வைதேகி காத்திருந்தாள் (1984)
#விஜயகாந்த் #Tamil #Movie #Youtube
ஒரு படத்துக்கு ஏற்கனவே ரெடியா இருக்குற பாடல்களுக்கு ஏத்த மாதிரி ஒரு கதை எழுதி அதுல ஒரு மாஸ் ஹீரோவா கொஞ்சம் சாப்ட் கேரக்டர்ல நடிக்கவச்சு படம் எடுத்த படம் ஓடுமா ? ஓடாத ? என்கிற கேள்விக்கு பதில் தான் இந்த வைதேகி காத்திருந்தாள்.
எல்லோரும் இந்த படம் ஓடினத்துக்கு முழுக்க முழுக்க காரணமாக சொல்வது இளையராஜாவையும் விஜயகாந்தயும் கண்டிப்பாக உண்மை தான், அந்த பாடல்கள் இல்லாம இந்த படம் இல்ல தான். ஆனால்
R சுந்தராஜன் என்கிற டைரக்டர் இல்லாட்டி இந்த படம் பத்தோட பதினொன்னாகி போயிருக்கும்.
படத்தில ரெண்டே விஷயம் தான் ஒருத்தி தண்ணியில்லாம சாவுற அதனால வெள்ளைச்சாமி (விஜயகாந்த்) என்கிற ஒருத்தன் ஊமையாகி தான் ஊரை விட்டு எதோ ஒரு ஊருல மத்தவங்களுக்கு தான் எந்த தண்ணியால கஷ்டப்படமோ. அதே தண்ணியால வேற யாரும் கஷ்டப்படக்கூடாதுனு தண்ணிய தூக்கி வீடு வீடு கொண்டு சேக்குறன்.
இந்த தண்ணிக்கும் வெள்ளைச்சாமிங்கிற இந்த பேருக்கும் எப்போவுமே ஏழாம் பொருத்தம் தான் போல (தண்ணீர் தண்ணீர் படத்தில் வரும் கேரக்டரும் வெள்ளைச்சாமி தான்...) . தான் இனி வைதேகி கிட்ட மட்டும் தான் பேசுவேன் ராத்திரி அவளுக்காகவே பாடுறான்.
அதே தண்ணியால வைதேகி (ரேவதி) கல்யாணம் ஆன கொஞ்ச நேரத்துலே இனிமே பூவும் பொட்டும் வச்சுக்க முடியாத நிலைமையை தந்துருது.அப்போ ஒரு கைம்பெணடா கஷ்டத்தை பத்தி ரொம்ப அழகா சொல்லியிருக்கும் இந்த படம்.
படத்தின் கதையானது ஊருக்கு வேலை தேடி வருற நட்ராஜ் (சிவன்குமார்) அங்க கோயிலை செங்கமலம் (கோகிலா) மொத தடவையை பாத்ததுமே காதல் உருவாயிருது. அதுக்கு பிறகு வைதேகி வீட்டில அவங்க அப்பாவால் வீட்ல வாடகைக்கு அமர்த்தப்பட்டு அங்கு உள்ள ஒரு ரேஷன் கடையில வேலை செய்யறான்.
இவங்க ரெண்டு பேரும் காதல் செய்ய அது அவங்க அண்ணன் அந்த ஊரில் இருக்கும் ரவுடி "வெள்ளிக்கிழமை ராமசாமி" (ராதாரவி) தெரிய செங்கமலத்தை அடச்சி வச்சுடறான். அவங்க காதல் சேர முடியலன்னு அவங்க ரெண்டு பேரும் சாக முயற்சி செய்றாங்க அது தெரிஞ்சு வைதேகியும், வெள்ளைச்சாமியும் அவங்கள காப்பாத்துனாங்களா ? அவங்க ரெண்டு பேரும் ஒன்னு சேர்த்தங்களா இல்லையா ? என்பது தான் கதை
படத்தில் விஜயகாந்த் ரேவதியும் மீட் பண்ணி பேசும் போது அவங்களோட பிளஷ்பாக் சொல்லற விதம் அந்த ஊர்ல மொத தடவையை அவன் வைதேகிக்கிட்ட மட்டும் தான் பேசுறான். விஜயகாந்த் அந்த ஜிப்பாவையும் அந்த கிழிஞ்ச பேண்ட்டையும் ஏன் போட்டுட்டு இருக்காரென்பது கூட அந்த பிளஷ்பக் மொத சீன்லேயே சொல்லிடுவார்.
விஜயகாந்த் பிளஷ்பக் சீன்ல மாமா பொண்ணா வர வைதேகி (பிரமிளா ஜோஷி) ரொம்பவே சூப்பர். அவங்க மாமா நிறத்தைவிட தான் நிறம் அதிகமா தெரியக்கூடாதுனு அவங்க உச்சி வெயிலில் நிக்கறது அப்போதேயே முறை பெண்களின் மொத்த உருவம். கூடவே வர அந்த சின்ன பையன் (டிங்கு) ஒவ்வொரு தடவை "போங்கடி நீங்களும் உங்க கல்யாணமும்" சொல்றத கேக்கும்போது #90கிட்ஸ் காகவே சொன்னது போல இருக்கு.
படத்தில் சொல்லவேண்டிய இன்னொரு மிகப்பெரிய பலம் இந்த ஆள் இன் ஆள் அழகுராஜாவும் (கௌண்டமணி) கொம்முட்டி தலையானா (செந்தில்) செய்யுற காமெடியெல்லாம் எவர் க்ரீன் சீன்ஸ். இப்போ பார்த்த கூட சிரிப்பை நிறுத்தமுடியாது. பெட்டர்மாஸ் காமெடி, அல்வா காமெடிஎல்லாம் வேற லெவல்.
இசை இளையராஜா படத்தில மொத்தம் ஆறு பாட்டு ராசாவே உன்ன... சுசிலா அம்மா பாடுற பாட்டையும் சேர்த்து எல்லாமே எவர் க்ரீன் ஹிட்ஸ். ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு எப்போ கேட்டாலும் அந்த படிக்கட்டுல விஜயகாந்த் பாடுறது நினைவுக்கு வரும். நானும் இந்த பாட்டை SPB பாடுனதா நெனச்சுட்டு இருத்தேன் ஆனால் பாடுனது P ஜெயச்சந்திரன் அவர்கள். படத்தில் வரும் எல்லா பாட்டுமே சிங்கிள் லவர் (POV) சாங்ஸ்.
இந்த ராசாத்தி உன்னை... பாட்டை MSV இசை அமைத்த சிங்கார புன்னகை பாட்டுலேர்ந்து இன்ஸ்பயர் ஆகி எடுத்து இருக்காங்க. அதை MGR கண்டுபிடிச்சு கேட்டதா கங்கை அமரன் ஒரு இன்டெர்வியூல சொல்லி இருக்கிறார். நீங்களும் கேட்டு பாருங்கள் உங்களுக்கும் புரியும்.
படத்தின் கிளைமாக்ஸ் ரொம்பவே கடினமான ஒன்று பார்க்கும் போதே மனசு கனக்கும். படத்தின் டைட்டில்க்கு ஏற்றவாறு ஒரு கேள்விக்குறியோடு கடைசியில் முடித்து இருப்பார்கள். எனக்கு படம் பார்க்கும் போது ஒரே கடுப்பு அந்த நட்ராஜ் கேரக்டர் மேல ஏற்கனவே ஒரு பெண்ணை காதலிச்சுட்டு இருக்கும் போது வைதேகிக்கு ஒரு நம்பிக்கை குடுப்பது மாதிரி வரும்.
ஒரு பெண் அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் போக கூடாதுனு சொன்ன இந்த படத்துல ஒரு ஆண் ஒரு பெண்ணுக்கு (பால்ஸ் ஹோப்) பொய்யான நம்பிக்கை கொடுப்பதும் பெரிய குற்றம் தான் என்பதை சொல்லாம விட்ருப்பாங்க. படம் பார்க்காதவர்கள் நிச்சயம் பாருங்கள் ஒரு கிளாசிக் ரொமான்ஸ் படம் youtubeல் காணக்கிடைக்கிறது.
உங்கள் நேரத்தினை செலவிட்டதற்கு நன்றி !
Karthik egan

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக