செவ்வாய், 30 ஜூன், 2020

எளிய அறிவுரைகள்


கேள்வி :
கடைப்பிடிக்க முடிந்த
எளிய அறிவுரைகள்
ஒரு"லிஸ்ட்" ப்ளீஸ்..?

பதில் :
என்னுடைய
"வாட்ஸ் அப்"க்கு வந்தது,
உங்களுக்கு
பயன்படுமான்னு
பாருங்கள்...

1.தொடர்ச்சியாக
இரண்டு முறை யாரையும்
போனில் அழைக்காதீர்கள்..
அவர்கள் முக்கிய
வேலையில் அல்லது
பேச முடியாத
சூழ்நிலையில் இருக்கலாம் !

2.திரும்ப தருகிறேன்
என்று உங்களிடம்
பணம் கடனாக
கேட்பவரிடம் ,
மனப்பூர்வமாக கேட்டுவிட்டு கொடுங்கள் .
"இது திரும்ப வருமா..
வராதா ? "என்று..!
அது உங்கள் கேரக்டரை
அவருக்கு உணர்த்தும் .
இதே போல் இரவல்
கொடுக்கும் பேனா ,புத்தகம்,
குடை போன்றவைக்கும் !

3.ஓட்டலில் சாப்பிடலாம்
என நண்பர் உட்பட யார்
அழைத்தாலும்,
"மெனு கார்டில் "
பார்த்து"காஸ்ட்லி "யாக
உள்ள எதையும் "ஆர்டர் "
செய்யாதீர்கள்..
அழைத்தவரையே
உங்கள் விருப்பப்படி
"ஆர்டர் " சொல்லுங்கள்
என வேண்டலாம்...

4.தர்மசங்கடமான
இது போன்ற
கேள்விகளை
தவிர்க்கலாம்...
"இன்னும் கல்யாணம்
ஆகலயா ? "
"குழந்தைகள்
இல்லையா ? "
"சொந்த வீடு
வாங்கவில்லையா..
கட்டவில்லையா ? "
"இன்னும் ஏன் கார்
வாங்கவில்லை ? "
இதெல்லாம் நமது
பிரச்சினை இல்லைதானே..?

5.தானியங்கி கதவை
திறக்க நேர்ந்தால்
பின்னால் வருபவர்
ஆணோ பெண்ணோ...
சிறியவரோ பெரியவரோ...
அவர்கள் வரும் வரை
மூடாமல் பிடித்திருப்பது
அவர்களை சமூகத்தில்
பொறுப்புள்ளவர்களாக
மாறச் செய்யும் !

6.மற்றவர்களின்
கருத்துக்கு மதிப்பளியுங்கள்,
மோசமாக இருந்தாலும்
"சாய்ஸில் "வைத்திருக்கலாம் !

7.அடுத்தவர்கள்
பேசும்போது
இடைமறிக்காதீர்கள்..
அவர்கள் கொட்டட்டும்..
இறுதியில்
அவர்களுக்கே நல்லது
கெட்டது தெரிந்துவிடும் !

8.யார் உதவினாலும்
பாரபட்சமின்றி  நன்றி
சொல்லுங்கள் !

9.பொதுவில்
புகழுங்கள்..இகழாதீர்கள்.
தேவையானால்
தனியாக இருக்கையில்
குறைகளை சுட்டிக்காட்டலாம் !

10.உடல் பருமனை
ஒருபோதும் கேலி
பேசாதீர்கள் !
"நீங்க ஸ்மார்ட்டாக,
கியூட்டாக இருக்கீங்க.."
என்று கூறுங்கள்..
உடல் எடை குறைக்க
அவராக கேட்டால் தவிர
நாம் அறிவுரை
வழங்கக் கூடாது .

11.யாரும் தனக்கு
"டாக்டர் அப்பாயின்மென்ட்"
இருக்கிறது போக வேண்டும்
என்றால் , உடனே என்ன
பிரச்சினை என்று
கேட்டுவிடாதீர்கள்...
அவர்களின் தனிப்பட்ட
நோய்கள் பற்றி
மற்றவர்களுக்கு
தெரியக்கூடாது என
நினைக்கலாம்..
எனவே விரைவில் நலம்
அடைவீர்கள் என்று
நம்புகிறேன் என்று
கூறலாம் .

12.நண்பர்களிடமோ,
யாரிடமோ நேரில்
சந்தித்து பேசும்போது
"செல் "லை நோண்டிக்
கொண்டிருக்காதீர்கள் !

13.கேட்டால் தவிர
அவசரப்பட்டு
அறிவுரை
வழங்காதீர்கள் !

14.யாருடைய தனிப்பட்ட
பிரச்சினையிலும்
வலியப் போய் நேரடியாக
தலையிடாதீர்கள் !

15.தெருவில் யாரையாவது
சந்திக்க நேர்ந்தால்
"ஸ்டைலு "க்காக கருப்பு
கண்ணாடி அணிந்திருந்தால்
கழற்றிவிட்டுப் பேசுங்கள்..
கண் பார்த்து பேசுதல்
நம்பிக்கைக்கு நல்லது !.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக