960) வெளியான alfrod ஹிட்ச்கோக்கின் ரீமேக் என்றும் பேசப்பட்டது. அந்த காலத்தில் வந்த ஒரு சூப்பர் Crime திரில்லர் இந்த மூடு பனி. பார்க்க தவறியவர்கள் நிச்சயம் பாருங்கள் youtubeல் காணக்கிடைக்கிறது.
உங்கள் நேரத்தினை செலவிட்டதற்கு நன்றி !

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக