Kappela - கப்பேலா - சிறிய பிரார்த்தனை இடம்!!!
இந்த உலகம் இரண்டுவகையான மனிதர்களை கொண்டது. நல்லவன், கெட்டவன்.
நல்லவனுக்கும், கெட்டவனுக்குமான அடையாளங்கள் நாம் நமக்கேற்றப்படி வகுத்திருக்கிறோம்.
உதாரணம்... தாடி வைத்துக்கொண்டு தண்ணி அடித்தால் கெட்டவன், சந்தனப்பொட்டை நெற்றியில் இட்டு அமைதியாய் சிரித்துப்ப்பேசினால் நல்லவன். அதானே?
தனக்கான காரியத்தை சாதிக்க மேல் சொன்ன இரண்டு வகைகளை யார் வேண்டும் செய்வார்கள். வெளிவேஷம் போட்டு ஏமாற்றும் பேர்வழிகள் நம்மை சுற்றியுண்டு. அப்படிப்பட்டவர்கள் நடிக்கும் நடிப்பில் தோற்றுப்போவது சாதாரண மனிதர்களின் இயல்பு.
வெளித்தோற்றத்தை வைத்து எடைப்போட்டால் தோற்பது நாம்தான். பார்த்தமாத்திரத்தில், பழகிய உடன் எடைப்போடுவதை தவிர்த்து ஆராய்ந்து நிதானமாக முடிவெடுத்தால் பாதிப்பு இருக்காது.
கிராமங்களிலிருந்து நகரம் வரும் சாமானியர்கள் அதுவும் பெண்கள் எனில் உஷாராய் இருக்கவேண்டும்.
நகரத்து பஸ் ஸ்டேண்ட் அல்லது இரயில்வே ஸ்டேஷன்களில் கழுகுப்பார்வையுடன் சுற்றித்திரியும் பிம்ப்களின் வலையில் அப்பாவி ஊர் பெண்கள் சிக்குவது தொடர்கதைதான்.
தண்ணியடித்து, ரவுடித்தனம் செய்து, மொரட்டு பார்வையுடன் இருப்பனுக்குள்ளும் நேர்மை இருக்கலாம்.
சாந்தமாய், புன் சிரிப்புடன் உலவுகிறவனிடத்தில் ஆபத்தும் இருக்கலாம்.
முக்கியமாய், அருகில் இருக்கும் அன்பு புரிவதில்லை தூரத்தில் துரத்தும் துன்பமும் அறிவதில்லை.
சும்மாவா சொன்னார்கள் கண்ணால் கான்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்.
அடேய்... கதைக்கு வாய்யா... 🙄🙄🙄
கப்பேலா படம் அதைத்தான் சொல்கிறது.
நேராய் காணாமல் ராங் கால் மூலம் ஃபோனில் பேசி, நட்பாகி காதலிக்கும் ஏழை கிராமத்துப்பெண், திடீரென்று திருமணம் ஃபிக்ஸ் ஆக ஃபோன் காதலனை தேடி நகரத்துக்கு செல்கிறாள்.
காதலனின் மொபைல் தொலைந்தல்துப்போக அணுக முடியாமல் தவிக்கிறாள்.
அவளின் காதலனுக்கும், ஃபோனை எடுத்த மொரட்டு ரவுடிக்கும் எதேச்சையாக மோதல் உண்டாக, காதலன் முரடனை அடித்துவிட கோபத்தில் இவர்களை துரத்துகிறான்.
துரத்திலின் இறுதியில் என்ன நடக்கிறதென்று திரையில் காணுங்கள்!!!
கும்பளாங்கி நைட்ஸ், ஹெலன், கூடே, வைரஸ் போன்ற படங்களில் நடித்த நடிகர்கள் அன்னா பென், ரோஷன் மேத்யூ, ஸ்ரீநாத் இந்த மூன்றுப்பேரை சுற்றி நகரும் கதை.
மார்ச் மாதம் ரிலீசாகி ஹிட் அடித்திருக்கவேண்டிய நல்ல படம் கொரோனாவால் தியேட்டர்கள் மூடியதால் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.
சுஷியின் இசை, முஸ்தபாவின் முதல் இயக்கம் என கேரள கிராமங்களின் அழகை கண்முன் நிறுத்தி ஜெஸிக்காக பிரார்த்தனை செய்யவைக்கிறது இந்த கப்பாலே.
இரண்டாவது.பாதியின் இறுதியில் நம் பல்ஸை எகிறவைக்க கொஞ்சம் சினிமாத்தனம் இருந்தாலும் இந்த இன்னொரு கேரள ஜெஸியும் (முதல் ஜெஸி விண்ணை தாண்டி வருவாயா ஜெஸி 😁😁😁) நம் மனதில் நிற்கிறாள்.
கப்பாலே ( சிறிய பிரார்த்தனை கூடம் அல்லது சிலை) - நல்லவர்களை தெய்வம் நிச்சயம் ரட்சிப்பான். நம்பிக்கை வைத்தால்!!!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக